Saturday, June 29, 2013

அடிக் - கடி!

அடிக் - கடி! ''அந்தப் படத்தில் எனக்கு கனமான பாத்திரம்...!” “சுமாரா எத்தனை கிலோ இருக்கும்?”

அடிக் - கடி!

''அந்தப் படத்தில் எனக்கு கனமான பாத்திரம்...!”
“சுமாரா எத்தனை கிலோ இருக்கும்?”
====
"டைரக்டர் எப்பவும் தன் கூட ஒரு போஸ்ட்மேனை வெச்சுக்கறாரே.. ஏன்?”
"முத்திரை பதிக்கிற டைரக்டராமே... அதுக்காகத்தான்!”

-இது போன்ற கடிகளை படித்துச் சிரிக்க...

Thursday, June 27, 2013

மனிதச் சங்கிலி முறையில் 10 பேருக்குச் சிறுநீரக அறுவை

மனித ச் சங்கிலி முறையில் 10 பேருக்கு ச் சிறுநீரக அறுவை









மும்பையில், மனித சங்கிலி முறையில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு 40 மருத்துவர்கள் 3 மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
மும்பையில், 5 குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு 3 மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடத்திருப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
அதாவது, சிறுநீரகம் செயலிழந்து, மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள், சிறுநீரகத்தை தானமாகத் தரத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்களது சிறுநீரகம் உறவினருக்கு பொருத்தமானதாக இல்லை.
இந்த நிலை பல இடங்களில் நேரிடுகிறது. எனவே இதனை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் வகையில், இதுபோல சிறுநீரகம் பாதித்துள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிறுநீரகம் அளிக்க முன்வரும் உறவினர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, ஒரு மனித சங்கிலி உருவாக்கப்பட்டது.
அதாவது, ஒரு மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன் வரும் தந்தையின் சிறுநீரகம்  மகளுக்குபொருந்தாத நிலையில், இரண்டாவது நோயாளிக்கு தந்தையின் சிறுநீரகம் பொருந்தலாம். இரண்டாவது நோயாளிக்கு சிறுநீரகம் தர முன் வரும் உறவினரின் சிறுநீரகம் மற்றொரு 3வது நோயாளிக்கு பொருந்தலாம். இப்போது 3வது நோயாளிக்கு சிறுநீரகம் தர முன் வரும் உறவினரின் சிறுநீரகம், அந்த மகளுக்கு பொருந்தலாம்.
இவ்வாறு ஒரு மனிதச் சங்கிலியை உருவாக்கி 5 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் 5 பேரிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து பொருத்தி 5 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.
இது ஒரு மிகப்பெரிய தகவல் திரட்டு மூலம் பெற்ற வெற்றியாகும். இதன் மூலம், சிறுநீரகம் கிடைக்காமல் இருக்கும் பலரும் மறு வாழ்வு பெறுவார்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதை இப்படியும் பயன்படுத்தலாம்

இதை இப்படியும் பயன்படுத்தலாம்

பொதுவாக நாம் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒவ்வொரு விதமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக சோப்பு என்றால், குளிக்க ஒரு சோப்பு, சமையல் செய்த பாத்திரங்களை தேய்க்க ஒரு சோப்பு, துணிகளுக்கு ஒரு சோப்பு என மூன்று வகைகள் உள்ளன.
அதுபோல வீட்டில் ஒவ்வொரு உபயோகத்துக்கும் என இருக்கும் பொருட்களில், ஏதேனும் ஒன்று தீர்ந்து போனால், உடனடியாக வேறு ஒன்றை வாங்கி வைக்கிறோம்.
ஆனால், சில அசாதாரண சூழலில் புதிய பொருளை வாங்க முடியாமல் போகும் போது, அதற்கு மாற்றாக சில பொருட்களைப் பயன்படுத்தலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
திடீரென காலையில் வீட்டில் டூத் பேஸ்ட் இல்லாமல் போகலாம். உடனே கடைக்குப் போக முடியாமல் இருந்தால், அதற்கு மாற்றாக, பேக்கிங் சோடா பவுடரை தண்ணீரில் குழைத்து பேஸ்டாகப் பயன்படுத்தலாம். இதைக் கொண்டு பற்களை சுத்தம் செய்தால் பற்கள் பளிச்சிடும்.
இதேப்போல, இந்த பேக்கிங் சோடா பவுடரைப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.
மழைக்காலங்களில் கார்பெட்டுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க பேக்கிங் பவுடரை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
கழிவறைகளில் இருந்த வரும் துர்நாற்றத்தை உடனடியாகப் போக்க வேண்டும் எனில், பேக்கிங் பவுடர் கலந்த தண்ணீரைக் கொண்டு கழிவறைகளைக் கழுவி விடலாம்.
இது மட்டும் அல்லாமல், வீட்டில் உள்ள பாத்திரங்கள் பளபளக்க வேண்டும் என்றால், பேக்கிங் பவுடரைக் கொண்டு பாத்திரங்களைத் தேய்த்தெடுக்கலாம்.
அழுக்கடைந்த நகைகளை சுத்தம் செய்யும் போது, பேக்கிங் சோடாவுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை சேர்த்து, அதனை டூத் பிரஷ்ஷில் எடுத்து சுத்தம் செய்தால் நகைகள் பளிச்சென்று ஆகும். இதனை தங்க நகைகளுக்கும் பயன்படுத்தலாம்.
இதில்லாமல், புதிதாக இறைச்சி உணவுகளை சமைக்கத் துவங்கும் நபர்களுக்கு அதில் இருந்து வரும் நாற்றம் பிடிக்காமல் இருக்கலாம். எனவே, இறைச்சியை சமைக்கும் முன்பு, அதனை சில நிமிடங்கள் பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் முக்கி வைத்து சமைக்கலாம். இதனால் நாற்றம் கட்டுப்படும். உணவு பொருள் எந்த வகையிலும் பாதிக்காது.
அழகான பீங்கான் அல்லது பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களில் ஏதேனும் கரை படிந்தால், அதன் மீது பேக்கிங் பவுடரை தண்ணீரில் குழைத்து பேஸ்ட்டாக்கி பூசி சில நிமிடங்கள் விட்டு பிறகு தேய்த்து கழுவினால் கரை போய்விடும்.

இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள விக்டோரியா அருவி

இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள 

விக்டோரியா நீர்வீழ்ச்சி



































 

இயற்கை படைத்த அற்புதங்களில் விக்டோரியா நீர்வீழ்ச்சியும் ஒன்று. ஆப்பிரிக்கா கண்டத்தில், ஜிம்பாப்வே நாட்டுக்கும் ஜாம்பியா நாட்டுக்கும் எல்லையாக இந்த அருவி அமைந்துள்ளது.
விக்டோரியா நீர்வீழ்ச்சியை முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுலாப் பயணி டேவிட் லிவிங்ஸ்டோன் என்பவர். இவர் ஆப்பிரிக்கக் காட்டுப் பகுதியை சுற்றி வந்தபோது, 1855-ம் ஆண்டு,நவம்பர் 16-ம் நாள் இந்த நீர் வீழ்ச்சியைப் பார்த்தாராம். மிக உயரத்திலிருந்து விழும் இந்த நீர் வீழ்ச்சியைக் கண்டதும் ஆச்சரியப்பட்டு, இதைப் போல நான் எங்கும் கண்டதில்லை என்றாராம்.
இவர்தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு இங்கிலாந்தின் அரசியான விக்டோரியா மகாராணியின் பெயரைச் சூட்டியவர்.
ஆனால் ஆப்பிரிக்க மக்கள் இந்த நீர்வீழ்ச்சியை "மோஷி ஓயா துன்யா' என்றுதான் அழைக்கிறார்கள். இதற்கு "இடி முழக்க புகை மண்டல அருவி' என்று பொருள். அவர்கள் இந்தப் பெயரைச் சூட்டியதற்கும் ஒரு காரணம் உண்டு. இந்த அருவி ஏற்படுத்தும் இடிமுழக்கம் போன்ற ஒலியும் நீர் விழுவதால் ஏற்படும் புகைமண்டலத் துளிகளும் இந்தப் பெயர் சரிதான் என்கின்றன.
இதன் அகலம் 1708 மீட்டர். உயரம் 108 மீட்டர். இதுதான் உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.
இந்த நீர்வீழ்ச்சிக்குக் காரணமான "ஜாம்பஸி' நதி 1000 மைல் தொலைவிற்குத் தடையின்றி ஓடி வருகிறது. இப்படி ஓடிவந்து அதலபாதாளத்தை நோக்கி விழும் போதுதான் இதுபோன்ற இடிமுழக்கம் போலக் கேட்கும் ஓசை ஏறப்டுகிறது. இது கீழே வீழ்ச்சியடையும்போது எழும் சாரலும் நீர்த்திவலைகளும் புகை போல எழும்பும். இது 40 மைல் தொலைவுக்கு அப்பாலும் நன்றாகத் தெரியும்.
இப்படிச் சிதறி விழும் நீர்த்திவலைகளில் சூரிய ஒளி படுவதால் இப்பகுதியில் எப்போதும் வானவில்லைக் காணலாம். சில சமயங்களில் இரண்டு வானவில்கள் தோன்றி வர்ணஜாலம் புரிந்து கண்ணைக் கவரும். பௌர்ணமி இரவில்கூட இங்கு வானவில் தோன்றி அதிசயம் புரியும்.
"ஜாம்பஸி' நதி, விக்டோரியா நீர்வீழ்ச்சியாக விழுந்து மீண்டும் அடர்ந்த காடுகளின் வழியே மிகப் பெரிய நதியாகப் பாய்ந்து ஓடுகிறது.
இந்த அருவியைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து போகின்றனர். இதனால் ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா நாடுகளுக்கு ஏகப்பட்ட வருமானம்!
இந்த அருவியை ஒட்டி ஜாம்பியா நாட்டுக்கும் ஜிம்பாப்வே நாட்டுக்கும் எல்லைப் பகுதியில் நதியின் மீது மிக நீண்ட அழகிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் வழியே செல்லும்போது, இந்த நீர்வீழ்ச்சியின் முழு அழகையும் கண்டு அதிசயக்கலாம். முடிந்தால் ஒரு நடை நீங்களும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்