Friday, October 19, 2012

அறிவியல் ஆயிரம்:தாவரப் பட்டுகள், தமிழுக்கு தகுதியில்லையா?

அறிவியல் ஆயிரம்

தாவரப் பட்டுகள்


வாழையில், அனைத்துப் பகுதிகளுமே பயன் உள்ளவை தான். வாழையின் நார் கூட, பூ கட்டப் பயன்படும் என்பர். ஆனால் நாம் பூ கட்டப் பயன்படுத்துவது, வாழை மரத்தில் உள்ள மேல் பட்டையை மட்டும் தான். வாழை மரத்தில் ”மார் 15 பட்டைகள் இருக்கும். இதில் ஒரு பட்டை மட்டும் பூ கட்டப் பயன்பட, மீதி பட்டைகள் வீணாகின்றன. இந்தப் பட்டையில் இருந்து தற்போது நார் எடுக்கப்பட்டு, அதில் இருந்து பட்டுப்பூச்சியின் பட்டு நூலுக்கு, இணையான பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது.இந்தப் பட்டு?நூலில், மற்ற பட்டுச் சேலைகளை போல வண்ணம் ஏற்ற முடியும். வாழை நாரில் இருந்து கையினால் காகிதம் செய்தனர். எனினும் காகிதத்திற்கு நல்ல விலை இல்லை. ஆனால் வாழைநாரில் பெறப்பட்ட பட்டுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு மரத்தில் இருந்து 2 பட்டுச்சேலைகளைப் பெறலாம்.

தகவல் சுரங்கம்

தமிழுக்கு தகுதியில்லையா?


சாகித்ய அகாடமி விருதுகள், தமிழுக்கு வழங்கப்படும் போது எப்போதும் சர்ச்சைகள் ஏற்படும். 1966ல் சாகித்ய அகாடமி விருதுக்கு, எந்தவொரு தமிழ் நூலும் தகுதியாக இல்லை என முடிவு செய்தனர்.அப்போது ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் நேரடியாக தலையிட்டு ம.பொ.சி., எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைப் பரிசீலனை செய்யலாமே என தேர்வுக் குழுவினரிடம் பரிந்துரை செய்தார்.வள்ளலார் கண்ட ஒருமைப்பாட்டு நூலுக்காக ம.பொ.சி.,க்கு விருது வழங்கப்பட்டது. கவிஞராகவே அறியப்பட்ட கண்ணதாசனுக்கு அவர் எழுதிய சேரமான் காதலி நாவலுக்குத்தான் விருது வழங்கப்பட்டது. "புரட்சிக்கவிஞர்' பாரதிதாசனுக்கு நாடகத்திற்கு தான் விருது வழங்கப்பட்டது. இதுவரை 5 தடவை சாகித்ய அகாடமி விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment