Showing posts with label dinamani. Show all posts
Showing posts with label dinamani. Show all posts

Monday, August 26, 2013

கண்ணைச் சுற்றிக் கருவளையம் - போக என்ன செய்வது ?

உடல் மற்றும் மன நிலையை எடுத்துக் காட்டும் கருவளையம்

பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
உறக்கமின்மை, மனக்கவலை, மகிழ்ச்சி, உடல் நலக் குறைவு, சோர்வு, மன அழுத்தம் என பல விஷயங்களை இந்த கருவளையம் காட்டிக் கொடுத்துவிடும்.
இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக் குறைவாலும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு கருவளையம் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதன் மூலமாகத்தான் கருவளையத்தைப் போக்க வேண்டுமே ஒழிய, வெறும் கருவளையத்தைப் போக்க சிகிச்சை பெறுவது எந்த வகையிலும் பலன் தராது.
சிலருக்கு பரம்பரை ரீதியாகவே கருவளையம் ஏற்படலாம். அவ்வாறானவர்கள், சில முயற்சிகள் செய்வதால் ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்தலாம். முழுவதுமாக போனாலும், அது மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உறக்கமின்மை காரணமாக சிலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது அவ்வப்போது வந்து, பின்பு மறைந்துவிடும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நன்கு உறங்கினாலே போதுமானது. உறக்கம் குறையும் போது உருவாகும் கருவளையமானது, உங்களது உடல்நிலை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது.
சிலருக்கு சத்துக் குறைவால், கண்களுக்கு அருகே உள்ள சருமம் சுருங்கி அதனால் கருவளையம் தோன்றுகிறது. இதனை போக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். புரதமம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்த கருவளையும் மறைந்து விடும்.
சிலருக்கு அதிகப்படியான பணி பளுவால் கருவளையம் ஏற்படுகிறது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கும் இந்த கருவளையம் ஏற்படுகிறது.
எனவே, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும், டென்ஷனும் கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல், வேலைகளை பகிர்ந்து கொள்வதால், வேலை பளு குறையும், எனவே எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்து அளியுங்கள்.
சிலருக்கு ரத்த சோகை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகளையும், ரத்தத்தை அதிகரிக்க உதவும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு ரத்த சோகையை சரி செய்தால், இநத் கருவளையமும் தானாகவே மறைந்துவிடும். கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.
எனவே, கருவளையம் வந்து விட்டதே என்று எண்ணி அதற்காக பல க்ரீம்களை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாமல், முதலில் எதனால் கருவளையம் வந்தது என்று கண்டறிந்து அதனை குணப்படுத்த முயலுங்கள். கருவளையம் தானாகவே சரியாகிவிடும்.


ஈகரை கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ?

Posthttp://www.eegarai.net/t93597-topic  by Muthumohamed on Thu Dec 27, 2012 1:22 am
கண்ணைச் சுற்றிக் கருவளையம் போக என்ன செய்வது ? வராமல் இருக்க எதை தவிர்ப்பது !!

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.

*எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

* தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

* சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்இந்த நாகரீக உலகில் முக்கால்வாசிப் பேருக்குக் கண்களை சுற்றிலும் கருமையாக வளையம் போன்று காட்சியளிப்பது பொதுவாகிப் போய்விட்டது. ஆண்களைக் காட்டிலுட்ம பெண்களுக்கே இது அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு வயது வரம்பு கிடையாது. எல்லா வயதினருக்கும் இது பரவலாக இருக்கிறது. மேலும் வயதாக இது அதிகமாகிக் கொண்டே போகிறது.

* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது. இது ஒருவகை வியாதியல்ல. இது கண்ணுக்குக் கெடுதலோ மற்ற எந்த வகையிலும் தொந்தரவோ அளிப்பதில்லை. இருப்பினும் சிலர் இதுகுறித்து மிகவும் கவலைப்படுகின்றனர். மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவே இதற்கும் பல காரணங்கள் உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் இதற்கு ஒரு காரணம். புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது. மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.

கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவயைம் ஏற்பட ஏதுவாகிறது. அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவையும் கண்களைப் பாதிக்கும்.
ஒருமுறை கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேற்கண்ட கரணங்களைத் தவிர்த்தால் நாளடைவில் சிறிய முன்னேற்றமிருக்கும். அதற்கான சில தடுப்பு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இதற்கு சிறந்த வழியாகும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், சூப் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் இவற்றிலுள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை உடலில் கலந்து நல்ல பலனளிக்கும். உணவைப் பொறுத்தவரை நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இந்தப் பிரச்சனையில் உணவு முக்கிய பங்கு பெறுகிறது. உணவில் போதிய சத்துக்கள் கிடைக்காவிடில் வைட்டமின் ஏ,ஈ, கால்சியம், இரும்புச்சத்து அடங்கிய மருந்து, மாத்திரைகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம். நமக்கு வசதிப்பட்ட முறையில் மாத்திரையாகவோ, டானிக்காகவோ, ஊசியாகவோ இச்சத்துக்கள் கொண்ட மருந்துகளைப் பெற்று உபயோகிக்கலாம்.

அடுத்ததாக மனநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு அதிக மனவருத்தம், மனஉளைச்சல் ஏற்பட்டால் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாது. தொடர்ந்து அதையே நினைத்து கொண்டிருந்தால் உடல் நிலைதான் பாதிக்கப்படுமேயல்லாம் பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, அதைப் பற்றி வருந்தாமல் அப்பிரச்சினைக்கு முடிவு காணும் வழியே யோசித்தால் உபயோகமாக இருக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் பதற்றமோ ஆத்திரமோ கொள்ளாமல் அமைதியாக இருந்து சிந்தித்து வழி காண முயற்சி செய்தால் பிச்சினையும் தீரும். உடல்நிலையும் பாதிக்காது.

வெளியே வெயிலில் செல்லும்போது கண்களுக்கு கண்ணாடி அணிந்து சென்றால் இக்கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கேற்ப தனிப்பட்ட முறையில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. கண்களுக்கு அதிகபடியான வேலை கொடுப்பர்களுக்கும் இக்கருவளயம் உண்டாகுகிறது. சில முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதால் அதைத் தடுக்கலாம்.

படிக்கும்போது விளக்கொளி சரியாக அமைந்திருக்க வேண்டும். ஒளி புத்தகத்தில் நேராகப் படுமாறு இருக்கவேண்டும். டைப் அடிப்பவர்கள் நூலகத்தில் இருப்பவர்கள் போன்ற சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களுக்குக் கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் யோகசனம் மற்றும் சில பயிற்சிகள் செய்து கண்களுக்கு ஓய்வு தர வேண்டும். கண்கள் மிகவும் களைத்துப் போகும் போது காய்சசாத பால் பஞ்சைத் தோய்த்துக் கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். பாலுக்குப் பதிலாக பன்னீரில் பஞ்சைத் தோய்த்து இதேபோல் செய்யலாம்.

1. வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.

2. வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.

3.வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.

4. கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.

5. முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும். வெளிர்நிற ஃபவுண்டேசனை உபயோகித்தால் இக்குறையை மறைக்கலாம்.

6. கண் அடியில் கருமை இருந்தால் பார்மஸியில் கிடைக்கும் ஈஸ்ட் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து கண்ணுக்கு அடியில் தடவலாம்.

7. கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும். வெள்ளரித் துண்டுகளையும் வைத்து எடுக்கலாம். டீ டிகாக்ஷனில் ஊறிய பஞ்சினையும் வைத்து வரலாம்.

8. கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.


நன்றி
பரமக்குடி சுமதி(இன்று ஒரு தகவல்)

 


Saturday, December 1, 2012

வார விடுமுறை நாட்கள்

வார விடுமுறை நாட்கள்


ஞாயிற்றுக்கிழமை - இந்தியா
 திங்கள்கிழமை - கிரீசு
 செவ்வாய்க்கிழமை - பாரசீகம்
 புதன்கிழமை - சிரியா
 வியாழக்கிழமை - எகிப்து
 வெள்ளிக்கிழமை - அரபு நாடுகள்
 சனிக்கிழமை - இசுரேல்.

 
 -பி.அழகிரிசாமி,
 முத்தையாபாளையம்.

கடி

கடி

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
 அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
 சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...
 -சீர்காழி வி.ரேவதி,
 தஞ்சாவூர்.

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
 நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!
 -டி.பச்சமுத்து,
 கிருஷ்ணகிரி.

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
 ""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''
 -ஏ.எஸ்.இராஜேந்திரன்,
 வெள்ளூர்.

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க விட்டுல?
 சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
 -த.கிருஷ்ணஜோதி,
 திருவொற்றியூர்.
 ஏ இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
 அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!
 -சீர்காழி சாமா,
 16/29, படேல் தெரு,
 தென்பாதி, சீர்காழி 609 111.

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
 புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...
 -கோ.பெ.இளந்திரையன், கேலக்ஸி இன்ஸ்டிடியூட்,
 வெள்ளாரை அஞ்சல்,
 (வழி) தாம்பரம்,
 ஸ்ரீபெரும்புதூர் 602 105.

Tuesday, November 13, 2012

நமக்கும் காத்திருக்கு நோபல் விருதுகள்!

நமக்கும் காத்திருக்கு நோபல் விருதுகள்!

ஆல்பிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21இல் ஸ்வீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொறியாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த வேதியியலாளர், பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.
 இவர் 1894இல் இரும்பு எஃகு ஆலை ஒன்றை வாங்கி அதைப் போர்க்கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தினார். பாலிசைட், கார்டைட் என்ற புகையற்ற வெடிபொருள்களைக் கண்டுபிடித்தார். இதில் கார்டைட் குறிப்பிடத்தக்கது. இதற்காகக் காப்புரிமையும் பெற்றார். இப்படி மொத்தம் 355 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி  பெரும் கோடீஸ்வரரானார்.
 இவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது "டைனமைட்' என்ற வெடிமருந்துதான். ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய பாறைகளை  உடைக்க, பழைய கட்டடங்களை இடிக்க மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. நாள்கள் செல்லச்செல்ல இதையே வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள்.
 நோபலின் கண்டுபிடிப்பால் அவருக்கு ஏராளமாகப் பணம் கிடைத்தாலும் அப்பாவி மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகின்றனவே என்று அவருடைய மனைவி பிரித்தான்ஸ்கி மிகவும் கவலையுற்றார். எனவே, நோபல் மீதே அவருக்கு வெறுப்பு வந்தது. அடிக்கடி அவருடன் சண்டையிட்டார். இந்த டைனமைட் தயாரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். நோபல் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. இதனால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார்.
 கணவரை விட்டுப் பிரிந்த நிலையிலும் டைனமைட் உற்பத்தியை நிறுத்துமாறு  அவருக்குத் தினமும் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். அப்போதும் நோபல் நிறுத்தவில்லை. ஒரு நாள் நோபலின் சகோதரர் விபத்தில் இறந்தார். பத்திரிகைகள் ஆல்பிரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டன. ஒரு பத்திரிகை "மரண வியாபாரி' நோபல் இறந்தார் என்றே தலைப்பிட்டிருந்தது.
 வேறொரு நகரத்தில் அந்த நேரத்தில் இருந்த நோபல் இச் செய்தியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். தன்னுடைய மனைவியின் வருத்தம், மன்றாட்டு, கோபம் அனைத்தும் எவ்வளவு உண்மையானது என்று உணர்ந்தார். ஆக்கப் பணிகளுக்காகப் பயன்பட வேண்டிய நம்முடைய கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுகிறதே என்று வேதனைப்பட்டார்.
 இனி, மனித குலத்துக்கு மிகுந்த பயனும் மகிழ்ச்சியும் அளிக்கும் வண்ணம் கண்டுபிடிப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் இலக்கியக் கர்த்தாக்களுக்கும் பொதுச் சேவகர்களுக்கும் விருதுகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்க தன்னுடைய சொத்துகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார். இதற்காக தன்னுடைய சொத்தில் 94 சதவீதத்தைச் செலவிட 1895 நவம்பர் 27-ல் உயில் எழுதிக் கையெழுத்திட்டார்.
 அவருடைய இறப்புக்குப் பிறகு முதல்முறையாக 1901இல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் உலக அமைதிக்காகப் பாடுபட்டவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 1969இல் இருந்து பொருளாதார அறிஞர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இதுவரை 10 பேர் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் இந்த நாட்டில் வசித்த வெளிநாட்டவர்களும் அடங்குவர். விவரம் வருமாறு:
1902 ரொனால்ட் ரோஸ், மருத்துவம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.
1907 ருட்யார்ட் கிப்ளிங், இலக்கியம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.
1913 ரவீந்திரநாத் தாகூர், இலக்கியம், இந்தியர்.
1930 சர். சி.வி. ராமன், இயற்பியல், இந்தியர்.
1968 ஹர்கோவிந்த கொரானா, மருத்துவம், இந்திய வம்சாவளியினர்.
1979 அன்னை தெரசா, அமைதி, இந்தியர்.
1983 எஸ். சந்திரசேகர், இயற்பியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.
1998 அமார்த்திய சென், பொருளாதாரம், இந்தியர்.
2001 வி.எஸ். நைய்பால், இலக்கியம்,  இந்திய வம்சாவளியினர்.
2009 வி. ராமகிருஷ்ணன், வேதியியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.
 நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் (1901 - 1930) 30 ஆண்டுகளில் 4 நோபல் விருதுகளைப் பெற்றுள்ளோம்.
 1930 முதல் 2012 வரை 82 ஆண்டுகளில் 6 நோபல் விருதுகளைத்தான் பெற்றுள்ளோம். இந்த எண்ணிக்கையை எவ்வாறு உயர்த்துவது?  ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம்கண்டு ஊக்குவித் தால் இது சாத்தியம்.
 இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் குர்டன், ஜப்பானைச் சேர்ந்த சின்ய யமனகா ஆகிய இருவருக்கு "ஸ்டெம் செல்' ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
  ஜான் குர்டன் பள்ளியில் படித்தபோது உயிரியல் பாடத்தில், 250 மாணவர்களில் அவர்தான் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவாராம். ஆசிரியர்கள் கேட்கும்போது, ""நான் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவேன்'' என்று நம்பிக்கையோடு பதில் அளிப்பாராம். ""மக்குப் பையனுக்கு ஆசையைப் பாருங்கள்'' என்று எல்லோரும் கேலி செய்வார்களாம்.
 ஜான் குர்டன் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஸ்டெம் செல் குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக இப்போது விளங்குகிறார். 

Saturday, October 20, 2012

அரத்திப்பழத்தின் (ஆப்பிளின்) பயன்கள்

தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
ஆப்பிள் சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கு துணை
புரிகிறது. எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின்
உறுதிக்கும் உதவுகிறது.
*
ஆப்பிள் பழச்சாறு அருந்தி வரத் தோல் சுருக்கம் மாறி, உடல் பளபளக்கும்.
*
ஆப்பிளை நறுக்கி தேன் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வாயு தீரும்.
*
ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக்கி சிறிது சர்க்கரை கலந்து மெது மெதுவாக மென்று உமிழ்நீருடன் சாப்பிட நரம்புகள் பலப்படும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
*
ஆப்பிள் பழச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியைக்
கூட்டும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
*
ரத்த அணுக்களை அதிகரித்து ரத்த சோகையை
மாற்றும்.
*
ஆப்பிளில் உள்ள பாஸ்பேட் சத்து எலும்புகளை உறுதியாக்கி மூளைக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
*
ஆப்பிள் இதயத்தைப் பலப்படுத்தும். ரத்த
ஓட்டத்தைச் சீர்படுத்தி வயிற்றின் அமிலத்
தன்மையை குறைக்கும்.

மொழி பெயர்ப்பு - Sopme translations

மொழி பெயர்ப்பு

First Published : 14 October 2012 03:44 PM IST

  1.  பிளேட்டோவின் "குடியரசு' என்ற நூலை உருது மொழியில் மொழி பெயர்த்தவர் : இந்திய க் கு.த. சாகிர் உசேன்.
  2.  மகாபாரதத்தை இரசிய மொழியில் மொழி பெயர்த்தவர் : போரிசு இசுமிர்னோவ்வு.
  3.  திருப்பாவையைத் தெலுங்கில் "ஆமுத்த மால்யதா' என்ற தலைப்பில் கிருட்டிண தேவராயர் மொழி பெயர்த்தார்.
  4.  திருக்குறளை ப் பிசி(பிஜி) மொழியில் மொழி பெயர்த்தவர்: சுவாமி உருத்ரானந்தா.
  5. சிலப்பதிகாரத்தை ச் செக் மொழியில் மொழி பெயர்த்தவர்  முனைவர் கமில் சுவெலபில்.

Saturday, October 6, 2012

அட அப்படியா!

அட அப்படியா!

First Published : 23 September 2012 12:00 AM IST
ஓய்வு இல்லை
ஜப்பானிய மொழியில் "உழைப்பு' என்ற அர்த்தத்தைத் தொனிக்கக் கூடிய சொற்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் "ஓய்வு' என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இன்று வரை இல்லை.
திருட்டு சாஸ்திரம்
வடமொழியிலுள்ள ஓர் ஓலைச்சுவடியின் பெயர் "செüர்ய சாஸ்திரம்'. இதில் திருடுவது எப்படி என்ற முறைகளும், திருடுவதற்கு முன் திருடர்கள் கடவுளை வேண்டிக் கொள்ளும் துதிப் பாடல்களும் உள்ளன.
பாக்கெட்டில் மூளை!
அறிஞர் ஆல்ஸ்டன் குள்ளமாக இருப்பதைப் பார்த்து வழக்கறிஞர் ஒருவர் கிண்டல் செய்தார். ""உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம்'' என்றார். ""அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்'' என்று பளிச்சென்று கூறினார் ஆல்ஸ்டன்.

மியாவ்... மியாவ்...!
பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை
பூனைகள் இனிப்பைத் தொடாது.
பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.
ஆமைக்குப் பற்கள் கிடையாது
முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில் 30 பற்களும் உண்டு
பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.

சூளுரையும் நடைமுறையும்
டாக்டர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூளுரைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. அவற்றில் சில...
ஏழை நோயாளிகளை அன்போடு நேசிப்பேன்.
நோயாளிக்கு தேவையற்ற மருந்துகளைக் கொடுக்க மாட்டேன்.
தேவையற்ற பரிசோதனைகளைச் செய்ய மாட்டேன்.
என்னால் நோயைக் குணப்படுத்த முடியாத பட்சத்தில் வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்ற நோயாளிகளுக்கு தைரியம் கொடுப்பேன்.
உலக மனிதர்களுக்காகச் சேவை செய்வதைத் தினமும் நினைக்க மறக்க மாட்டேன்.
சரியான கட்டணத்தை மட்டும் பெறுவேன்

Wednesday, August 15, 2012

சிறந்த அறிவுரைகள்

சிறந்த அறிவுரைகள்

First Published : 12 Aug 2012 04:39:00 PM IST 


வில்லியம் ட்யூரண்ட் ஒரு சிறந்த அமெரிக்க  சிந்தனையாளர். அவர்தம் பேரப் பிள்ளைகளுக்கு எழுதிய பத்து அறிவுரைகள் இவை. எல்லாக் குழந்தைகளுக்கும்ஏற்ற அறிவுரைகளாக இவை இருப்பதுதான் சிறப்பு. •உடலையும் உள்ளத்தையும் துப்புரவாக்கிக் கொண்டபின் உன் யோசனையைத் தொடங்கு. உன் குளியலறையை நீயே சுத்தம் செய்து நன்றாக வைத்துக் கொள்.  •காலையில் எழுந்ததும் உன் அறையைவிட்டு வெளியே வரும்போது உன்னுடைய அழுக்கு உடைகளைத் துவைப்பதற்காகத் தனிக் கூடையில் போட மறக்காதே. •நன்றாக ஆடை உடுத்திக் கொள். புது நபர்கள் நம்மை நெருங்கிப் பழகி அறிந்து கொள்வதற்கு முன்பு நம் உடையைப் பார்த்துத்தான் நம் தரத்தை எடை போடுகிறார்கள். மதிப்புள்ள பிரமுகர்களின் கருத்து நம் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் வகை செய்கிறது.  •தினமும் குடும்பத்திலோ வெளியிலோ மற்றவர்களுடன் பழகத் தொடங்கும்போது புன்சிரிப்போடு இரு; அப்படியே பழகு. உன் குறைகளைக் குறைவாகவும் உன் நிறைகளை அதிகமாகவும் எண்ணி மகிழ்ச்சி கொள்.  •மற்றவர் பேசும்போது நீ குறுக்கே பேசாதே; உனக்குப் பேச வாய்ப்புக் கிடைக்கும்போது பேசு; பணிவாகவே பேசு. வம்பு வளர்க்கும் வாக்குவாதத்தில் இறங்காதே. உண்மையை ஏற்றுக் கொள்,  •எல்லோரிடமும் பண்போடு கண்ணியமாகப் பழகு. விட்டுக் கொடுக்கவும் உதவவும் தயாராக இரு. முக்கியமாக உன் விரோதிகளிடத்தில் இவற்றைத் தவறாது மேற்கொள்.  •பண்படாத பயனில்லாத தீங்கு தரும் சொல், செயல், காட்சிகளை மிக மிகக் குறைவாகவே அணுகு. உன் மூளைக்கு ஏற்றபடிதான் உன் புத்தி அமையும். உன் மூளையைக் குப்பைத்தொட்டியாக்கிக் கொள்ளாதே.  •தினமும் ஏதாவது நல்ல விஷயத்தைப் படித்துக் கொண்டு வா. இப்படியே படித்துப் படித்து முடிந்தவரையில் கல்வியறிவை வளர்த்துக் கொண்டே இரு.  •வெளிக்குப் பணிவுள்ளவனாகவும் உள்ளுக்குள் தன்மானம் நிரம்பியவனாகவும் இரு. பணிவினால் அக்கம்பக்கத்தாரிடமும் புதியவர்களிடமும் நல்ல பெயர் எடுப்பது எளிது.  •கடுமையான வழியும் வேண்டாம். எளிமையான வழியும் வேண்டாம். நடுத்தர வழியில்  முன்னேறு. வெற்றிக்கு எளிய வழி இதுதான்.  

Sunday, April 8, 2012

Two legged cow

இரண்டு கால் பசு

First Published : 01 Apr 2012 12:00:00 AM IST
 
 


காந்திஜி ஒரு சமயம் மக்கன்லால் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்குப் பெண் கொடுக்க விரும்பினார் ஒருவர். முதலில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட இளைஞன், திடீர் என்று மறுத்துவிட்டான். விவகாரம் காந்தியிடம் வந்தது.காந்தி அந்தப் பையனை அழைத்து விசாரித்தார். சரியாக மூன்று நாள்கள் காந்தி அப்பையனிடம் பல வகைகளில் பேசி, கடைசியில் திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். அப்பையன் வெளியே சென்றதும் காந்தியடிகள் பெண் வீட்டாரைப் பார்த்து,""இந்தப் பையனைத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க மூன்று நாள்கள் ஆகிவிட்டன. நாளை இவன் உங்கள் பெண்ணோடு ஒழுங்காகக் குடித்தனம் நடத்தவில்லை என்றால் மீண்டும் ஒரு மூன்று நாளோ மூன்று மாதமோ அவனிடம் பேச வேண்டிய நிலை ஏற்படலாம். குழப்பம் மிகுந்த இப்பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர இனிமேலும் நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார்.பெண் வீட்டாரும் காந்தி சொல்வதும் நியாயம்தான், என்று வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறிவிட்டனர். பெண் வீட்டார் வெளியில் போனதும்,""அப்பாடா! காலமெல்லாம் பசு பாதுகாப்புக்காகப் போராடும் நான் இன்று ஒரு பசுவைக் காப்பாற்றிவிட்டேன்''என்றார். விஷயம் புரியாமல் அனைவரும் விழித்தனர். ""பெற்றோர்களின் பிடிவாதத்தால் விரும்பாத பையனுக்குக் கழுத்தை நீட்ட இருந்த பெண்ணான இரண்டு கால் பசுவைத்தான் சொன்னேன்'' என்றார் காந்தி. உடனே அந்த இடத்தில் இருந்தவர்கள் "குபீர்' சிரிப்பு சிரித்தனர்.

joke bits

கொட்டிக் கிடக்குது குட்டித் துணுக்குகள்!

First Published : 08 Apr 2012 02:10:00 PM IST


* அமெரிக்காவில் கடிகாரக் கடைகளில் விற்பனைக்கு இருக்கும் கடிகாரங்களில் நேரம் 10-10 என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி? அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் கொல்லப்பட்ட நேரத்தை நினைவுகூறும் வண்ணம் அவ்வாறு வைக்கப்பட்டிருக்கும்.* 
ஒட்டகச் சிவிங்கியின் பின் கால்கள் தான் அதனுடைய தற்காப்பு ஆகும். இது ஆபத்து காலத்தில், இந்தக் கால் மூலம் ஓர் உதைவிட்டால், அந்த உதை ஒரு சிங்கத்தைக்கூடக் கொல்லும் வலிமையுடையதாகும்.* சீல் எனும் கடல் வாழ் உயிரினம் கருவுற்றிருக்கும்போது எளிதில் சாப்பிடாது. தன் உடற்சத்தையே கரைத்துத் தன் வயிற்றினுள் இருக்கும் குட்டிக்குச் செலுத்தும்.* பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்ற பொருள்.* நார்வே நாட்டில் வீடுகளின் கூரைகளில் புற்களைப் பயிரிடுகின்றனர்.* உடலில் உள்ள பல நோய்களையும் தண்ணீர் அருந்துவதன் மூலம் குணப்படுத்தமுடியும் என்று ஜப்பான் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். * உலகின் மிகப் பழமையான சுரங்கப் பாதை துருக்கியில் உள்ளது. இங்கு சாமோஸ் என்ற இடத்தில் சுண்ணாம்புக் கல் மலை ஒன்று உள்ளது. இம்மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைதான் உலகின் மிகப் பழமையான சுரங்கப்பாதை. இது 1000 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது.* 1879-ல் இந்தியத் தபால் அட்டையின் விலை 1 பைசா.*
 லெபனான் நாட்டில் எப்போதும் கிறிஸ்துவர்களிடமிருந்து ஜனாதிபதியும், முஸ்லிம்களிடமிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். *
 மற்ற நாள்களில் நடப்பதை விட பெüர்ணமியன்று 50 சதவீதம் கொலைகளும் 100 சதவீதம் தீய சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.*
 கோவாவின் தலைநகர் பஞ்சிம். அங்குள்ள இரண்டு சாலைகளின் பெயர்கள்: ஜூன் 18-ம் தேதி சாலை, ஜனவரி 31-ம் தேதி சாலை.*
 சிம்பன்ஸி குரங்குகளுக்கும் மனிதனுக்கும் ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆய்வின்படி 98.4 சதவீதம் ஒரே உணர்வுகள் தான் இருக்கிறது. மற்றபடி நாம் என்னென்ன செய்கிறோமோ, அத்தனையும் அவை செய்யும். பேசமட்டும் தெரியாது.

Friday, November 18, 2011

கடி, nov.12,2011


கடி

First Published : 12 Nov 2011 12:27:08 PM IST


அப்பா: ஏண்டா, வெக்கமா இல்லே..? ஹிஸ்டரி பேப்பர்லே சைபர் மார்க் வாங்கிட்டு வந்திருக்கியே?
மகன்: பழசையெல்லாம் மறக்கணும்னு, நீதானே அடிக்கடி சொல்வே..! -எச்.சீதாலட்சுமி, கொல்லம். ஒருவர்: நீதிபதிகள் ஏன் கையில சுத்தி வச்சிருக்காங்க? மற்றவர்: ஆணி அடிச்ச மாதிரி தீர்ப்பு சொல்லத்தான்... -அ.பேச்சியப்பன், ராஜபாளையம். * கண்டக்டர்: தம்பி, டிக்கெட் எடுத்திட்டியா? பையன்: முன்னாடி எடுப்பாங்க, சார்! கண்டக்டர்: முன்னாடி யாரும் எடுக்கலையே? பையன்: அப்ப, பின்னாடி எடுப்பாங்க.... கண்டக்டர்: பின்னாடியும் யாரும் எடுக்கலையேப்பா! பையன்: முன்னாடி உள்ளவங்களும் எடுக்கல, பின்னாடி உள்ளவங்களும் எடுக்கலன்னா, நான் மட்டும் எதுக்கு டிக்கெட் எடுக்கணும்? -லோ.அரவிந்தசேகர், 125, பாரதி நகர், 3-வது தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி. * ஒருவர்: நீங்க மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல கார் ஓட்டுவீங்க? மற்றவர்: யார் அது மணி? அவனுக்கெல்லாம் நான் எதுக்கு கார் ஓட்டணும்? -எச்.பாலசிங் மனுவேல், 19, பெத்தேல்புரம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 059. ராமு: டேய் சோமு... வரவர எதப் பாத்தாலும் மங்கலாவே தெரியுதுடா... சோமு: அப்படின்னா, டாக்டரைப் பார்க்கவேண்டியதுதான்? ராமு: அவரும் மங்கலாத்தாண்டா தெரியுறார்..! -எடக்காடு சேகர், ஊட்டி 643 005. "நாடாளுமன்றத்தில் நிதிமந்திரி பட்ஜெட்டை எப்படி வாசிப்பார்?' "எப்படி வாசிப்பார், தெரியலையே!' "வரி வரியாத்தான் வாசிப்பார்..!' -கே.எல்.சிதம்பரம், புதுக்கோட்டை. வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

பன்னாட்டுப் பொன்மொழிகள்

பன்னாட்டுப் பொன்மொழிகள்

First Published : 19 Nov 2011 12:00:00 AM IST


 1.  பெண் என்பவள் முடிந்தபோது சிரிப்பாள்; ஆனால் நினைத்தபோது அழுவாள்!  -பிரான்ஸ்  2.  ஒரு கணத்தில் இழந்த மானத்தை ஓராயிரம் ஆண்டுகளானாலும் பெற்றுவிட முடியாது!  -இத்தாலி  3.  குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது; அதைக் கீழே இறக்கினால் மனம் நோகிறது!  -பொலிவியா  4.  விரும்புவதைப் பெற முடியவில்லை என்றால் பெற முடிந்ததை விரும்ப வேண்டும்!  -ஸ்பெயின்  5.  கேள்வி கேட்கத் தெரிந்தாலே. பாதி தெரிந்து கொண்டதாக அர்த்தம்!  -இத்தாலி  6.  அறிவு உள்ளவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களுக்கு அறிவு இருப்பதில்லை!  -சீனா  7.  பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்; ஒன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்காது!  -பிலிப்பைன்ஸ்  8.  பணத்தில் நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கையான இடத்தில் பணத்தைப் போட்டு வை!  -பலூசிஸ்தான்  9.  விவசாயிகள் சேற்றில் கை வைப்பதால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடிகிறது!  -இந்தியா  10.  உழைப்பிற்கு ஓர் உதாரணம் எறும்பு; மற்றொன்று இதயம்!  -அமெரிக்கா

கடி , nov 19,2011


கடி

First Published : 19 Nov 2011 12:00:00 AM IST


* ஒருவர்: கடல்ல மூழ்கினவரைக் காப்பாத்துனது தப்பாப் போச்சு... மற்றவர்: ஏன்? ஒருவர்: இப்ப கடன்ல மூழ்கியிருக்கேன், காப்பாத்துங்கன்னு சொல்றாரு,,, -மு.முத்து பிரபாகரன், த/பெ. முருகன், வங்கிநாராயணபுரம், எழுமலை அஞ்சல், பெறையூர் தாலூகா, மதுரை மாவட்டம் 625 535. கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்? டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..! -ச.விக்னேஷ், வாலாஜாபேட்டை. *  ஆசிரியர்: டேய்! சுந்தர், ஏண்டா பரீட்சை ஹால்ல தூங்குற? சுந்தர்: நீங்கதானே சார், ஏதாவது கேள்விக்குப் பதில் தெரியலைன்னா சும்மா முழிச்சுக்கிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க... -சு.சூர்யா, 656/3, எம்.எம்.ஆர்.காம்ப்ளெக்ஸ், பெருந்துறை,  ஈரோடு மாவட்டம் 638 052. இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது... இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்... அவர்: எனக்கு அந்தப் பிரச்னையே இல்லை... படின்னு சொன்னாப் போதும்... உடனே தூங்கிடுவான்.. -எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி. "ஏண்டா... ராமு! படம் பார்க்கும்போது அடிக்கடி தும்மறே..?' "இது மசாலாப் படமாச்சே அதான்..!' -ந.தாஜ்நிஷா, காயல்பட்டினம். அப்பா: ஏண்டா, டிரம்ம உருட்டுற?
மகன்: தம்பிக்கு விளையாட்டு காட்டுறேம்பா! அப்பா: தம்பி எங்கடா..? மகன்: டிரம்முக்கள்ள இருக்கான்பா..! -செல்.பச்சமுத்து, மேட்டுச்சேரி. வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

Saturday, November 5, 2011

இனிது கேளீர் !

இனிது கேளீர் !

First Published : 23 Oct 2011 10:09:01 AM IST


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.  -ஆலன் ஸ்டிரைக்  எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர் தன் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.  -ஐன்ஸ்டைன்  மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.  -நபிகள் நாயகம்.

Friday, October 22, 2010

பெர்முடா ரகசியம்

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும்    நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன்    தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில்  மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.÷"பிளைட்-19' என்பது குண்டு வீசும் விமானங்களுக்குப் பயிற்சியளிக்கும் விமானமாகும். இது, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. இந்த விமானம் 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்துகொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை   அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் இதுதான்:÷""விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானி லெப்டினென்ட் சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.''÷இதைவிட மர்மமான இன்னொரு நிகழ்ச்சி உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டது. அந்தக் கப்பலை மீட்பதற்காக கடற்படை விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த மீட்பு விமானத்தில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தார்கள். வட அட்லாண்டிக் கடலில் பறந்துகொண்டிருந்தது இந்த விமானம். சில மணிநேரத்திற்குப் பிறகு இந்த          விமானத்திலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அப்படியே தொலைந்துபோய்விட்டது! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில் நடந்தது. ÷1872-ஆம் ஆண்டு 282 டன் எடைகொண்ட "மேரி செலஸ்டி' என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி "மேரி செலஸ்டி' என்று     அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில்  மறைந்துபோனதாக பழைய கால செய்தித் தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.÷மேலும், இந்த பெர்முடா முக்கோணப் பகுதியில் 1918-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சம்பவம் நடந்தது. பார்படோஸ் தீவிலிருந்து கிளம்பியது "யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்' எனும் ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.÷"ஆரான் பர்' என்பவர் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி. இவரது மகள் "தியோடோசியா பர் அல்ஸ்பான்', தெற்கு கரோலினாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு "பேட்ரியாட்' எனும் கப்பலில் பயணம் செய்தார். பின்பு, அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பெர்முடா முக்கோணத்தில் 1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவம் இது.÷முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் "டக்லஸ் பிசி-3.' மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.÷அசோர்ஸிலிருந்து பெர்முடா செல்லும் பயணிகள் விமானம் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காணாமல் போனது. 1949 ஜனவரி 17-இல் ஜமைக்காவிலிருந்து,          கிங்ஸ்டனுக்குப் பறந்து சென்ற இன்னொரு விமானத்தைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. இந்த இரண்டு விமானங்களும் தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸýக்குச் சொந்தமான ஒரே ரக விமானங்கள். இதுவும் பெர்முடா முக்கோணத்தில் நடந்தது.÷இன்னும் ஒரு பெர்முடா தகவல். முன்பு கந்தகம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது "எஸ் எஸ் மரைன் சல்பர் குயின்' எனும் கப்பல். இது, பிறகு 1963 பிப்ரவரி 4-ஆம் தேதி எண்ணெய் ஏற்றிக்கொண்டு புளோரிடா வழியாக சென்றுகொண்டிருந்தது. அதில் 39 பயணிகள் இருந்தார்கள். அந்தக் கப்பலிலிருந்து பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் கப்பல் "காண முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது' என்ற தகவலை மட்டும் பத்திரிகைகளில் காணமுடிந்தது.÷மேலும், ஒரு வியப்பான சம்பவம் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது. இது நடந்தது 1921-இல். "ரய் ஃபுகு மரு' எனும் ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து,""கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது...! விரைந்து உதவிக்கு வாருங்கள்...''எனும் வார்த்தைகள் அபாய அறிவிப்பாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.÷மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை   கிடைக்கவில்லை.÷1962-இல் "பிளைட்-19' தொலைந்துபோன நிகழ்ச்சி குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற இதழ் ஒன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. விமான ஓட்டி,""நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை...'' என்று தகவல் அனுப்பியதாக , அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. மேலும், வின்சென்ட் காடிஸ் என்பவர் "அர்கோசி' எனும் இதழில் எழுதும்போது, இந்த விமானம் தொலைந்ததற்கு மாயச் சக்திகளே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடற்படை விசாரணைக் குழு அதிகாரிகள்,""விமானம் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது'' எனும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இந்தச் சமயத்தில் பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் உலக நாடுகளெங்கும் பத்திரிகைகளில் பிரசுரமாயின.÷இந்த மர்ம நிகழ்ச்சிகளுக்கு மேலும் திகிலூட்டும் விதமாக,"நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' எனும் கட்டுரையும், "கண்ணுக்குத் தெரியாத வெளிகள்' மற்றும் "சாத்தானின் முக்கோணத்தில்' எனும் புத்தகங்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், "வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மாய சக்திகள் கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருக்கலாம். அதில் இருந்த மனிதர்களை அந்த மாய சக்திகள் என்ன செய்தன என்று கடவுளுக்குத்தான் தெரியும்' என்று எழுதப்பட்டிருந்தன.÷கரீபியன் தீவு மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.÷இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், "தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு' என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் தொலைதல்களுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார். சில எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும், இது மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வேலை என்று கதைவிடுவதற்கு வியாபார நோக்கமே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.÷சில ஆய்வாளர்கள், ""பெர்முடா முக்கோணப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமங்களாகச் சேகரமாகியிருக்கின்றன. இந்த மீத்தேன் ஹைட்ரேட் நீர் அடர்த்தியைக் குறைத்து பெரிய நீர்க் குமிழ்களை உருவாக்கி கப்பல்களை மூழ்கடித்துவிடுகின்றன'' என்று தெரிவிக்கின்றனர். மேலும் சில ஆய்வாளர்கள்,""திடீர் மீத்தேன் வெடிப்புகள் சேற்று எரிமலைகளை உருவாக்கி கப்பல்களை மிதக்க முடியாமல் மூழ்கடித்துவிடுகின்றன'' என்ற தகவல்களை வெளியிட்டனர்.÷ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிலவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,""உலகம் முழுதும் கடலுக்கடியிலான ஹைட்ரேட்டுகள்  பெருமளவில் இருக்கின்றன. குறிப்பாக, தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையை ஒட்டிய  "ப்ளேக்ரிட்ஜ்' பகுதியில் இச்சேகரங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், அக் கடற்பகுதியில் பெர்முடா முக்கோணப் பகுதியில் நடப்பதைப்போன்ற எந்த நிகழ்வுகளும்      நடப்பதில்லை. பெர்முடா முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட் படிமம் மிகக்   குறைவு. எனவே, மர்மச் சம்பவங்களுக்கு ஹைட்ரேட்டுகள்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது'' என்று தெரிவித்திருந்தது.÷இதுவரை ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம்  அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது. 

Tuesday, December 22, 2009

கிறித்துமசு துணுக்குகள்!



  • கிரீஸ் நாட்டில் எல்லா நாட்டைப் போலவும் தபால்காரரின் பை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளால் நிரம்பி வழியும். ஆனால் கிரீஸ் நாட்டுக் குழந்தைகளுக்கு பண்டிகைக்கால பரிசுப் பொருட்கள் கிறிஸ்துமஸின் போது கிடைக்காது. புத்தாண்டின் போதுதான் கிடைக்கும். சிவப்பு ஆடை அணிந்து செயின்ட் வாஸல் என்பவர் ​(சாண்டா கிளாஸ்)​ போல பரிசுப் பொருள்களை வழங்குவார்.
  • கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து ப்ளஸ் மாஸ். "மாஸ்' என்றால் ஆலய பூஜை என்பது அர்த்தம். ஆக கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்துவின் பூஜை என்று அர்த்தம். கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறிக்கும் இந்த சொல் கி.பி.1131-ஆம் ஆண்டிலிருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.
  • கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை முதலில் வடிவமைத்தவர் ஹென்றி கோலே.

Friday, September 4, 2009

விடுகதைகள்



1. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன?
2. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன?
3. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?
4. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார்?
5. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார்?
6. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்?
7. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன?
8. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
9. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
10. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
11. தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும். அது என்ன?
12. கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான். அவன் யார்?
13. மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும். அவன் யார்?
14. குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான். அவன் யார்?
15. விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை. அது என்ன?

விடைகள்:

1.தேன்
2.ஊசி
3.மத்து
4.வானொலிப் பெட்டி
5.தலையணை
6.மெட்டி
7.தேனீ
8.மெழுகுவர்த்தி
9.வாழை
10.இடியாப்பம்
11.கிளிப்
12.நாய்
13.அடுப்புக்கரி
14.தக்காளி
15.கையுறை