Friday, October 19, 2012

பாரதியார் சிந்தனைகள்

 
 
* முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.* ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது. [...]
* மனதில் உறுதியும், வாக்கில் இனிமையும் கலந்திருக்கட்டும். எண்ணத்தில் தூய்மை விளங்கட்டும். செயலில் மேன்மை மிளிரட்டும்.* மனம் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்டால் இந்த உலகில் பல்லாண்டு வாழலாம். * உண்மை எங்கும் ஓங்கட்டும். அறிவுக்கண் திறக்கட்டும். செய்யும் செயலில் ஆர்வம் பெருகட்டும். [...]
* ஒருநாளில் இத்தனை மணிநேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும் என்ற திட்டமிடுதலுடன் செயல்படுங்கள். * தர்மம், கருணை ஆகிய உயர்பண்புகளின் அடிப்படையில் பெறப்படும் வெற்றியே நிலைத்து நிற்கும்.* மனதில் எப்போதும் உறுதி வேண்டும். இனிமையான சொற்களையே பேச வேண்டும். நினைவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.* [...]
* எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுங்கள். அதனால் பிறவித்தளையில் இருந்து நீங்கி விடுதலை காண்பீர்கள்.* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம் குற்றமற்றவர்களிடம் மட்டும் தான் காணப்படும். தான் செய்த குற்றத்தை மறப்பதும், மறைப்பதும் மூடனின் செயல்.* குடும்பத்தில் ஒழுங்கில்லாவிட்டால் நாட்டிலும் [...]
* ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைகளால் மனதை நிரப்பி தியானம் செய்யுங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கும்.* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். * கோபத்தை வளர்த்துக் கொள்பவன் தன்னைத் தானே தீயால் சுட்டுக் கொள்கிறான். மனிதர்களுக்கு சாந்த [...]
* அணுவளவு கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரணநிலையை அடைந்து விட்டால் அவனே கடவுள்.* நம்முடைய மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் அப்படியே அழிந்து போவதில்லை. அவை விதைகளாக தங்கி விடுகின்றன.* தெய்வத்தின் தலையிலே வாழ்க்கைச் சுமையைப் போட்டு விட்டு கவலை, பயம் என்னும் நாய்களுக்கு [...]
* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. அஞ்சுபவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன். துன்பம் வரும்போது எவனொருவன் நடுங்காமல் துணிவுடன் எதிர்த்துப் போராடுகிறானோ அவனே ஞானி.* வாயால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாருக்கும் சுலபம் தான். ஆனால், சொன்ன வாக்கின்படி நடப்பது மிகவும் கடினமான [...]
* பிறரது குறைகளைப் பற்றி விவாதிப்பவன் பொழுதை வீணாகக் கழிக்கிறான். அவரவர் குறைகளை அவர்களே தெரிந்து கொள்வர்.* வேர்வை சிந்தும்படி நாள்தோறும் உழைக்கவேண்டும். நன்றாகப் பசித்த பின்னரே உணவு உண்ண வேண்டும். * மனிதன் தன்னைத்தானே செம்மைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே மகிழ்ச்சிக்குரிய வழி. தன்னைத் [...]
* பல தெய்வங்களை வணங்குவதைக் காட்டிலும் ஒரே தெய்வத்தை வணங்குவது நல்லது. இதனால், மனம் எளிதில் ஒருமைப்படும். பக்திக்கு இதுவே சுலபமான வழி.* உலகத்தை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடர் ஒருவரே! அவரே நம்மைச் சூழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான உயிர்களாகவும் இருக்கிறார்.* தன்னிடத்தில் உலகத்தையும், [...]
* உழைப்பில் தான் சுகம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் உழைக்கத் தயங்கமாட்டார்கள். உழைப்பை உயிரெனக் கொள்ளுங்கள்.* கல்வி கற்கவும், ஆன்மிக வாழ்வில் ஈடுபடவும் வயது வரம்பு கிடையாது. ஆர்வமிருந்தால் எந்த பருவத்திலும் மேற்கொள்ளலாம்.* மதிப்புடன் வாழ்பவனுக்கு நேரும் அவமானம் மரணதண்டனையை [...]

1 comment:

  1. பாரதியார் சிந்தனைகள்
    பிறரது குறைகளைப் பற்றி விவாதிப்பவன் பொழுதை வீணாகக் கழிக்கிறான்.....
    http://thiru-nandri.blogspot.in/2012/10/blog-post_4365.html

    ReplyDelete