Showing posts with label gnaayiur kontaattam. Show all posts
Showing posts with label gnaayiur kontaattam. Show all posts

Saturday, December 22, 2012

படிப்பது எதற்காக?

படிப்பது எதற்காக?





நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,""படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?''என்று கேட்டார். அதற்கு லிங்கன்,""நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படி பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

உடல் நலம் காக்கும் உளுந்து

உடல் நலம் காக்கும் உளுந்து

தமிழக மக்களின் முக்கியமான உணவு இட்லி! அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கூட பிரசித்திப் பெற்ற உணவு இட்லிதான்! குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு அது! இட்லி மாவில் சேர்க்கப்படும் உளுந்து, மனிதனுக்கு ஆரோக்கியத்தை நல்கும் அற்புதப் பொருளாகும்.
* உளுந்தைக் கஞ்சியாகவோ, களியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேக வைத்தோ உணவாக உண்டு வந்தால், உடல் வலுவடையும். எலும்பு, தசை நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து மிகவும் நல்லது.
* உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்துக் களி செய்து, பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
* உளுந்தைக் காய வைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
* உளுந்து சாப்பிட்டால் இடுப்பு வலிமையோடு திகழும்.
* பருவம் அடைந்த பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த உளுந்தைக் கஞ்சியாகச் செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
* உளுந்தை நீரில் ஊற வைத்து எடுத்த நீரை, மறுநாள் அதிகாலையில் அருந்த சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் நீங்கும்.

Saturday, October 20, 2012

அரத்திப்பழத்தின் (ஆப்பிளின்) பயன்கள்

தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
ஆப்பிள் சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கு துணை
புரிகிறது. எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின்
உறுதிக்கும் உதவுகிறது.
*
ஆப்பிள் பழச்சாறு அருந்தி வரத் தோல் சுருக்கம் மாறி, உடல் பளபளக்கும்.
*
ஆப்பிளை நறுக்கி தேன் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வாயு தீரும்.
*
ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக்கி சிறிது சர்க்கரை கலந்து மெது மெதுவாக மென்று உமிழ்நீருடன் சாப்பிட நரம்புகள் பலப்படும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
*
ஆப்பிள் பழச்சாறு நோய் எதிர்ப்பு சக்தியைக்
கூட்டும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
*
ரத்த அணுக்களை அதிகரித்து ரத்த சோகையை
மாற்றும்.
*
ஆப்பிளில் உள்ள பாஸ்பேட் சத்து எலும்புகளை உறுதியாக்கி மூளைக்குச் சுறுசுறுப்பைத் தரும்.
*
ஆப்பிள் இதயத்தைப் பலப்படுத்தும். ரத்த
ஓட்டத்தைச் சீர்படுத்தி வயிற்றின் அமிலத்
தன்மையை குறைக்கும்.

மொழி பெயர்ப்பு - Sopme translations

மொழி பெயர்ப்பு

First Published : 14 October 2012 03:44 PM IST

  1.  பிளேட்டோவின் "குடியரசு' என்ற நூலை உருது மொழியில் மொழி பெயர்த்தவர் : இந்திய க் கு.த. சாகிர் உசேன்.
  2.  மகாபாரதத்தை இரசிய மொழியில் மொழி பெயர்த்தவர் : போரிசு இசுமிர்னோவ்வு.
  3.  திருப்பாவையைத் தெலுங்கில் "ஆமுத்த மால்யதா' என்ற தலைப்பில் கிருட்டிண தேவராயர் மொழி பெயர்த்தார்.
  4.  திருக்குறளை ப் பிசி(பிஜி) மொழியில் மொழி பெயர்த்தவர்: சுவாமி உருத்ரானந்தா.
  5. சிலப்பதிகாரத்தை ச் செக் மொழியில் மொழி பெயர்த்தவர்  முனைவர் கமில் சுவெலபில்.

Wednesday, August 15, 2012

சிறந்த அறிவுரைகள்

சிறந்த அறிவுரைகள்

First Published : 12 Aug 2012 04:39:00 PM IST 


வில்லியம் ட்யூரண்ட் ஒரு சிறந்த அமெரிக்க  சிந்தனையாளர். அவர்தம் பேரப் பிள்ளைகளுக்கு எழுதிய பத்து அறிவுரைகள் இவை. எல்லாக் குழந்தைகளுக்கும்ஏற்ற அறிவுரைகளாக இவை இருப்பதுதான் சிறப்பு. •உடலையும் உள்ளத்தையும் துப்புரவாக்கிக் கொண்டபின் உன் யோசனையைத் தொடங்கு. உன் குளியலறையை நீயே சுத்தம் செய்து நன்றாக வைத்துக் கொள்.  •காலையில் எழுந்ததும் உன் அறையைவிட்டு வெளியே வரும்போது உன்னுடைய அழுக்கு உடைகளைத் துவைப்பதற்காகத் தனிக் கூடையில் போட மறக்காதே. •நன்றாக ஆடை உடுத்திக் கொள். புது நபர்கள் நம்மை நெருங்கிப் பழகி அறிந்து கொள்வதற்கு முன்பு நம் உடையைப் பார்த்துத்தான் நம் தரத்தை எடை போடுகிறார்கள். மதிப்புள்ள பிரமுகர்களின் கருத்து நம் உயர்வுக்கும் நல்வாழ்வுக்கும் வகை செய்கிறது.  •தினமும் குடும்பத்திலோ வெளியிலோ மற்றவர்களுடன் பழகத் தொடங்கும்போது புன்சிரிப்போடு இரு; அப்படியே பழகு. உன் குறைகளைக் குறைவாகவும் உன் நிறைகளை அதிகமாகவும் எண்ணி மகிழ்ச்சி கொள்.  •மற்றவர் பேசும்போது நீ குறுக்கே பேசாதே; உனக்குப் பேச வாய்ப்புக் கிடைக்கும்போது பேசு; பணிவாகவே பேசு. வம்பு வளர்க்கும் வாக்குவாதத்தில் இறங்காதே. உண்மையை ஏற்றுக் கொள்,  •எல்லோரிடமும் பண்போடு கண்ணியமாகப் பழகு. விட்டுக் கொடுக்கவும் உதவவும் தயாராக இரு. முக்கியமாக உன் விரோதிகளிடத்தில் இவற்றைத் தவறாது மேற்கொள்.  •பண்படாத பயனில்லாத தீங்கு தரும் சொல், செயல், காட்சிகளை மிக மிகக் குறைவாகவே அணுகு. உன் மூளைக்கு ஏற்றபடிதான் உன் புத்தி அமையும். உன் மூளையைக் குப்பைத்தொட்டியாக்கிக் கொள்ளாதே.  •தினமும் ஏதாவது நல்ல விஷயத்தைப் படித்துக் கொண்டு வா. இப்படியே படித்துப் படித்து முடிந்தவரையில் கல்வியறிவை வளர்த்துக் கொண்டே இரு.  •வெளிக்குப் பணிவுள்ளவனாகவும் உள்ளுக்குள் தன்மானம் நிரம்பியவனாகவும் இரு. பணிவினால் அக்கம்பக்கத்தாரிடமும் புதியவர்களிடமும் நல்ல பெயர் எடுப்பது எளிது.  •கடுமையான வழியும் வேண்டாம். எளிமையான வழியும் வேண்டாம். நடுத்தர வழியில்  முன்னேறு. வெற்றிக்கு எளிய வழி இதுதான்.  

Sunday, April 8, 2012

Two legged cow

இரண்டு கால் பசு

First Published : 01 Apr 2012 12:00:00 AM IST
 
 


காந்திஜி ஒரு சமயம் மக்கன்லால் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்குப் பெண் கொடுக்க விரும்பினார் ஒருவர். முதலில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட இளைஞன், திடீர் என்று மறுத்துவிட்டான். விவகாரம் காந்தியிடம் வந்தது.காந்தி அந்தப் பையனை அழைத்து விசாரித்தார். சரியாக மூன்று நாள்கள் காந்தி அப்பையனிடம் பல வகைகளில் பேசி, கடைசியில் திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். அப்பையன் வெளியே சென்றதும் காந்தியடிகள் பெண் வீட்டாரைப் பார்த்து,""இந்தப் பையனைத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க மூன்று நாள்கள் ஆகிவிட்டன. நாளை இவன் உங்கள் பெண்ணோடு ஒழுங்காகக் குடித்தனம் நடத்தவில்லை என்றால் மீண்டும் ஒரு மூன்று நாளோ மூன்று மாதமோ அவனிடம் பேச வேண்டிய நிலை ஏற்படலாம். குழப்பம் மிகுந்த இப்பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர இனிமேலும் நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார்.பெண் வீட்டாரும் காந்தி சொல்வதும் நியாயம்தான், என்று வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறிவிட்டனர். பெண் வீட்டார் வெளியில் போனதும்,""அப்பாடா! காலமெல்லாம் பசு பாதுகாப்புக்காகப் போராடும் நான் இன்று ஒரு பசுவைக் காப்பாற்றிவிட்டேன்''என்றார். விஷயம் புரியாமல் அனைவரும் விழித்தனர். ""பெற்றோர்களின் பிடிவாதத்தால் விரும்பாத பையனுக்குக் கழுத்தை நீட்ட இருந்த பெண்ணான இரண்டு கால் பசுவைத்தான் சொன்னேன்'' என்றார் காந்தி. உடனே அந்த இடத்தில் இருந்தவர்கள் "குபீர்' சிரிப்பு சிரித்தனர்.

joke bits

கொட்டிக் கிடக்குது குட்டித் துணுக்குகள்!

First Published : 08 Apr 2012 02:10:00 PM IST


* அமெரிக்காவில் கடிகாரக் கடைகளில் விற்பனைக்கு இருக்கும் கடிகாரங்களில் நேரம் 10-10 என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி? அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் கொல்லப்பட்ட நேரத்தை நினைவுகூறும் வண்ணம் அவ்வாறு வைக்கப்பட்டிருக்கும்.* 
ஒட்டகச் சிவிங்கியின் பின் கால்கள் தான் அதனுடைய தற்காப்பு ஆகும். இது ஆபத்து காலத்தில், இந்தக் கால் மூலம் ஓர் உதைவிட்டால், அந்த உதை ஒரு சிங்கத்தைக்கூடக் கொல்லும் வலிமையுடையதாகும்.* சீல் எனும் கடல் வாழ் உயிரினம் கருவுற்றிருக்கும்போது எளிதில் சாப்பிடாது. தன் உடற்சத்தையே கரைத்துத் தன் வயிற்றினுள் இருக்கும் குட்டிக்குச் செலுத்தும்.* பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்ற பொருள்.* நார்வே நாட்டில் வீடுகளின் கூரைகளில் புற்களைப் பயிரிடுகின்றனர்.* உடலில் உள்ள பல நோய்களையும் தண்ணீர் அருந்துவதன் மூலம் குணப்படுத்தமுடியும் என்று ஜப்பான் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். * உலகின் மிகப் பழமையான சுரங்கப் பாதை துருக்கியில் உள்ளது. இங்கு சாமோஸ் என்ற இடத்தில் சுண்ணாம்புக் கல் மலை ஒன்று உள்ளது. இம்மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைதான் உலகின் மிகப் பழமையான சுரங்கப்பாதை. இது 1000 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது.* 1879-ல் இந்தியத் தபால் அட்டையின் விலை 1 பைசா.*
 லெபனான் நாட்டில் எப்போதும் கிறிஸ்துவர்களிடமிருந்து ஜனாதிபதியும், முஸ்லிம்களிடமிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். *
 மற்ற நாள்களில் நடப்பதை விட பெüர்ணமியன்று 50 சதவீதம் கொலைகளும் 100 சதவீதம் தீய சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.*
 கோவாவின் தலைநகர் பஞ்சிம். அங்குள்ள இரண்டு சாலைகளின் பெயர்கள்: ஜூன் 18-ம் தேதி சாலை, ஜனவரி 31-ம் தேதி சாலை.*
 சிம்பன்ஸி குரங்குகளுக்கும் மனிதனுக்கும் ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆய்வின்படி 98.4 சதவீதம் ஒரே உணர்வுகள் தான் இருக்கிறது. மற்றபடி நாம் என்னென்ன செய்கிறோமோ, அத்தனையும் அவை செய்யும். பேசமட்டும் தெரியாது.

Saturday, November 5, 2011

இனிது கேளீர் !

இனிது கேளீர் !

First Published : 23 Oct 2011 10:09:01 AM IST


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.  -ஆலன் ஸ்டிரைக்  எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர் தன் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.  -ஐன்ஸ்டைன்  மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.  -நபிகள் நாயகம்.