Sunday, October 28, 2012

தெரிந்து கொள்ளுங்கள்...

தெரிந்து கொள்ளுங்கள்...

First Published : 06 October 2012 05:05 PM IST
அட அப்படியா..?


*சந்திரனைப் போல வீனசுக்கும் பிறைகள் உண்டு.

*பரப்பளவில் இலங்கையைப் போல இரு மடங்கு பெரியது தமிழகம்.

*கிவி பறவை பூனையைப் போல கத்தும்; நாயைப் போல உறுமும்.

*மனிதனைப் போல குரங்குக்கும் தலையில் வழுக்கை விழும்.

*தவில் செய்யப் பயன்படும் மரம் பலா.

*கொசுவின் தூய தமிழ்ப் பெயர் நுளம்பு.

*உலகையே மிரட்டுகின்ற கொசுவுக்கு முக்கிய எதிரி யாரென்றால் தும்பிதான். தும்பிகளுக்கு விருப்பமான உணவு கொசு.

 பலரக காற்று!



*மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வீசுவது மென்காற்று

*அதற்கு மேல் 11 கி.மீ. வரை -இளந்தென்றல்

*15 கி.மீ. - 19 கி.மீ. வரை - தென்றல்

*20 கி.மீ. - 29 கி.மீ. வரை - புழுதிக் காற்று

*30 கி.மீ. - 39 கி.மீ. வரை - ஆடிக் காற்று

*40 கி.மீ. - 110 கி.மீ. வரை - கடுங்காற்று

*101 கி.மீ. - 120 கி.மீ. வரை - புயல்

*120 கி.மீ.க்கு மேல் - சூறாவளி

 -தொகுப்பு: சி.எம்.ஆறுமுகம், ஆ.விஜயலட்சுமி,
 திலீபன் கணேஷ், திருநெல்வேலி.


 உலோக விந்தைகள்...


*இரும்பை விட நான்கு மடங்கு கனமானது ராடன் என்ற வாயு.

*செம்பு உலோகத்தைவிட அதிவேகமாக மின்சக்தி பாயும் உலோகம் வெள்ளி.

*தாமிரம், வெள்ளீயம் ஆகியவை வெண்கலம் தயாரிக்கப் பயன்படும் உலோகங்கள்.

*பித்தளை ஒரு கலப்பு உலோகம்.

*இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகிய உலோகங்கள் காந்தத்தால் ஈர்க்கப்படும்.

*இயற்கையில் கிடைக்கும் மிகக் கனமான உலோகமான யுரேனியம் அணுசக்தி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

*சூனியப் பிரதேசத்தில் பறவை இறகு மற்றும் இரும்பு இரண்டும் ஒரே வேகத்தில் விழும்.

*உலோகங்களில் மிகவும் லேசானது லித்தியம்.

*சோடியத்தின் சிறப்பு - இது தண்ணீரிலும் எரியும் தன்மை உடையது.
 -மாசு.செüந்தரராசன்,
 செட்டியார்பட்டி.


 கொடிகள்...


*கருப்புக் கொடி பறந்தால் அது கடற்கொள்ளைக்காரர்களின் கப்பல்.

*சிவப்புக் கொடி பறந்தால் அது புரட்சிக்காரர்களின் கப்பல்.

*வெள்ளைக் கொடி பறந்தால் அது எந்தக் கப்பலோடும் சமாதானம் செய்து கொள்ளும்.

*மஞ்சள் கொடி பறந்தால் அது தொற்றுநோயாளிகளின் கப்பல்.
 அதிசயப் பறவைகள்...

*இயற்கையின் அதிசயப் பிறவிகளில் மனிதனுக்கு அடுத்து பறவைகள்தான் இடம் பிடிக்கின்றன. அவைகளின் குடியேற்றம் (ஆங்கிலத்தில் மைக்ரேஷன் என்பார்கள்) இன்றளவும் புரியாத புதிர்தான்!

*அவற்றுக்குத் தேவையான உணவும் பாதுகாப்பான இடமும்தான் பறவைகள் வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முக்கிய காரணங்கள்.

*ஆனால் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் இனப்பெருக்கம் செய்வதற்கும் பறவைகள் குடியேற்றம் செய்கின்றன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


*ஆர்க்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா வரை எங்கும் நிற்காமல் பல நாட்கள் தொடர்ந்து அதாவது 15ஆயிரம் முதல் 20ஆயிரம் மைல்கள் வரை பறந்து செல்லும் கருப்பு இன வாப்ளர் (ஆப்ஹஸ்ரீந்ல்ர்ப்ப் ரஹழ்க்ஷப்ங்ழ்) என்ற பறவை இனம் இருக்கின்றது.

*ஆர்க்டிக் முனை (அழ்ஸ்ரீற்ண்ஸ்ரீ பங்ழ்ய்)என்ற பறவை 20ஆயிரம் கி.மீ. தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தது.

*கேரியர் பிஜியன்ஸ் (இஹழ்ங்ங்ழ் டண்ஞ்ங்ர்ய்ள்) என்ற புறா இனப் பறவை தனது இருப்பிடத்தைவிட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் தனது இருப்பிடத்துக்குத் திரும்பி வந்துவிடும் அளவுக்கு ஞாபகசக்தி கொண்டது.

*இடம் மாறும் பறவைகள் தங்களின் வழியை மட்டுமே நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவை என்று பறவையியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்காக விமானத்தில் பல இடங்களுக்கு மாறி மாறிப் பயணம் செய்து எங்கோ ஒரு மூலையில் விட்டாலும் இந்தப் பறவைகள் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்த அதிசயத்தை எப்படி விவரிப்பது? பறவைகள் குடியேற்றம் இன்றளவும் அவிழ்க்கப்படாத மர்மமாகவே இருக்கின்றது.
 -மகிழ்நன், சென்னை.


 முதன் முதலில்...


*உலகின் முதல் கிண்டர்கார்டன் (நர்சரி) பள்ளியைத் தொடங்கியவர் ஜெர்மனியைச் சேர்ந்த பிரெடரிக் புரோபெல் என்பவர்.

*உலகின் முதல் நவீன பல்கலைக் கழகம் இத்தாலி நாட்டில் உள்ள போலங்கா நகரில்தான் தொடங்கப்பட்டது.

*கலிபோர்னியா எரிமலைக்குத் தெற்கில் ஒரு சிறிய ஏரி இருக்கிறது. இங்குள்ள தண்ணீர் முழுவதும் கருப்பு மை (இங்க்) நிறத்தில் இருக்கும். இந்த நீரில் வெள்ளைத் துணியை முக்கினால் உடனே அது கருப்பு நிறமாகிவிடும்.
 -கே.முருகேஸ்வரி,
 கோவை.

No comments:

Post a Comment