Thursday, November 29, 2012

வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 30

                                 வரலாற்றில் இன்று   
Today in History 
நவம்பர்30

  1.     1612 - பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
  2.     1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500  படையினர் எசுதோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும்  இரசியப் படைகளை வென்றனர்.
  3.     1718 - நோர்வேயின் பிரெட்ரிக்சுடன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு  இறந்தான்.
  4.     1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
  5.     1803 -  இசுபானியர்கள் உலூசியானாவைப் பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்சு இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
  6.     1806 - நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
  7.     1853 - இரசியப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
  8.     1872 -  உலகின் முதலாவது அனைத்துலகக் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்துக்கும்,
  9. சுகாட்லந்திற்கும் இடையே கிளாசுகோவில் நடந்த அந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது.
  10.     1914 - சார்லி சாப்ளினின் முதல் படமான Marking a Living வெளியானது. அந்தப் படத்தில் அவர் தமது வழக்கமான கைப்பிரம்போ மீசையோ இல்லாமலே நடித்திருந்தார்
  11.     1936 -இலண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
  12.     1939 - சோவியத்துப் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டுக் குண்டுகளை வீசீன.
  13.     1943 - இரண்டாம் உலகப் போர்: டெஃகிரானில் கூடிய அமெரிக்க  அதிபர்  பிராங்கிளின்  உரூசுவெல்ட்டு, பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்சுடன்  சர்ச்சில், இரசிய அதிபர்  சோசப்பு தாலின்  ஆகியோர்  சூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
  14.     1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3 ஆவது பொதுச் செயலராகத் தெரிவானார்.
  15.     1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடசு விடுதலை பெற்றது.
  16.     1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
  17.     1967 - சுல்பிகார் அலி பூட்டோ பாகிசுதான் மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
  18.     1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

விதவிதமான இயற்கை உணவுகள்

விதவிதமான இயற்கை உணவுகள்

• அவலில் சிறிது தண்ணீர் தெளித்து நனைத்து அதில் சிறிளவு மினகுத்தூள் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து வேக வைத்தால்  கார உணவு தயார்.
• அவலை நனைத்து அதில் தேங்காய் பூ, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்தால் இனிப்பு உணவு தயார்.
• அவலை நொறுக்கி தண்ணீரில் கலந்து, சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவல் பாயசம் செய்யலாம்.
• அவலை நொறுக்கி, தயிர், வெங்காயம், மல்லி இலை, சிறிது இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்ச் சேர்த்து  வேக வைத்தால் தயிர்ச் சாதம் தயார்.
• கேரட்டைத் துருவி, அதில், மிளகாய், சீரகத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் கேரட் பொரியல் ரெடி.
• பச்சைப்பூசணி (அ)கேரட்டை பொடிதாக்கி அதில் தயிர், சீரகத்தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் பச்சாடி தயார் ஆகிவிடும்.
• கேரட், சௌசௌ, தடியங்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரிந்து சேர்த்து வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து தயிரும் சேர்த்துக் கிளறினால் அவியல் ரெடி..

வரும் முன் காத்தால் இதயம் நன்றி சொல்லும்!

வரும் முன் காத்தால் இதயம் நன்றி சொல்லும்!

நெஞ்சு வலி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு அது மிக அதிகமாகவும், சிலருக்கு மிகக் குறைவாகவும் காணப்படும்.
நெஞ்சுவலியின் அளவைப் பொருத்து நோயின் தீவிரத்தை கணிக்க முடியாது. ஒரு சிலரோ ஒன்றுமே பிரச்னை இல்லாதபோதும் அதிகமான நெஞ்சுவலி உணருவார்கள். சிலருக்கு பிரச்னை பெரிதாகவும் அறிகுறிகள் மிகக் குறைவாகவும் இருக்கும். நீங்கள் கூறும் அறிகுறிகளைப் பொருத்துத்தான் மருத்துவர் அதற்கான பரிசோதனைகளை பரிந்துரைப்பார்.
உங்கள் மருத்துவர் நோய் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். அவர் கேட்காத போதும் நீங்கள் உணரும் வலியினை துல்லியமாக கணித்து அவரிடம் விவரிக்க வேண்டும். அதாவது நெஞ்சு வலி ஒரே இடத்தில் மட்டும் உள்ளதா? ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகின்றதா? எந்த நேரங்களில் இருக்கிறது? ஓய்வெடுத்தால் சரியாகிவிடுகிறதா (அ) மாறுபடுகிறதா? மிதமாக வலிக்கிறதா அல்லது தீவிரமாக தொடர்ந்து வலிக்கிறதா? என்ற கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும்.

மார்பு வலி ஏற்படக் காரணம் என்ன? பொதுவாக ஒவ்வொரு இதய நோய்க்கும் ஒவ்வொரு விதமான மாறுபட்ட அறிகுறிகள் தோன்றும். சுத்தமான இரத்தம் இதயத்திற்கு வருவது தடைபடுவதால் இதயத்தசைகள் பகுதியாகவோ (அ) முழுவதுமாகவோ இயங்காததால் மாரடைப்பு ஏற்படுகிறது. தீவிரமான நெஞ்சு வலி, உயர் இரத்த அழுத்தம், மேலும் வலி இடது தோள் மற்றும் கை, தாடை, பற்கள் போன்றவற்றுக்கும் பரவுதல் ஆகியவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.
÷ஆண்களுக்கு மார்புக்கு நடுவில் பாரம் மற்றும் அழுத்தத்தை உணர முடியும். அதேபோல் பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு விட முடியாமல் திணறுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம், தலைவலி ஆகியவை அனைத்தும் ஏற்பட்டு அசெüகரியத்தை உணருவார்கள்.

இதய நோயின் வகைகள்: "ஆஞ்சைனா பெக்டோரிஸ்' என்ற இதய நோய், இதயத்துக்கு வரும் ஆக்ஸிஜன் தற்காலிகமாக தடைபட்டு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் ஏற்படுகிறது. உடற்பயிற்சிக்குப் பின் நெஞ்சு வலி ஏற்படுவது,
மேலும் மன அழுத்தத்தின் போது மூச்சுத் திணறல், இதய அழுத்தம், மற்றும் பாரமாக இருப்பது, தலைவலி, நெஞ்செரிச்சல், அதிகம் வியர்த்து கொட்டுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதயத்தின் இரத்த ஓட்டம் தடைபடுவதால் உருவாகும் தொடர் நெஞ்சு வலி காரணமாக "வேசோஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா' எனும் இதய நோய் ஏற்படுகிறது. இது முக்கியமாக இரவில் ஏற்பட்டு தூங்க முடியாமல் செய்துவிடும்.
÷மேல்கூறிய அறிகுறிகளை கேட்டறிந்த மருத்துவர் மேலும் சில உடல் பரிசோதனைகள் செய்த பிறகு இதய நோயை உறுதிப்படுத்துவார்.
÷அதாவது முதலில் நோயாளியின் உதடு மற்றும் நகங்களில் நீல நிற மாற்றம் தோன்றினால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாகியிருக்கும். மேலும் தொடும்போது உடல் குளிர்ந்தோ, சூடாகவோ இருக்கிறதா என்று பார்ப்பார். மேலும் கால்மூட்டுகளில் வீக்கம் இருந்தால் அந்த இடங்களில் சரியான இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கலாம். நாடித்துடிப்பில் மாற்றம் உள்ளதா என்றெல்லாம் பரிசோதிப்பார்.
÷மேலும் மருத்துவரால் தனது ஸ்டெதஸ்கோப்பின் மூலம் இதயத்தின் துடிப்பு மற்றும் ரிதம் வைத்து எந்த வகையான இதய நோய் என்பதைக் கண்டறிய முடியும். இதயத்துடிப்பு வேகமாக உள்ளதா அல்லது மெதுவாக தடைபட்டுக் கேட்கிறதா, இடைவெளி சரியாக இருக்கிறதா என்பதை வைத்து நோய் இதயத்தின் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதாவது இதயத் தசைகளிலா அல்லது இரத்தக் குழாய்களிலா என்பதைக் கூற முடியும்.

இதய இரத்த ஓட்டம் மூலம்...பொதுவாக இதயத்தில் இரத்த ஓட்டம் சத்தமில்லாமல் இருக்கும். ஆனால் அது ஷ் ஷ்........ என்ற சத்தத்துடன் அடங்காமல் இரைச்சல் அதிகமாக இருந்தால் இரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டு இரத்தம் இதயத்துக்கு வராமல் பின்னோக்கிப் போகிறது என்று கணிக்கலாம். காரணம் இதயம் சுருங்கும்போது இரத்த பரிமாற்றம் இடது ஏட்ரியம் மற்றும் கீழறைக்குமிடையே சரிவர நடைபெறவில்லை எனக் கொள்ளலாம். இதய ஓலி முறையற்றும், வலியுடனும் இருந்தால் தமனிகளில் கடினமான பிளேக் எனும் கொழுப்பு அடைபட்டிருப்பதாகக் கொள்ள வேண்டும்.
மேலே கூறிய சோதனைகளைப் பொருத்து மருத்துவர் அதற்கேற்ற பரிசோதனைகளை பரிந்துரைப்பார். பெரும்பாலானவை ஊசி துளைக்காதவை. அதாவது ஊசி துளைக்காத பரிசோதனைகள் } வலி மற்றும் அபாயமற்றது. உஇஏஞ, 3ஈஇஇஎ (ஆஞ்சியோ கார்ட்டோகிராம்) போன்ற சோதனைகளுக்கு ஆக்ஸிமெட் மருத்துவமனையில் தங்கும் அவசியமில்லை. தற்காப்பு காரணமாக இதுபோல் சோதனைகளை நோய்வருமுன் செய்து நாம் நன்றாக இருக்கிறோமா என்று தெரிந்து கொள்வது நல்லது.
÷உலக இதய தினத்தை (செப்.29) முன்னிட்டு ஆக்ஸிமெட் மருத்துவமனையில் இதய மருத்துவப் பரிசோதனைகளை முன்பதிவு செய்யும் முதல் 500 நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும்.
இந்த சலுகை குறுகிய காலம் மட்டுமே. முன்பதிவு செய்யவும், மேலும் விவரங்கள் அறியவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

ஆக்ஸிமெட் மருத்துவமனை,

இந்த பகுதியில் மேலும்

வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 29

                            வரலாற்றில் இன்று   
Today in History 
நவம்பர்
29


  1.     1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
  2.     1830 - போலந்தில் இரசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
  3.     1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்சு நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
  4.     1877 - தோமசு அல்வா எடிசன்  ஒலிவரைவி (போனோகிராஃப்) என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
  5.     1915 - கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
  6.     1922 -அவார்டு கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டார்.
  7.     1929 - அமெரிக்க கடற் படையைச் சேர்ந்த அட்மிரல் ரிச்சர்ட் பைர்ட், பெர்ன்ட் பால்கன் எனும் விமானியுடன் முதன் முதலாகத் தென் துருவத்தை விமானம் மூலம் கடந்து சாதனை படைத்தார்.
  8.     1945 - யூகொசுலாவிய சமசுட்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
  9.     1947 - பாலசுதீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
  10.     1948 - இந்தியாவில் 'தீண்டாமை ஒழிப்புச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது.
  11.     1950 - வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
  12.     1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லசு 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
  13.     1982 - ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிசுதானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
  14.     2006 - அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய  சாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிசுதான் வெற்றிகரமாக நடத்தியது

Wednesday, November 28, 2012

வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 28

 வரலாற்றில் இன்று    Today in History  நவம்பர் 28



  1.    1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
  2.     1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
  3.     1821 - பனாமா இசுபெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
  4.     1843 - அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
  5.     1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
  6.     1905 - ஐரிசு தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
  7.     1912 - அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  8.     1918 - புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
  9.     1922 - வானில் வண்ணப் புகையைப் கொண்டு எழுத்துக்களை உருவாக்கும் கலை முதன் முறையாகச் செய்து காட்டப்பட்டது. Cyril Turner கண்டுபிடித்த அந்த முறை வர்த்தக ரீதியில் பயன்படத் தொடங்கியது.
  10.     1943 - இரண்டாம் உலகப் போர்: செர்மனியையும், சப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க சனாதிபதி பிராங்கிளின் உரூசுவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்சுடன் சேர்ச்சில், இரசிய அதிபர்  சோசப் தாலின் ஆகிய மூவரும் டெஃக்ஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
  11.     1948 - உடனடியாக  ஒளிப்படம் எடுத்துக் கொடுக்கும் Polaroid Camera முதன் முதலாக பா
  12. சுட்டன் நகரில் விற்பனைக்கு வந்தது.
  13.     1958 - சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
  14.     1960 - மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
  15.     1964 - நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
  16.     1967 - சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
  17.     1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  18.     1989 - பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிசுட் கட்சி அறிவித்தது.
  19.     1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
  20.     1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
  21.     1991 - தெற்கு ஒசேத்தியா  சியார்சியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  22.     1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
  23.     2006 - நாசாவின் நியூ அரைசன்ஸகு தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது

Thursday, November 22, 2012

வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 23

வரலாற்றில் இன்று   
Today in History 
நவம்பர் 23

  1.     800 - பாப்பரசர் மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் உரோம் வந்து சேர்ந்தான்.
  2.     1248 - காசுடிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.
  3.     1499 - இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக்கு இலண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
  4.     1889 - Juke Box எனப்படும் இசைத்தட்டு இயந்திரத்தைப் முதன் முதலில் கண்டுபிடித்து நிறுவிக் காட்டியவர் லூயிசு கிளாசு. சான்பிரான்சிசுகோவில் நிகழ்ந்தது
  5.     1890 - நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்கெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  6.     1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.
  7.     1955 - கொக்கோசு தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆசுதிரேலியாவுக்கு கைமாறியது.
  8.     1971 - மக்கள் சீனக் குடியரசின்  சார்பாளர்திகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
  9.     1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிசு குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
  10.     1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
  11.     1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
  12.     1998 - கம்போடியத் தலைவர் ஃகூன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம்இரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
  13.     2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து  சியார்சிய அதிபர் எடுவார்டு  செவர்நாட்செ பதவி விலகினார்.
  14.     2005 - லைபீரியாவின் தலைவராக எலென் சான்சன்-சேர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
  15.     2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது

வரலாற்றில் இன்று Today in History 22 / 11

வரலாற்றில் இன்று    Today in History  
நவம்பர் 22
•    1574 - சிலியின் சூவான் பெர்னாண்டசு தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
•    1908 - அல்பேனிய எழுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
•    1922 - துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
•    1925 - காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு  மாநில மாநாட்டிலிருந்து பெரியார் வெளியேறிய நாள்
•    1935 - பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமான அஞ்சல்களை வழங்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 அஞ்சல்களுடன் மணிலாவை அடைந்தது.)
•    1942 - இரண்டாம் உலகப் போர்:  செர்மனிய த் தளபதி பிரீட்றிக் பவுலசு, இசுடாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக  இட்லருக்கு த் தொலை வரி மூலம் செய்தி அனுப்பினான்.
•    1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூசுவெல்ட்டு, பிரித்தானியப் பிரதமர் வின்ஸசுடன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
•    1943 - லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
•     1956 - பதினாறாவது ஒலிம்பிக் போட்டிகள் ஆசுதிரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்கியது.
•    1963 - அமெரிக்க  நாட்டடுத் தலைவர்  சான் எப். கென்னடி கொல்லப்பட் அதே நாளில் டெக்சாஸசு மாநில ஆளுநர் " சான் கொனலி" படுகாயமடைந்தார். உதவி-த்தலை வர் (இ) லிண்டன்  சான்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.
•    1968 - மதராசு என்றிருந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ் நாடு என்று மாற்ற  மக்களவை ஏற்பு  அளித்தது
•    1974 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
•    1975 - பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து சூவான்  கார்லொசுஇசுபெயின் மன்னனானார்.
•    1986 - உலக   மிகு எடை  குத்துச்சண்டைப்போட்டியில் மைக் டைசன், டிரெவர் பெர்டிக் என்பவரை வீழ்த்தி விருதைப் பெற்றார்.
•    1990 - மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
•    2002 - நைசீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
•    2003 -  சியார்சியாவில் அதிபர் எடுவார்டு செவர்நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
•    2005 -  செர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
•    2005 - எக்சு பாக்சு 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
•    2007 - இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.


Wednesday, November 21, 2012

வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 21

வரலாற்றில் இன்று   
Today in History 
நவம்பர்21
  1.     1272 - மூன்றாம்என்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்
  2.     1783 - பாரிசில் Francois Pilatre de Rosier என்பவரும் Marquisd Arlandes என்பவரும் வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனில் முதன்முதலாக பறந்து காட்டினார்கள்.
  3.     1789 - வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
  4.     1791 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
  5.     1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமசு எடிசன் அறிவித்தார்.
  6.     1894 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை சப்பான் கைப்பற்றியது.
  7.     1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்சுடைன் வெளியிட்டார்.
  8.     1920 - தப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிசு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  9.     1942 - அலாசுகா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
  10.     1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "செய்ஃகிந்து' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
  11.     1962 - சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
  12.     1963 - பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.
  13.     1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
  14.     1969 - ஓக்கினாவா தீவை 1972 இல் சப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும்சப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
  15.     1971 - வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாகினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிசுதான் படைகளைத் தோற்கடித்தன.
  16.     1990 - புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
  17.     1990 - மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
  18.     1995 -பிரான்சு நான்காவது முறையாக நிலத்தடி அணுவெடிச் சோதனையை நடத்தியது

Tuesday, November 20, 2012

தினமலர் சிரிப்புகள்




வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 20

வரலாற்றில் இன்று   
Today in History  நவம்பர் 20

  1.     284 -  தயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.
  2.     1194 - இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் என்றியால் கைப்பற்றப்பட்டது.
  3.     1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சு நார்வா என்ற இடத்தில்இரசியாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
  4.     1906 - ரோல்சு இராய்சு என்பது விலையுயர்ந்த  மகிழந்து(கார்). ரோல்சு என்பவரும்இராய்சு என்பவரும் கூட்டாக இணைந்து ரோல்சு இராய்சு நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
  5.     1916 - நீதிக்கட்சி - தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றிய நாள்
  6.     1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  7.     1923 - செர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
  8.     1933- தந்தை பெரியார் "புரட்சி" என்ற வார ஏட்டைத் தொடங்கிய நாள் (நவ.7 என்றும் சொல்லுவர்)
  9.     1940 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, உருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
  10.     1947 - இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.
  11.     1963 - காமராசர் 1963 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  12.     1969 - கால்பந்து உலகின் மன்னன் என்று போற்றப்படும் Pele ஆயிரமாவது கோலைப் புகுத்தினார்.
  13.     1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் சனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விசேவீர விடுதலை செய்யப்பட்டார்.
  14.     1979 - சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முசுலிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
  15.     1985 - மைக்ரொசொஃப்ட்டின் விண்டோசு 1.0 வெளியிடப்பட்டது.
  16.     1988 -இராசீவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
  17.     1994 - அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
  18.     1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது

Monday, November 19, 2012

வரலாற்றில் இன்று Today in History நவம்பர் 19

வரலாற்றில் இன்று   
Today in History 
நவம்பர்19

  1.     1493 - கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் யூவான் பட்டீசுடா எனப் பெயர் சூட்டினார்.
  2.     1816 - வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  3.     1850 - முதன் முறையாக   வாழ்நாள் காப்பீடு(லைப் இன்சூரன்சு) ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டது.
  4.     1881 - உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
  5.     1923 - நீதிக்கட்சியின் 2 ஆவது அமைச்சரவை பனகல் அரசர் திரு. பி. இராமராய நிங்கார் தலைமையில் பதவியேற்ற நாள்
  6.     1941 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆசுதிரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 அவுசுதிரேலியக் கடற்படையினரும் 77 நாசி செர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.
  7.     1946 - ஆப்கானிசுதான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
  8.     1969 - அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்சு கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
  9.     1969 - பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.
  10.     1977 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இசுரேல் சென்றடைந்தார். இசுரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
  11.     1984 - இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  12.     1985 - பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் செனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
  13.     1991 - தமிழீழக் காவல்துறை நிறுவப்பட்டது.
  14.     1994 - தென் ஆப்பிரிக்காவின் சன்சிட்டியில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.
  15.     1999 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்சோ விண்கலத்தை ஏவியது
  16.     2005 - மகிந்த  இராசபக்ச இலங்கையின் 5 ஆவது நிறைவேற்று  குடியரசுத்தலைவராகப் பதவியேற்றார்

Sunday, November 18, 2012

அறிவியல் ஆயிரம் - தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்

உயர்மிகு உணவுகள்
"சூப்பர் ஸ்டார் உணவுகள்'

அக்ரோட், பாதாம் பருப்பு, நிலக்கடலை, முந்திரிப்பருப்பு, பிஸ்தா ஆகியவை கொட்டை வகை உணவுகள். இவை "அதிக ஆற்றல் உணவுகள்' என கருதப்பட்டன. எனவே இவற்றை தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் கருத்து நிலவியது.தற்போது நடந்த ஆராய்ச்சிகள் கொட்டை வகைகளுக்கு "சூப்பர் ஸ்டார்' அந்தஸ்து வழங்கி உள்ளன. நாள்தோறும் 20 முதல் 30 கிராம் கொட்டை வகைகளைச் சேர்ப்பது இருதயத்தைக் காக்குகிறது. கொட்டை வகைகளில் கொழுப்பு மிகுதி என்றாலும், அந்த கொழுப்பு உடலுக்கு நன்மை செய்யும் கரைசலற்ற கொழுப்பு அமிலங்களாக உள்ளன.நல்ல கொலஸ்டிராலை வலுப்படுத்தவும், தீமை விளைவிக்கும் கொலஸ்டிரால்களைக் குறைக்கவும் கொட்டை வகைகள் உதவுகின்றன. ஆனால் வறுத்த மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்ட கொட்டை வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

தகவல் சுரங்கம்

சாதிகள் இல்லாத சமயம்

சீக்கிய சமயத்தில், ஜாதிகள் எதுவும் இல்லை. "அனைவரும் ஒரே இனம்' என்னும் கருத்து உள்ளது.துவக்க காலத்தில் குருநானக் சீக்கிய சமயத்தை உருவாக்கிய போது, எந்த ஜாதியில் இருந்து சீக்கிய சமயத்திற்குள் வந்தார்களோ, அந்த ஜாதியின் அடையாளத்துடன் சீக்கிய சமயத்தில் இருந்தனர். 10வது குருவான குரு கோவிந்த் சிங், ஜாதி வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்னும் நோக்கில், சீக்கிய ஆண்கள் அனைவரும் தங்கள் ஜாதியின் குடும்பப் பெயரை கைவிட்டு, தங்கள் பெயருக்குப் பின்னால் "சிங்' என்பதை மட்டும் சேர்க்க வேண்டும் என்னும் நடைமுறையை உருவாக்கினார்.

"சிங்கம்' என்னும் பொருளில் தான் "சிங்' என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தனது பெயரை முதலில் கோவிந்த் ராய் என்பதில் இருந்து, கோவிந்த் சிங் என மாற்றினார். பெண்களின் பெயருக்கு பின்னால் இளவரசி என்னும் அர்த்தத்தில் "கவுர்' என்னும் பெயர் சேர்க்கப்பட்டது. இவ்வாறு சீக்கிய சமயம், ஜாதிகள் இல்லாத சமயமாக உருவானது.

வரலாற்றில் இன்று 18/11 Today in History

வரலாற்றில் இன்று    
Today in History
நவம்பர்
18

  1.     1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்சுடன் என்பவரால் வெளியிடப்படட்து.
  2.     1493 - கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
  3.     1626 -உரோம் நகரில் உலகப் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்சு பாசுலிகா        ( St. Peters Basilica) எனப்படும் செயின்ட் பீட்டர்  தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
  4.     1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
  5.     1863 - டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிசுடியன் சுலெசவிக்கு நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல்  செர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
  6.     1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
  7.     1903 - பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
  8.     1918 -இலாத்வியா  இரசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  9.     1926 -  சியார்சு  பெர்னாட்சா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
  10.     1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

Saturday, November 17, 2012

வேண்டியவை மூன்று எவை?

வேண்டியவை மூன்று எவை?

* இருக்க வேண்டியது மூன்று தூய்மை, நீதி, நேர்மை
* அடக்க வேண்டிய மூன்று நாக்கு, நடத்தை, கோபம்
* பெற வேண்டிய மூன்று தைரியம், அன்பு, மென்மை
* கொடுக்க வேண்டிய மூன்று ஈதல், ஆறுதல், பாராட்டு
* அடைய வேண்டிய மூன்று ஆன்மசுத்தம், முனைவு, மகிழ்வு
* தவிர்க்க வேண்டிய மூன்று இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை
* நேசிக்க வேண்டிய மூன்று அறிவு, கற்பு, மாசின்மை

40அகவை ஆகி விட்டதா உங்களுக்கு?

40 வயதாகி விட்டதா உங்களுக்கு?

First Published : 17 November 2012 04:47 PM IST
*  பாலை மறந்துவிடுங்கள்.
*  வாகனங்களை தவிருங்கள்; நடந்து செல்லுங்கள்.
*  லிஃப்டை உதறுங்கள்; படிகளில் ஏறுங்கள்.
*  உடல் உழைப்பை அதிகப்படுத்த வேண்டும்.
*  சிகரெட்டை தொடவே கூடாது.
*  மாமிச உணவை உண்ணவே வேண்டாம்.
*  சோயா பீன்ûஸ தாராளமாக சேர்க்கவும்.
*  அளவாய் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.
*  பழங்களை, காய்கறிகளை உணவாக்கிடுங்கள்.
*  உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.
 *  நல்ல உணவு, சீரான உடற்பயிற்சி, பருமனில்லா உடல் அமைப்பு இவை அனைத்தும் இதய நோய்களைத் தடுக்கும்.

அழகே... அழகே...!

அழகே... அழகே...!

* இரவு படுக்கும் முன்பு பால் ஏட்டை முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் சருமம் பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.
* குளிப்பதற்கு முன்னால் எலுமிச்சை சாறை ஒரு பஞ்சில் நனைத்துக் கன்னத்தில் தேய்த்தால் பருக்கள் மறையும்.
* செம்பருத்திப் பூவின் சாறையும், நல்லெண்ணெயையும் சம அளவில் கலந்து கொண்டு ஓர் அகலமான பாத்திரத்தில் விட்டு தண்ணீர் வற்றும் வரை காய்ச்சி பின்னர் அத்தைலத்தை கூந்தலுக்கு உபயோகித்தால் கூந்தல் செழித்து நீண்டு வளரும்.
* ரோஜாப் பூவின் இதழ்களை சந்தனம் சேர்த்து அரைத்து, அதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழுவி வந்தால் சில வாரங்களிலேயே முகத்தில் உள்ள கறுமை நிறம் மறைந்து பட்டுப் போல மாறிவிடும்.
* தேங்காய் எண்ணெயில் காய்ந்த வேப்பம் பூவைப் போட்டு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

தெரிந்து கொள்ளுங்கள்...

தெரிந்து கொள்ளுங்கள்...

தெரியுமா ஜூடோ?
பண்டைக் காலத்தில் ஜப்பானியர்கள் தற்காப்புக்குப் பயன்படுத்திவந்த சண்டைக்கலை  "ஜூஜூட்சு' என்பதாகும். இந்தக் கலை ஜிகாரோ கானு என்பவரால் சற்று மாறுபட்ட நுணுக்கங்களுடன் "ஜூடோ' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜூடோ என்ற சொல்லின் பொருள்: சாதுவான வழி.

கராத்தே
இந்தியாவில் வாழ்ந்த புத்த பிட்சுகள் விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளக் கற்ற கலையே கராத்தே. இக்கலை, இந்தியாவில் இருந்துதான் ஜப்பானுக்குச் சென்றது என்பர். கராத்தே என்ற ஜப்பானிய சொல்லிற்கு "வெறும் கை' என்று பொருள்.
- டி.எஸ்.பாலு, சென்னை.

நண்டு
*   உலகத்தில் ஏறக்குறைய 2,000 வகை நண்டுகள் காணப்படுகின்றன.
*   நண்டுகளில் 15 வகையான நண்டுகளை மனிதர்கள் சாப்பிடுகின்றனர்.
*   இந்தியாவில் 700 வகையான நண்டுகள் உள்ளன.
*   தலாமிட்டா கிரேனேட்டா என்னும் நண்டு
5 லட்சம் வரை முட்டையிடும்.
*   பச்சை நண்டு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை
முட்டையிடும்.
*   சாதாரண நண்டு 1 லட்சம் முதல் 4 லட்சம் வரை முட்டையிடும்.
*   100 கிராம் நண்டுக் கறியில் 16.9 சதவிகிதம் புரதமும் 2.9 சதவிகிதம் கொழுப்பும் 1.7 சதவிகிதம் சாம்பல் சத்தும் 1.3 சதவிகிதம் மாவுச்சத்தும் கிடைக்கின்றன.
*   நண்டுக் கறியில் மனிதர்களுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களான வைட்டமின் பி1, பி2, பி6 போன்றவை கிடைக்கின்றன.
*   சிறிய நண்டுகளைப் பெரிய நண்டுகள் சாப்பிட்டுவிடும்.
- சி.செபாஸ்டியன் ஜெயராஜ்,
கும்பகோணம்.

செல்லப் பறவை மயில்!
இந்தியாவின் தேசியப் பறவை மயில். பறவை இனங்களில் வண்ண ரசக் கலவையான படைப்பு. மயில்களில் நீல நிறம், பச்சை நிறம் என இருவகை உண்டு.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள மயில்கள் நீல நிற வகையைச் சேர்ந்தவை. மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்பவை பச்சை நிற வகையைச் சேர்ந்தவை. இணை மயில்கள் விலை ரூபாய் 28 ஆயிரமும் அதற்கு மேலும்.
இங்கிலாந்தில் நாரிச் நகருக்கு அருகில் ஆயிரம் மயில்களைக் கொண்ட பண்ணை உள்ளது. ஐரோப்பாவில் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பறவை மயில்.
- "ஆச்சா', செவல் குளம்.

20-ஆம் நூற்றாண்டு மேதைகள்!

1.    சுரங்கத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து சுரங்கம் வெட்டிய ஒருவர், பகலெல்லாம் ஆடு மேய்த்துவிட்டு இரவெல்லாம் பள்ளிகளில் படித்து அறிவைத் தேடிக் கொண்ட ஒருவர் - ரஷ்யாவின் பிரதமராக இருந்த குருசேவ்.
2.   புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஐக், ஒரு காலத்தில் கூடையில் காய்கறிகளைத் தூக்கிச் சுமந்து விற்றவர்.
3.   எட்டு வயதில் ஏர் பிடித்து, பதினான்கு வயதில் திருமணம் செய்து பள்ளி ஆசிரியராக வர நினைத்து முடியாமல் போய் சீனப் பிரதமரானார் மா சே துங்.
4.   செல்வத்திலே பிறந்து, சிறைகளில் பல்லாண்டைக் கழித்து ஈடு இணையற்ற புகழும் பெருமையும் பெற்றவர் நேரு.
- சி.இராஜேஸ்வரி, தூத்துக்குடி.

அழியாத ஓவியம்
*  லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ் பெற்ற ஓவியம் மோனாலிஸô ஆகும்.
*   நிகரற்ற அழகும் செல்வமும் ஒருங்கே இணையப் பெற்ற "லிஸாகொர்டினி' என்ற பெண்ணின் உருவம்தான், "மோனாலிஸô' ஆகும். பிளாரென்ஸ் நாட்டைச் சேர்ந்த அவள் கணவனின் பெயர் மெஸ்ஸா கியோ கோண்டா என்பது ஆகும்.
*   தனது 21-வது வயதில் டாவின்ஸி படம் வரைவதற்காக லிஸா உட்கார்ந்திருந்தாள். ஆனால் ஓவியத்தை டாவின்ஸி, வரைந்து முடிப்பதற்குள் ஆறுவருடங்கள் ஆகிவிட்டன.
*   மோனாலிஸா படத்தைப் பார்த்தால் அதில் அவள் கறுப்பு உடை அணிந்திருப்பதும் மோதிரம் அணியாமல் இருப்பதும் தெரியும். அதற்குக் காரணம் யார் தெரியுமா?
அந்தப்படம் வரைய ஆரம்பிப்பதற்குச் சில தினங்களுக்கு முன்பு லிஸா கொர்டினியின் குழந்தை இறந்தது. அதற்குத் துக்கம் அனுஷ்டிக்கத்தான் அவள் அவ்வாறு கறுப்பு உடையில் காணப்படுகிறாள். அந்தப்படம் வரைய ஆறு வருடங்கள் ஆனாலும் முதலில் இருந்த சூழ்நிலையிலேயே டாவின்சி வரைந்திருக்கிறார்.
*   மோனாலிஸா ஓவியத்தை லியனார்டோ டாவின்ஸி அழியாப் பொக்கிஷம் என்றே கருதி வந்தார். அவர் அதை வரைந்த பின்னர், ஒருவருக்கும் கொடுக்கவில்லை.
*   பின்னர் அந்த ஓவியத்தை பிரான்ஸின் மன்னருக்கு 12 ஆயிரம் பிராங்குகளுக்கு விற்றார் டாவின்ஸி.
தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.

வரலாறு படைத்தவர்களின் வரலாற்றைப் படியுங்கள்!
*  குதிரை லாயத்தின் மேற்பார்வையாளரின் மகன்?
வில்லியம் ஷேக்ஸ்பியர்.
*  வறுமையில் வாழ்ந்த புத்தக வியாபாரியின் மகன்?
சாமுவேல் ஜான்சன் (ஆங்கில அகராதியின் ஆசிரியர்).
*  வீட்டு வேலை செய்தவரின் மகன்?
சார்லி சாப்ளின்.
*  படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையின் மகன்?
தாமஸ் ஆல்வா எடிசன்.
*  மெழுகுவர்த்தி  வியாபாரியின் மகன்?
பெஞ்சமின் பிராங்க்ளின்.
*  கட்டிடத்  தொழிலாளியின் மகன்?
ஹிட்லர்
*  செருப்பு தைத்த தொழிலாளியின் மகன்?
ஆபிரகாம் லிங்கன்.
- அ.நெüபல் ஹபீப், நெல்லை.

பிராணிகளில் பச்சோந்தி மட்டுமே நிறம் மாறும் தன்மை உடையது என்று நம்பினால் அது தவறான எண்ணமாகும். ஆக்டோபஸ் கடல் பிராணியாலும் தனது நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும். இந்தப் பிராணியின் கடினத் தோலில் பல வண்ணங்களைக் கொண்ட பைகள் உள்ளன. இந்த வண்ணங்களைத் தேவையான சமயங்களில் தனது நரம்புகளின் மூலம் உடலில் பல பகுதிகளுக்கும் அனுப்பி சிவப்பாகவோ நீல நிறமாகவோ பர்ப்பிள், பிரெüவுன் வண்ணங்களிலோ அல்லது வரிக்குதிரைகளைப் போல் பட்டை பட்டையாகவோ தன் உடலை நிறம் மாற்றிக் கொள்கிறது இந்த உயிரினம்.
- ஏகே. நாசர், டி.ஆர். பட்டினம்.

18 செய்திகள்
*     கீதையின் அத்தியாயங்கள் 18.
*     மகாபாரதப் பருவங்கள் 18.
*     கலம்பகத்தின் உறுப்புகள் 18.
*     பாரதப் போர் 18 நாள்கள் நடைபெற்றது.
*     தேவ, அசுரப் போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது.
*     சித்தர்களின் எண்ணிக்கை 18 ஆகும்.
- நெ.இராமன், சென்னை.

உலகின் தலைசிறந்த ஆசிரியை!

தட்டச்சுப்பிழையின் காரணமாக எலன் கில்லரின் ஆசிரியர் ஆன்சலிவன் ௭ ஆம் அகவையில் காலமானதாகக் குறிக்கப்பட்டுள்ளது. 70  (௧௮௬௬-௧௯௩௬) எனத் திருத்துங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

உலகின் தலைசிறந்த ஆசிரியை!

First Published : 16 November 2012 04:23 PM IST
உடல் குறைபாடுகள் எதுவும் இல்லாத ஒருவருக்குப் பாடம் புகட்டுவதே பெரிய விஷயமாகும். அதிலும் கண்பார்வை இழந்த, காது கேட்காத மாற்றுத் திறனாளி ஒருவருக்குப் பாடம் கற்பிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகும்.
அத்தகைய சவாலைத் திறம்பட எதிர்கொண்டு தன் மாணவியின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியவர் "ஆன் சலிவன்' என்ற ஆசிரியப் பெருந்தகை ஆவார்.
ஆம்! ஹெலன் கெல்லரின் வழிகாட்டியாக விளங்கிய ஆன் சலிவன்தான்!
ஆன் சலிவன் 1866-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தார்.
இவரது தந்தை ஒரு மிகப் பெரிய குடிகாரராகவும் தாயார் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்ட நோயாளியாகவும் இருந்தனர். ஆகவே, ஆன் சலிவனின் இளமைப் பருவம் மிகவும் துயரம் நிறைந்ததாக இருந்தது. தனது ஐந்தாவது வயதில் "டிரக்கோமா' என்னும் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் சிறிது சிறிதாகத் தன் பார்வையை இழந்தார்.
ஏழு வயதில் தன் தாயை இழந்த இவர், தனது தந்தை கைவிட்டதால், தனது ஐந்து வயது சகோதரன் ஒருவனுடன் ஆதரவற்றோர் விடுதி ஒன்றில் அடைக்கலம் புகுந்தார்.
ஏற்கெனவே, எலும்புருக்கி நோயால் பீடிக்கப்பட்டிருந்த அந்த இளைய சகோதரனும் இறந்து போனான்.
பாஸ்டனில் உள்ள "பெர்க்கின்சன்' என்னும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் தமது 14-வது வயதில் சேர்ந்தார். துயரங்களும் வறுமையும் வாட்டிய போதும் தனது அயராத முயற்சியினால் கல்வியைத் திறம்படக் கற்றார்.
தொண்டு நிறுவனங்களின் உதவியால் சிற்சில அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் இவருக்குப் பார்வை குறைந்த அளவு கிட்டியது. சைகை மொழியில்  வல்லுநர் ஆனார். இவர் தனது படிப்பை முடிக்கும் தருணத்தில் ஹெலன் கெல்லரின் பெற்றோர் தம் மகளுக்குக் கல்வி புகட்ட வருமாறு அழைத்தனர்.
தாழ்வு மனப்பான்மையாலும் இயலாமையாலும் மிகவும் கரடுமுரடான குணத்தைக் கொண்டிருந்த ஹெலன் கெல்லரை சமாளிப்பது பெற்றோர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. ஓர் ஆசிரியையின் கண்காணிப்பில் இருந்தால் ஓரளவு நல்ல பழக்கவழக்கங்களையாவது ஹெலன் கற்றுக் கொள்வார் என எண்ணித்தான் ஆன் சலிவனை அணுகினர்.
ஆக்ரோஷமும் கோபமும் நிறைந்த ஹெலனை சமாளிப்பது மிகப் பெரும் போராட்டமாக இருந்தது. அளவுகடந்த பொறுமையோடும் அன்போடும் தனது மாணவியை நெறிப்படுத்தினார் ஆன்.
ஹெலனுக்கு அவர் முதலில் கற்பித்த வார்த்தை என்ன தெரியுமா? "வாட்டர்'-ஆம் தண்ணீர்தான்.
அதுவரை இத்தகைய அணுகுமுறையைத் தன் பெற்றோரிடம் கண்டிராத ஹெலன், தன் ஆசிரியரை மதிக்கத் தொடங்கினார். ஆன் சலிவன் துணையுடன் ராட்கிளிஃப் கல்லூரியில் சேர்ந்து அறிவியல், சமூகவியல் மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கற்றார்.
ஹெலன் கெல்லரின் வாழ்வில் ஒளியேற்றிய ஆன் சலிவனை ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகமும் ரூஸ்வெல்ட் நினைவு ஃபவுண்டேஷனும் பெருமைப்படுத்தின.
ஆன் சலிவன், தமது 70- ஆவது வயதில் நியூயார்க்கில் காலமானார். அவர் மறைந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும்வண்ணம், ராட்கிளிஃப் கல்லூரியில் ஒரு செயற்கை நீரூற்று அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவ்விழாவில் அஞ்சலி செலுத்த வந்த ஹெலன் கெல்லர் கூறிய வார்த்தை எது தெரியுமா? "வாட்டர்' - ஆம் தண்ணீர்.
ஹெலன் கெல்லரை நெறிப்படுத்தி வாழ்வளித்த உலகின் தலைசிறந்த ஆசிரியை ஆன் சலிவனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

முயற்சி பொன்மொழிகள்

முயற்சி பொன்மொழிகள்

  1.  முயற்சி திருவினையாக்கும்!
- தமிழ்நாடு
  2.  ஓடிச் செல்பவனுக்கு அகப்படும்!
- இந்தியா
  3.  மற்றொருவன் மூக்கினால் ஒருவன் மூச்சுவிட முடியாது!
- தாய்லாந்து
  4.  முன்னால் தாவுவதற்குச் சிறிது
பின்னால் செல்ல வேண்டும்!
 - பிரான்ஸ்
  5.  வாழ்வதன் பொருள் இடைவிடாது முயற்சி செய்தல்!
- ஜெர்மனி
  6.  முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பலில்லாத கடல் யாத்திரை போன்றது! - வேல்ஸ்
  7.  அடி மேல் அடி விழுந்தால் ஆப்புக்கட்டையும் இறங்கி விடும்!
- வேல்ஸ்
  8.  கடவுள் ஒருவனுக்குப் புதையலைக் காட்டினால், அவனேதான் அதைத் தோண்டி எடுக்க வேண்டும்!
- ùஸக்
  9.  நேரமும் ஓய்வும் இருந்தால் தவளையும் ஒரு மைல் துள்ளிச் செல்லும்! - செர்பியா
10.  சோர்வடைந்த பின்னும் ஒருவன் நெடுந்தூரம் செல்ல முடியும்!
- பிரான்ஸ்

வரலாற்றில் இன்று Today in History 17/11

வரலாற்றில் இன்று    
Today in History
நவம்பர்
17

  1.     அனைத்துலக மாணவர் நாள்
  2.     1292 -சோன் பலியல் இசுகொட்லாந்தின் அரசன் ஆனான்.
  3.     1511- இசுபெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
  4.     1558 - இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
  5.     1820 - கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
  6.     1831 - எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
  7.     1869 - சூயசுகால்வாய் அதிகாரப்பூர்வமான போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் அந்தக் கால்வாய் 160 கிலோ மீட்டர் நீளமானது
  8.     1873 - பெசுட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெசுட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
  9.     1878 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
  10.     1880 - பிரிட்டனில் இலண்டன் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக மூன்று பெண்களுக்கு  இளங்கலை(BA) பட்டம் வழங்கப்பட்டது
  11.     1903 -இரசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
  12.     1922 - முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெகமெது இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
  13.     1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
  14.     1950 - 14 ஆவது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
  15.     1970 - வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
  16.     1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
  17.     1970 - டக்லசு ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி  சுட்டி(mouse) க்கான காப்புரிமம் பெற்றார்.
  18.     2003 - ஆர்னோல்ட் இசுவார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்


Friday, November 16, 2012

வரலாற்றில் இன்று Today in History 16/11

வரலாற்றில் இன்று Today in History நவம்பர்16

    1384 - பெண்ணாக இருந்தாலும் பத்து அகவை "சாட்வீகா" என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
    1846 - இலங்கையில் விதவைகள- அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    1849 - அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி  இரசிய எழுத்தாளரான பியோதர் தசுதயெவ்சுகிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
    1896 - முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.
    1904 -யோன் பிளெமிங்குவெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
    1907 - ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46 ஆவது மாநிலமாக இணைந்தது.
    1920 - ஆசுதிரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாசு தொடங்கப்பட்டது.
    1933 - ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவைத் தொடங்கின.
    1945 - யுனெசுகோ நிறுவனம்  தொடங்கப்பட்டது.
    1965 - சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளிக் கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
    1973 - நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் சுகைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
    1988 -  ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிசுதானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ  தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1993 - பாரதப் பிரதமர் வி.பி. சிங் பிறப்பித்த மண்டல் குழு ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நாள்
    1997 - 18 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தசனநாயகப் போராட்ட வீரரான Wei Jingsheng ஐ விடுவித்தது சீனா.
    2002 - சார்சு நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது

Thursday, November 15, 2012

வரலாற்றில் இன்று 15/11 Today in History

வரலாற்றில் இன்று

Today in History  

    • 1505 - போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை த்  தொடங்கி வைத்தான்.
    • 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் சேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி சியார்சியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
    • 1889 - பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
    • 1926 - என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
    • 1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
    • 1966 -  செமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
    • 1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
    • 1971 - இண்டெல் நிறுவனம் உலகின் வணிக முறையிலான முதலாவது 4004 என்ற ஒற்றைச் சிமிழி நுண் வைனைவை(single-chip microprocessor) ஐ வெளியிட்டது.
    • 1983 - வடக்கு சைப்பிரசு துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.
    • 1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
    • 1988 - பாலத்தீன நாடு பாலத்தீன தேசியக் குழுவினால் அறிவிக்கப்பட்டது.
    • 1990 - அட்லாண்டிசு விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
    • 2000 - இந்தியாவில் சார்க்கண்ட்டு தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

Wednesday, November 14, 2012

தினமலர் சிரிப்புகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்
மதம் பிடிக்காத யானைகள்

யானைகளில் கண்டங்களைப் பொறுத்து ஆசிய யானைகள், ஆப்ரிக்க யானைகள் என இரு வகைகள் உள்ளன.

இவற்றில் ஆசிய பெண் யானைகளுக்கு, மதம் பிடிப்பதில்லை. ஆசிய ஆண் யானை சுமார் 10 வயதில் பருவமடையும். பெண் யானை 6 வயதில் பருவமடையும். பருவம் அடையும் காலங்களை ஒட்டியே ஆண் யானைக்கு மதம் பிடிக்கிறது. இனவேட்கையின் போது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அதே காலத்திலேயே ஆண் யானை களுக்கு மதம் பிடிக்கிறது. யானைகளின் கண்களுக்கும், காதுக்கும் இடையே "டெம்போரல்' என்னும் சுரப்பி உள்ளது. இதிலிருந்து எண்ணெய் போன்ற நீர் கசிவு ஏற்படும். இதை முன்கூட்டியே அறிவதன் மூலம், மதம் பிடிக்கப் போவதை அறியலாம். உடல் நலக் குறைவுற்ற யானைகளுக்கு, பெரும்பாலும் மதம் பிடிப்பதில்லை. மதம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் யானைகள் இனப்பெருக்கம் செய்யும்.

Tuesday, November 13, 2012

வரலாற்றில் இன்று 14/11 Today in History

வரலாற்றில் இன்று

Today in History  

நவம்பர்
14
    • இந்தியா: குழந்தைகள் நாள்.
    • உலக நீரிழிவு நோய் நாள்
    • 1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்
    • 1918 - செக்கொசுலவாக்கியா குடியரசாகியது.
    • 1922 -  பி.ஒ.நி./BBC எனப்படும் பிரிட்டிசு ஒலிபரப்புக் கழகத்தின்  அன்றாட ஒலிபரப்பு  தொடங்கியது.
    • 1956 -  அங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
    • 1960 - OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் சங்கம் வியன்னாவைத் தலைநகராகக் கொண்டு தொடங்கப்பட்டது.
    • 1963 - ஐசுலாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
    • 1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
    • 1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
    • 1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
    • 1990 - கிழக்கு ச் செருமனி மற்றும் மேற்கு ச் செருமனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் செருமனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
    • 1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஃகானூக்கு 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.
    • 1995 - இசுரேலியப் படைகள் சோர்டான் நகரிலிருந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறின.
    • 1996 -  அண்ணல்(டாக்டர்) அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
    •  
    • http://koodal.com/

நமக்கும் காத்திருக்கு நோபல் விருதுகள்!

நமக்கும் காத்திருக்கு நோபல் விருதுகள்!

ஆல்பிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21இல் ஸ்வீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொறியாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த வேதியியலாளர், பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.
 இவர் 1894இல் இரும்பு எஃகு ஆலை ஒன்றை வாங்கி அதைப் போர்க்கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தினார். பாலிசைட், கார்டைட் என்ற புகையற்ற வெடிபொருள்களைக் கண்டுபிடித்தார். இதில் கார்டைட் குறிப்பிடத்தக்கது. இதற்காகக் காப்புரிமையும் பெற்றார். இப்படி மொத்தம் 355 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி  பெரும் கோடீஸ்வரரானார்.
 இவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது "டைனமைட்' என்ற வெடிமருந்துதான். ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய பாறைகளை  உடைக்க, பழைய கட்டடங்களை இடிக்க மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. நாள்கள் செல்லச்செல்ல இதையே வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள்.
 நோபலின் கண்டுபிடிப்பால் அவருக்கு ஏராளமாகப் பணம் கிடைத்தாலும் அப்பாவி மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகின்றனவே என்று அவருடைய மனைவி பிரித்தான்ஸ்கி மிகவும் கவலையுற்றார். எனவே, நோபல் மீதே அவருக்கு வெறுப்பு வந்தது. அடிக்கடி அவருடன் சண்டையிட்டார். இந்த டைனமைட் தயாரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். நோபல் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. இதனால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார்.
 கணவரை விட்டுப் பிரிந்த நிலையிலும் டைனமைட் உற்பத்தியை நிறுத்துமாறு  அவருக்குத் தினமும் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். அப்போதும் நோபல் நிறுத்தவில்லை. ஒரு நாள் நோபலின் சகோதரர் விபத்தில் இறந்தார். பத்திரிகைகள் ஆல்பிரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டன. ஒரு பத்திரிகை "மரண வியாபாரி' நோபல் இறந்தார் என்றே தலைப்பிட்டிருந்தது.
 வேறொரு நகரத்தில் அந்த நேரத்தில் இருந்த நோபல் இச் செய்தியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். தன்னுடைய மனைவியின் வருத்தம், மன்றாட்டு, கோபம் அனைத்தும் எவ்வளவு உண்மையானது என்று உணர்ந்தார். ஆக்கப் பணிகளுக்காகப் பயன்பட வேண்டிய நம்முடைய கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுகிறதே என்று வேதனைப்பட்டார்.
 இனி, மனித குலத்துக்கு மிகுந்த பயனும் மகிழ்ச்சியும் அளிக்கும் வண்ணம் கண்டுபிடிப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் இலக்கியக் கர்த்தாக்களுக்கும் பொதுச் சேவகர்களுக்கும் விருதுகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்க தன்னுடைய சொத்துகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார். இதற்காக தன்னுடைய சொத்தில் 94 சதவீதத்தைச் செலவிட 1895 நவம்பர் 27-ல் உயில் எழுதிக் கையெழுத்திட்டார்.
 அவருடைய இறப்புக்குப் பிறகு முதல்முறையாக 1901இல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் உலக அமைதிக்காகப் பாடுபட்டவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 1969இல் இருந்து பொருளாதார அறிஞர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இதுவரை 10 பேர் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் இந்த நாட்டில் வசித்த வெளிநாட்டவர்களும் அடங்குவர். விவரம் வருமாறு:
1902 ரொனால்ட் ரோஸ், மருத்துவம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.
1907 ருட்யார்ட் கிப்ளிங், இலக்கியம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.
1913 ரவீந்திரநாத் தாகூர், இலக்கியம், இந்தியர்.
1930 சர். சி.வி. ராமன், இயற்பியல், இந்தியர்.
1968 ஹர்கோவிந்த கொரானா, மருத்துவம், இந்திய வம்சாவளியினர்.
1979 அன்னை தெரசா, அமைதி, இந்தியர்.
1983 எஸ். சந்திரசேகர், இயற்பியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.
1998 அமார்த்திய சென், பொருளாதாரம், இந்தியர்.
2001 வி.எஸ். நைய்பால், இலக்கியம்,  இந்திய வம்சாவளியினர்.
2009 வி. ராமகிருஷ்ணன், வேதியியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.
 நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் (1901 - 1930) 30 ஆண்டுகளில் 4 நோபல் விருதுகளைப் பெற்றுள்ளோம்.
 1930 முதல் 2012 வரை 82 ஆண்டுகளில் 6 நோபல் விருதுகளைத்தான் பெற்றுள்ளோம். இந்த எண்ணிக்கையை எவ்வாறு உயர்த்துவது?  ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம்கண்டு ஊக்குவித் தால் இது சாத்தியம்.
 இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் குர்டன், ஜப்பானைச் சேர்ந்த சின்ய யமனகா ஆகிய இருவருக்கு "ஸ்டெம் செல்' ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
  ஜான் குர்டன் பள்ளியில் படித்தபோது உயிரியல் பாடத்தில், 250 மாணவர்களில் அவர்தான் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவாராம். ஆசிரியர்கள் கேட்கும்போது, ""நான் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவேன்'' என்று நம்பிக்கையோடு பதில் அளிப்பாராம். ""மக்குப் பையனுக்கு ஆசையைப் பாருங்கள்'' என்று எல்லோரும் கேலி செய்வார்களாம்.
 ஜான் குர்டன் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஸ்டெம் செல் குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக இப்போது விளங்குகிறார். 

வரலாற்றில் இன்று : 13/11 :Today in History

வரலாற்றில் இன்று

Today in History  

நவம்பர்
13
  • 1002 - இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
  • 1665 - கணித மாமேதையான சர் ஐசக் நியூட்டன் கணிதத்தின் முக்கியக் கூறான நுண்கணிதம் (Calculus) பற்றிய  முதுன்மை விதிமுறைகளை த் தொகுத்தளித்தார்.
  • 1789 - League of Nations எனப்படும் அனைத்துலக நாடுகள் சங்கத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. 41 நாடுகளைச் சேர்ந்த 500 சார்பாளர்கள் கலந்து கொண்டனர்.
  • 1851 - வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
  • 1938 - சென்னை ஒற்றைவாடைத்  திரை யரங்கத்தில்  நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பெண்கள் மாநாட்டில் திரு. ஈ.வெ. இராமசாமி அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்ட நாள்
  • 1945 -பிரான்சின் அதிபராக டிகாலே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1970 - போலா சூறாவளி: கிழக்குப் பாகிசுதானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
  • 1971 - ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
  • 1990 - உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.
  • 1993 - தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
  • 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
  • 1995 - சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்

Monday, November 12, 2012

வரலாற்றில் இன்று : Today in History : 12/11

வரலாற்றில் இன்று

Today in History  

நவம்பர்
12
    • 764 - திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
    • 1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.
    • 1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிசுதான்) ஆப்கானிசுதானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
    • 1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
    • 1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோசு-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.
    • 1918 - ஆசுதிரியா குடியரசாகியது.
    • 1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
    • 1927 - லியோன் ட்ரொட்சுகி சோவியத் கம்யூனிசுட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  சோசப்  தாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
    • 1938 - மடகசுகாரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி  செர்மனியின் திட்டத்தை "ஃகேர்மன் கோரிங்கு" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.
    • 1941 - இரண்டாம் உலகப் போர்: செவசுதபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
    • 1948 - டோக்கியோவில் பன்னாட்டுப் போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு சப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ஆம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
    • 1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஃகேர்சு வெளியிட்டார்.
    • 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேசர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை ப் பூமிக்கு அனுப்பியது.
    • 1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் தொடங்கியது.
    • 1982 - சோவியத் கம்யூனிசுட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
    • 1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
    • 1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விசேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
    • 1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்சு-லீ அறிவித்தார்.
    • 1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • 1994 - இலங்கையின் 5ஆவது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
    • 1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்சுதானின் இல்யூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.
    • 1998 - கியோட்டோ  அறிவிப்பில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.
    • 2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா சோர்சியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

Sunday, November 11, 2012

தடைகளை வெல்ல வழி - விவேகானந்தர்

தடைகளை வெல்ல வழி - விவேகாநந்தர்


* மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள்.
* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால், இறைவனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது அதைவிட மிக நல்லதாகும்.
* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத் தன்மை குடி கொண்டிருக்கிறது, உள்ளேயும் வெளியேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வீகத் தன்மையை மலரச் செய்வதுதான் முடிவான லட்சியமாகும்.
* தெளிந்த உண்மையையும், கருத்துத் தூய்மையையும் படைக்கலனாகக் கொள்பவர்கள் எந்த தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவது உறுதி.
* இறைவன் வரம்பு கடந்த பெருமைகளை உடையவன். தூய்மையான மனத்தைப் பெறுவதுடன், இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். எப்போதும் இறைவனையே சார்ந்து நிற்பதுடன் நன்னெறியில் நின்றால் உங்களை எவராலும் வெல்ல முடியாது.
* எப்போதும் இனிமையோடும், மகிழ்ச்சியோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
- விவேகானந்தர்

வரலாற்றில் இன்று : 11/11 - Today in History

வரலாற்றில் இன்று

Today in History  

நவம்பர்
11
  • 1500 - பிரான்சின் பன்னிரண்டாம்  (உ)லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்டு மன்னனுக்கும் இடையில் நேபில்சு பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1673 - உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-லித்துவேனியாப் படைகள் ஓட்டோமான் இராணுவத்தைத் தோற்கடித்தன.
  • 1675 - குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10 ஆவது குருவானார்.
  • 1675 - லெய்ப்னிட்சு (Gottfried Leibniz) என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக த் தொகையீட்டு நுண்கணிதத்தைப் பாவித்தார்.
  • 1778 - மத்திய நியூ யோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
  • 1865 - டீசுட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குக்( கம்பனிக்குக்) கொடுத்தது.
  • 1887 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகசுட் சுபைசு, ஆல்பேர்ட் பார்சன்சு, அடொல்ஃப் ஃபிசர், சியார்சு ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1889 - வாசிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42 ஆவது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
  • 1909 - அவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
  • 1917 - பார்ப்பனர் அல்லாதார் 4 ஆவது மாநாடு விசயவாடாவில் சர்.பிட்டி. தியாகராயர் தலைமையில் நடந்த நாள்
  • 1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில்  செர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது. 1567 நாட்கள் நடைபெற்ற முதல் உலகப் போரில் மொத்தம் பத்துப் பேராயிரம் (மில்லியன்) பேர் உயிரிழந்தனர். இருபது மில்லியன் பேர் காயமடைந்னர்.
  • 1918 -  சோசப்பு பித்சூத்சுகி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
  • 1919 - இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
  • 1930 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்
  • 1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
  • 1940 - ஐக்கிய அமெரிக்காவின் மிட்வெசுட் நகரில் எதிர்பாராத சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: நாசி செர்மனி பிரான்சு மீதான தனது முற்றுகையை முடித்தது.
  • 1960 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
  • 1965 - ரொடீசியாவில் இயன் சுமித்து தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது. அந்த நாடு பின்னர் சிம்பாப்வே என்று பெயர் மாற்றம் கண்டது. 
  • 1966 - நாசா செமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
  • 1968 - மாலைத்தீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
  • 1975 - ஆசுதிரேலியப் பிரதமர் கஃப் விட்லம் தலைமையிலான அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
  • 1992 -ஆண்களை மட்டுமே பாதிரியார்களாக ஏற்று வந்த இங்கிலாந்தின் Protestant பிரிவு இன்று முதன் முதலாக ப் பெண்களையும் பாதிரியார்களாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தது.
  • 2004 - யாசர் அரபாத் இறந்து விட்டதாக ப் பாலசுதீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மகமூத் அப்பாசு தலைவரானார்.

Saturday, November 10, 2012

உணவு நஞ்சாவதை ச் சரி செய்ய எளிய வழிகள்

உணவு நஞ்சாவதை ச் சரி செய்ய எளிய வழிகள்

First Published : 07 November 2012 05:41 PM IST
தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஏராளமான இனிப்புகளும், உணவுகளும் செய்யப்படும் காலம் இது. இந்த சமயத்தில் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை உணவு விஷமாதல்தான்!
பொதுவாகவே புட் பாய்சன் ஏற்பட்டால், அதனால் வாந்தி, பேதி, வயிற்று வலி, வயிறு எரிச்சல், லேசான காய்ச்சல், தலைவலி, தசைவலி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்படும்.
இதுபோன்ற புட்பாய்சன் பிரச்னைகளை தீர்க்க எளிய வழிகள் உள்ளன.
இஞ்சி சாறு
இஞ்சி சாறினை தேனில் கலந்து உட்கொள்ளலாம். அல்லது இஞ்சியை தேனில் தொட்டு மென்று சாப்பிடலாம். அது முடியாதவர்கள் இஞ்சி கலந்த தேனீரை அருந்தலாம். இவ்வாறு செய்வதால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகச் சாறு
சீரகப் பொடி சேர்த்து சூப் குடிப்பது அல்லது சீரகத்தை நன்கு வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனை அருந்துவதால் வாந்தி நிற்கும்.
துளசிச் சாறு
துளசியை வெறுமனே எடுத்து வாயில் போட்டு மென்றால் கூட உடனடியாக அஜீரணக் கோளாறுகள் சரியாகும். புட் பாய்சன் அதிகமாக இருந்தால், துளசிச் சாறினை வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது, உணவு உண்ட பிறகு ஏற்படும் பிரச்சினையாக இருப்பின், துளிச் சாறு எடுத்து அதனை தேனுடச் சேர்த்து சாப்பிடலாம்.
எலுமிச்சை சாறு
புட் பாய்சனால் வயிற்றில் ஏற்பட்ட கிருமிகளை அழிக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உள்ளது. எனவே, எலுமிச்சை சாற்றை உப்பு கலந்து குடித்தால் வயிற்று உபாதைகள் குறையும். முடிந்தால் எலுமிச்சை கலந்து தேனீர் அருந்தலாம். மேலும், வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடனடியாக புத்துணர்ச்சி அடைய முடியும்.
புதினாச் சாறு
புதினாச் சாறு வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. புதினாச் சாறை டீயுடன் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அஜீரணக் கோளாறு அதிகமாக இருப்பவர்கள் புதினாச் சாறு எடுத்தும் குடிக்கலாம்.

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை

First Published : 10 November 2012 05:17 PM IST
தீரன் சின்னமலை தனது பதினாறாவது வயதில் ஒருநாள் குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்தார். வழியில் பணப்பையைச் சுமந்து கொண்டு வரும் தண்டல்காரன் எதிர்ப்பட்டான்.
 சின்னமலை அவனை தடுத்து நிறுத்தி,""யார் நீ?'' என்று கேட்டார்.
 தான் தண்டல்காரன் என்றும் மைசூர் அரசருக்கு வரிப்பணம் கொண்டு செல்வதாகவும் சொன்னான்.
 ""கொங்கு நாட்டு வரிப்பணத்தை மைசூர் அரசுக்கு ஏன் தர வேண்டும்? கொடு அந்தப் பணப்பையை!'' எனக் கூறி அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டார் தீரன் சின்னமலை.
 தணடல்காரன் பயந்து நடுங்கி, ""மன்னர் கேட்டால் என்ன சொல்வது?'' எனக் கெஞ்சினான்.
 ""சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையிலுள்ள "சின்னமலை' வாங்கிக் கொண்டான் என்று போய்ச்சொல்'' என்றார்.
 கந்தகமலை மீது விழுந்த நெருப்புப் பந்தங்களாக வந்த இந்த பதிலைக் கேட்டு, தண்டல்காரன் பயந்து ஓடிவிட்டான்.

அட அப்படியா!

அட அப்படியா!


Bydn

First Published : 10 November 2012 05:25 PM IST

  1. *நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் தன் உடலைச் சுருட்டிக் கொண்டு, உடலின் வெப்பத்தைக் காப்பாற்ற தலையை உடலின் உள்ளே பதித்துத் தூங்கும்.
  2. *சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணரும் சக்தி கொண்டவை.
  3. *யானை, குதிரை ஆகியவை நின்றுகொண்டே தூங்கும் பழக்கம் உடையவை.
  4. *சூரியனின் மகள் என்றழைக்கப்படும் தாவரம் பருத்தி.
  5. *ஆசுதிரேலியாவில் கங்காருவைப் போல புகழ்பெற்ற மற்ற ஒரு விலங்கு கோலாவாகும். இது தன் குட்டிகளைச் சுமந்தபடி மரத்துக்கு மரம் தாவும்.
  6. *வேப்பமரத்தின் மாற்றுப் பெயர்கள் அருட்டம், கடிப்பாறை, அருணாவதி, கோமுட்டி, பூமாரி, புயாரி மந்தமரம் ஆகியவை.
  7. *குளிர்ந்த நீரில் குளிக்கும்போது முதலில் தலையில் தண்ணீரை விட்ட பிறகு உடம்பில் நீர்விட வேண்டும்.
  8. *வெந்நீரில் குளிக்கும்போது முதலில் காலில் தண்ணீரைவிட்டு நனைத்து உடம்பு-கழுத்து-தலை எனப் படிப்படியாக மேலே ஊற்றினால் ஆரோக்கியம்.
  9. *இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர் வில்லியம் ஆர்வி என்பவராவார்.

ஊனம் என்னடா ஊனம்

ஊனம் என்னடா ஊனம்
  1. *நெப்போலியனை நீல நதிப்போரில் வென்று புகழ்பெற்ற நெல்சன் ஒரு கால் ஊனமானவர்; ஒரு கண்ணும் தெரியாது.
  2. *கண்பார்வை குறைவு, ஒரு கை முடக்கம், தந்தை குடிகாரர், தாய் மனநிலை சரியில்லாதவர். இத்தனை துயரத்தையும் மீறி கோள்களின் இயக்கம் குறித்த விதியைக் கண்டுபிடித்தார் கெப்ளர்.
  3. *எழுத்துலகில் புகழ்பெற்ற சாமர் செட்மாம் திக்கு வாய்க்காரர்.
  4. *ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் காக்காய் வலிப்பு நோய் உடையவர்.


- தினமணி  ஞாயிறு கொண்டாட்டம்

வரலாற்றில் இன்று 10/11 : Today in History

வரலாற்றில் இன்று

Today in History  

நவம்பர்
10
    • 1444 - அங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
    • 1520 - டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிசுடியான் சுவீடனை முற்றுகையிட்டபோது  ஃச்டொக்ஃகோம் நகரில் பலரைக் கொன்றான்.
    • 1674 - ஆங்கிலேய-டச்சு போர்: வெசுமின்சுடர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
    • 1887 - ஃகே(ஹே)  சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிசு லிங் என்ற தொழிலாளர் தலைவர் இலண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து த் தற்கொலை செய்து கொண்டார்.
    • 1928 - ஃகீரொ ஃகீட்டோ சப்பானின் 124வது மன்னரானார்.
    • 1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
    • 1971 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.
    • 1972 - பேர்மிங்ஃகாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.
    • 1993 - தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
    • 1999 - பாகிசுதானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாசு செரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

Friday, November 9, 2012

வரலாற்றில் இன்று : 9/11- today in history

வரலாற்றில் இன்று : 9/11

    • 1793 - கிறித்துவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
    • 1799 - பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
    • 1872 - மசாசுசெட்சு மாநிலத்தில் பொசுடன் ந்கரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.
    • 1887 - ஐக்கிய அமெரிக்கா அவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
    • 1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
    • 1921 - அல்பேர்ட் ஐன்சுடீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
    • 1927 - சீனாவுக்கே உரிய பாண்டா கரடி கண்டுபிடிக்கப்பட்டது
    • 1937 - சப்பானியப் படைகள் சீனாவின் சங்காய் நகரைக் கைப்பற்றினர்.
    • 1938 - இட்லரின் வெறியாட்டத்திற்கு பலியான யூதர்களின் எண்ணிக்கை ஆறு   பே ராயிரம் (மில்லியன்)
    • 1953 - கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
    • 1965 -பிரிட்டனில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாள்.
    • 1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
    • 1985 - சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கசுபரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
    • 1989 - பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு  செர்மனி பேர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு செர்மனிக்குள் செல்லத்  தொ டங்கினர்
    • 1990 - நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
    • 1994 - டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • 2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
    • 2005 - வீனசு எக்சுபிரசு என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்சுதானில் இருந்து ஏவப்பட்டது.