Thursday, June 27, 2013

மனிதச் சங்கிலி முறையில் 10 பேருக்குச் சிறுநீரக அறுவை

மனித ச் சங்கிலி முறையில் 10 பேருக்கு ச் சிறுநீரக அறுவை









மும்பையில், மனித சங்கிலி முறையில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு 40 மருத்துவர்கள் 3 மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
மும்பையில், 5 குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு 3 மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடத்திருப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
அதாவது, சிறுநீரகம் செயலிழந்து, மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள், சிறுநீரகத்தை தானமாகத் தரத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்களது சிறுநீரகம் உறவினருக்கு பொருத்தமானதாக இல்லை.
இந்த நிலை பல இடங்களில் நேரிடுகிறது. எனவே இதனை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் வகையில், இதுபோல சிறுநீரகம் பாதித்துள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிறுநீரகம் அளிக்க முன்வரும் உறவினர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, ஒரு மனித சங்கிலி உருவாக்கப்பட்டது.
அதாவது, ஒரு மகளுக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன் வரும் தந்தையின் சிறுநீரகம்  மகளுக்குபொருந்தாத நிலையில், இரண்டாவது நோயாளிக்கு தந்தையின் சிறுநீரகம் பொருந்தலாம். இரண்டாவது நோயாளிக்கு சிறுநீரகம் தர முன் வரும் உறவினரின் சிறுநீரகம் மற்றொரு 3வது நோயாளிக்கு பொருந்தலாம். இப்போது 3வது நோயாளிக்கு சிறுநீரகம் தர முன் வரும் உறவினரின் சிறுநீரகம், அந்த மகளுக்கு பொருந்தலாம்.
இவ்வாறு ஒரு மனிதச் சங்கிலியை உருவாக்கி 5 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் 5 பேரிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து பொருத்தி 5 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் மருத்துவர்கள்.
இது ஒரு மிகப்பெரிய தகவல் திரட்டு மூலம் பெற்ற வெற்றியாகும். இதன் மூலம், சிறுநீரகம் கிடைக்காமல் இருக்கும் பலரும் மறு வாழ்வு பெறுவார்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment