Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, January 16, 2013

வரலாற்றில் இன்று Today in History 16 / 1

வரலாற்றில் இன்று   
Today in History   சனவரி 16

  1.     1970 - தன்னை இலிபியாவின் அதிபராக முடிசூட்டிக் கொண்டார் (கர்னல்) கடாபி.
  2.     1994 - ஈராக்கிற்கு எதிராக Operation Desert Storm நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை அங்கீகாரம் அளித்தது. குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டியடிக்கும் முயற்சி அது.
  3.     மாவீரன் கிட்டு கொலை.
  4.     தாய்லாந்து ஆசிரியர் நாள்
  5.     இசுரேல் கொடி நாள்
  6.     கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தைத் தொடங்கியது.(2003)
  7.     வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)
  8.     பாண்டிச்சேரியைப் பிரான்சிடம் இருந்து பிரிட்டிசார் கைப்பற்றினர்(1761)

Sunday, December 30, 2012

வரலாற்றில் இன்று Today in History 31/12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 31

  1.     1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
  2.     1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தைத் தொடங்கியது.
  3.     1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஃகியூகெனாட்டு எனப்படும் புரட்டசுதாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
  4.     1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளைச் செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
  5.     1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
  6.     1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்சீனியாவைக் கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில்  வெர்சீனியா இரண்டாகப் பிரிந்தது.
  7.     1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாகத் தாமசு எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது
  8.     1909 - மான்கட்டன் பாலம் திறக்கப்பட்டது.
  9.     1909 - வானொலியின் தந்தை என்று போற்றப்படும் மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  10.     1923 -இலண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
  11.     1944 - இரண்டாம் உலகப் போர்:  அங்கேரி  செருமனி மீது போரை அறிவித்தது.
  12.     1946 - அமெரிக்க அதிபர்  அரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
  13.     1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
  14.     1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
  15.     1984 -  இராசீவ் காந்தி இந்தியத் தலைமையமைச்சரானார்.
  16.     1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.
  17.     1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன
  18.     1994 - பீனிக்சு தீவுகள்,  லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
  19.     1999 - போரிசு யெல்ட்சின் இரசியாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
  20.     1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
  21.     1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
  22.     2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
  23.     2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாகக் கட்டி முடித்தது

Thursday, December 20, 2012

திருக்குறள் Thirukkural 172

வெஃகாமை

திருக்குறள் - Thirukkural

  
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
- (குறள் : 172)
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர் பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி அறன் அல்லாத செயல்களைச் செய்யார்.

Monday, December 17, 2012

வரலாற்றில் இன்று Today in History 18 / 12

வரலாற்றில் இன்று   
Today in History  திசம்பர் 18

  1.     சிறுபான்மையினர் உரிமை நாள்.
  2.     1271 - குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
  3.     1642 - ஏபெல் டாசுமான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
  4.     1787 - நியூ செர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3 ஆவது மாநிலமாக இணைந்தது.
  5.     1865 - அமெரிக்க அரசியல் சட்டத்தில் 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி அமெரிக்காவில் கொத்தடிமை முறை அடியோடு அழிக்கப்பட்டது.
  6.     1911 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
  7.     1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  8.     1935 - இலங்கை சமசமாசக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
  9.     1941 -  ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுநர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் ஆங்காங்கு மீது படையெடுத்தது.
  10.     1961 - இந்தோனீசியா டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
  11.     1966 - சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியசு கண்டுபிடிக்கப்பட்டது.
  12.     1973 - சோவியத் விண்கலம் சோயூசு 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  13.     1979 - கலிபோர்னியாவில் இசுடான்லி பாரெட் என்பவர் Sound Barrier எனப்படும் ஒலியை விஞ்சும் வேகத்தில் மணிக்கு 1190 கிலோ மீட்டல் வேகத்தில் தனது  ஏவூர்தி உந்துவை ஓட்டிச் சாதனை செய்தார்.
  14.     1987 - இலரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
  15.     1997 - எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது
  16.     1999 - ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அதிபர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலக் கண்ணை இழந்தார்.