Saturday, May 4, 2013

கடி 03.05.2013

கடி

* ஜோசியர்: வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு?
 வந்தவர்: ஒருமாதிரி சந்தோஷமா போய்கிட்டு இருக்கு...
 ஜோசியர்: கவலைப்படாதீங்க, அந்த தோஷத்துக்கு ஒரு பரிகாரம் பண்ணிடுவோம்!
 -சாமு,
 401, 4-வது தளம்,
 மாதவ நகர் காலனி,
 மியாபூர்,
 ஹைதராபாத் 500 050,
 ஆந்திரப் பிரதேசம்.

* ஒருவர்: என்னது கூட்டம் நடக்கிற ஹாலின் நடுவில் ஒரு பக்கெட் நிறையத் தண்ணீர் வச்சிருக்காங்க...!
 மற்றவர்: ஆமா, கூட்டத்தில சில முக்கிய பிரச்னைகளை அலசி ஆராயப் போறாங்களாம்..!
 -புரூஸ்லீ ஓவியாலயம்,
 நாட்டரசன்கோட்டை.

* ஆசிரியர்: கோவிந்தசாமி சார்! உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
 இவர்: என்னாச்சு சார்?
 ஆசிரியர்: விண்ணப்பத்துல தந்தையின் பெயர்ங்கிற இடத்துல "கேவிந்தசோமி'ன்னு எழுதி வச்சிருக்கான் சார்!
 -சீர்காழி ரேவதி, சென்னை.

* ஆசிரியர்: பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்லை சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைப் சுத்துமா?
 மாணவன்: எனக்குத் தலையச் சுத்துது சார்...
 -எஸ்.பவித்ரா, கொத்தூர்.

* டாக்டர்: உங்க எடை அதிகமாயிருக்கு, குறைக்கணும்...
 வந்தவர்: எடையைக் குறைக்க என்ன சாப்பிடணும்னு சொல்லுங்க டாக்டர்..!
 -டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

* ஆசிரியர்: மாணவர்களே, தங்கம் எங்கிருந்து கிடைக்குது?
 மாணவன்: மாமியார் வீட்டிலிருந்து சார்...
 -எஸ்.கோபு, ஆண்டிபட்டி (அஞ்சல்),
 வெட்டுக்காடு (வழி), செங்கம் தாலுகா,
 திருவண்ணாமலை 606 703.

No comments:

Post a Comment