Saturday, October 6, 2012

அட அப்படியா!

அட அப்படியா!

First Published : 23 September 2012 12:00 AM IST
ஓய்வு இல்லை
ஜப்பானிய மொழியில் "உழைப்பு' என்ற அர்த்தத்தைத் தொனிக்கக் கூடிய சொற்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் "ஓய்வு' என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இன்று வரை இல்லை.
திருட்டு சாஸ்திரம்
வடமொழியிலுள்ள ஓர் ஓலைச்சுவடியின் பெயர் "செüர்ய சாஸ்திரம்'. இதில் திருடுவது எப்படி என்ற முறைகளும், திருடுவதற்கு முன் திருடர்கள் கடவுளை வேண்டிக் கொள்ளும் துதிப் பாடல்களும் உள்ளன.
பாக்கெட்டில் மூளை!
அறிஞர் ஆல்ஸ்டன் குள்ளமாக இருப்பதைப் பார்த்து வழக்கறிஞர் ஒருவர் கிண்டல் செய்தார். ""உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம்'' என்றார். ""அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்'' என்று பளிச்சென்று கூறினார் ஆல்ஸ்டன்.

மியாவ்... மியாவ்...!
பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை
பூனைகள் இனிப்பைத் தொடாது.
பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.
ஆமைக்குப் பற்கள் கிடையாது
முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில் 30 பற்களும் உண்டு
பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.

சூளுரையும் நடைமுறையும்
டாக்டர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூளுரைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. அவற்றில் சில...
ஏழை நோயாளிகளை அன்போடு நேசிப்பேன்.
நோயாளிக்கு தேவையற்ற மருந்துகளைக் கொடுக்க மாட்டேன்.
தேவையற்ற பரிசோதனைகளைச் செய்ய மாட்டேன்.
என்னால் நோயைக் குணப்படுத்த முடியாத பட்சத்தில் வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்ற நோயாளிகளுக்கு தைரியம் கொடுப்பேன்.
உலக மனிதர்களுக்காகச் சேவை செய்வதைத் தினமும் நினைக்க மறக்க மாட்டேன்.
சரியான கட்டணத்தை மட்டும் பெறுவேன்

No comments:

Post a Comment