Saturday, October 13, 2012

பொறுமையைக் கடைபிடியுங்கள்

பொறுமையைக் கடைபிடியுங்கள்
செப்டம்பர் 03,2012,09:09  IST

* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மை ஆக்குகிறான்.
* கடவுளின் படை ப்பு ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.
* நல்ல  மனிதன் நல்ல வற்றை இதயத்தின் நல்ல  கருவூலத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய க் கருவூலத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.
* கடவுளின் ஊழியன் வழக்காடும் தன்மையுள்ளவனாய் இருக்கக்கூடாது. எல்லா மனிதர்களிடமும் கண்ணியமாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும் பொறுமைசாலியாகவும் இருக்கவேண்டும்.
* எனக்கு வறுமையையோ செல்வப்பெருக்கையோ தர வேண்டாம். எனக்கு அன்றாடத் தேவையான உணவை மட்டும் ஊட்டும்.
* நண்பன் புண்படுத்தும் காயங்கள் உள்ளூரப் பற்றுதல் உள்ளவை. ஆனால், பகையாளி ஒருவன் வாரி வழங்கும் முத்தங்களோ உள்ளூரப் பித்தலாட்டமானவை.
- பைபிள்
தினமலர்

No comments:

Post a Comment