Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

Saturday, May 18, 2013

சில நகைச்சுவைகள்

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்

வாழ்க்கையில் எதற்கெல்லாமோ சிரிக்கிறோம்.. ஒரு நகைச்சுவைக்காக சிரிக்க மாட்டோமா.. நிச்சயமா சிரிப்பீங்க.. நாங்க நம்புறோம்...
செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.
***
கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.
***
ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.
***
பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற...
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..
***
கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.
***
என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?
அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.
***

Wednesday, April 24, 2013

சிரிக்கத் தகுந்த செய்திகள்

 சிரிக்கத் தகுந்த செய்திகள்

சில இயற்கையான, அறிவியல் பூர்வமான விஷயங்களை நாம் கேள்விப் படும் போது ஆச்சரியம் அடைவோம். அதே சமயம் சிரிப்பும் வரும். அதுபோன்ற விஷயங்கள் பல உள்ளன.
அவற்றில் சில...
ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் பேஸ்ட்டை சந்தைப்படுத்துதல் என்பது மிகப்பெரிய சவாலாகும். ஏன் எனில், ஸ்பானிஷ் மொழியில், கோல் கேட் என்றால், போய் தூக்கில் தொங்கு என்று அர்த்தமாம்.
மற்ற எந்த ரக நாய்களையும் விட, ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றனவாம்.
உணவிலேயே அதிக நாள் கெடாத உணவு என்றால் அது தேன்தான். அதிலும், தேன் விரைவில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. அது எப்படித் தெரியுமா? தேனிக்கள் ஏற்கனவே ஒரு முறை தேனை ஜீரணம் செய்து விடுகின்றன என்பதால்தான்.
டைட்டானிக் கப்பலை உருவாக்க வெறும் 7 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், டைட்டானிக் படத்தை எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாம்.
ஒரு உணவைக் கண்டதும், இரட்டை தலைக் கொண்ட பாம்பின் இரண்டு தலைகளும் அதனை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும்.
தைவானில் உள்ள ஒரு நிறுவனம், கோதுமையைப் பயன்படுத்தி சாப்பிடும் தட்டுக்களை உற்பத்தி செய்கின்றன. எனவே நமக்கு பசி அதிகமாக இருந்தால் உணவுத் தட்டைக் கூட சாப்பிட்டுவிடலாம்.
விண்வெளியில் இருப்பவர்களால் கண்ணீர் விட்டு அழ முடியாது. ஏன் என்றால், புவிஈர்ப்பு சக்தி இருந்தால் தானே கண்ணீர் கண்ணில் இருந்து  வெளியே விழும்
சனிக் கிரகத்தைப் பிடித்து நம்மால் கடலில் போட முடிந்தால், அது மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும்.
பென்சிலால் எழுதியதை அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கும் முன்பு, ரொட்டி எனப்படும் பிரட் ரப்பராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் உற்சாகம் அளிக்க நாம் தேனீர் அருந்துவது உண்டு. அதை விட உற்சாகம் அளிக்கும் சக்தி ஆப்பிள் பழத்துக்கு உள்ளதாம்.

Saturday, January 5, 2013

கடி சனவரி 04, 2013

கடி

பாபு: நேற்றுதான் பிளாக் பெல்ட் வாங்கினியா? நீ கராத்தே சாம்பியன்னு சொல்லவே இல்லையே...
 கோபு: டிராயர் லூசா இருக்குன்னு பிளாக்பெல்ட் வாங்கினேன்!
 - எஸ்.பி.நவீன் பாரதி,
 திருநெல்வேலி.

 சிறுவன்: அப்பா செய்யிற தப்பு, பிள்ளையைப் பாதிக்கும்கிறது சரிதாம்பா...
 தந்தை: என்னடா... பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
 சிறுவன்: வீட்டுக் கணக்கை நீங்க தப்பா போட்டுக் கொடுத்ததுக்கு எனக்குல்ல உதை விழுகுது!
 - தஞ்சை சுபா

 ஏ சோமு: எங்க தொகுதி எம்.பி.க்கு மக்கள் கஷ்டப்படறதைப் பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது!
 ராமு: என்ன பண்ணுவார்?
 சோமு: வெளிநாட்டுக்கு டூர் போயிடுவார்!!
 - வெ.நரேந்திர குமார்,
 த/பெ. இரா. வெங்கடாசலம், 43, முடுக்குத் தெரு,
 தெற்கு பஜார்,
 கோவில்பட்டி } 628501.

 ""அழாதேடா கண்ணா, உன்னை அடிச்ச பையனை அடையாளம் காட்ட முடியுமா?''
 ""அவனுக்கு ஒரு காது இருக்காது. அது என் பாக்கெட்ல இருக்கு!''
 - புருஸ்லி ஓவியாலயம், சிவகங்கை.

 ராகுல்: காக்கைக்கும் அண்டங்காக்கைக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லு?
 கோகுல்: தெரியாதுடா, நீயே சொல்லு...
 ராகுல்: காக்கா கருப்பா பயங்கரமா இருக்கும்! அண்டங்காக்கா பயங்கரக் கடுப்பா இருக்கும்!!
 - ஜே. செய்யது அலி, திருவாரூர்.

 ஏ ""டாக்டர்... எனக்கு இரண்டு நாளா பயங்கரமான தலைவலி! பொறுக்கவே முடியலே...''
 ""நீங்க தலைவலியோட ஏன் பொறுக்கப் போறீங்க...?!''
 - வி. வாசுதேவன்,
 4/ ச6- வைத்தியர் வீதி,
 பீடம்பள்ளி அஞ்சல், ஒண்டிப்புதூர்- 641 016. கோவை மாவட்டம்.

Saturday, December 1, 2012

சிரி...சிரி... சிரி...சிரி

சிரி...சிரி... சிரி...சிரி

""கச்சேரிக்குத்தான் கூட்டம் வந்துடுச்சே...பாடகர் ஏன் பாடாமல் உட்கார்ந்து இருக்கிறார்?''
""மெளனராகம் பாடறாராம்!''

""சங்கீத வித்வானுக்கு கடன் கொடுத்தது தப்பாப் போச்சே''
""ஏன்...என்னாச்சு?''
""திருப்பிக் கேட்டா ஒரே பஞ்சப்பாட்டு பாடுறார்''
ஜீ.வி.சுபாஷ், சேலம்

""இப்படி சம்பந்தம் சம்பந்தமேயில்லாமல் பேசிக்கிட்டு போறாரே! யார் இவர்?''
""எங்க சம்பந்தி!''
மாயாண்டி சந்திரசேகரன்,
பாளையங்கோட்டை

""டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்?''
""பேசுவார்...ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத் திறந்துதான் பேசுவாரு''
ஜி.எஸ்.கார்த்திக்,
கோபிசெட்டிப்பாளையம்

""உங்க பேங்க்ல கால்நடைக்கு லோன் கொடுப்பீங்களா?''
""கண்டிப்பா!''
""அப்படின்னா நான் பக்கத்து ஊர்ல இருந்து கால்நடையா 18 கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கேன்; எனக்கு உடனே லோன் கொடுங்க''
எஸ்.எம்.ஷாஜஹான், மேலப்பாளையம்.

""உங்க ஆஃபீஸ்ல மரம் நடுவிழா கொண்டாடுனீங்களே என்ன மரம் நட்டீங்க?''
""தூங்கு மூஞ்சி மரம்''
""உங்க மனைவிக்குப் பட்டுப்புடவை வாங்கித் தந்தீங்களாமே, காஞ்சிப்பட்டா? ஆரணிப்பட்டா?''
""கடன் பட்டு''
ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

""ஆபரேசனுக்கு பின்னாடி கண் நல்லாத் தெரியும்னு டாக்டர் சொன்னார்''
""நல்லாத் தெரியுதுங்களா?''
""பின்னாடி எங்க தெரியுது. இப்பவும் முன்னாடிதான் தெரியுது''
தேனி முருகேசன்.

""பயில்வானுக்கு இரண்டு குழந்தைகளா?''
""ஆமாம். ஆஸ்திக்கு ஒண்ணு, குஸ்திக்கு ஒண்ணு''

""நீயும் உன் தம்பியும் எப்பவும் ரொட்டி சாப்பிடுறீங்களே''
""நாங்க ரொட்டி சகோதரர்கள்''

பேங்க் மேனேஜர்: என்னை ஏன்யா கட்டிப் பிடிக்கிறாய்?
வந்தவர்: உங்களைப் பிடிச்சா லோன் கிடைக்கும்னு சொன்னாங்க

வேலைக்காரன்: சாவியை என்னிடம் பொறுப்பாக வைத்திருக்கச் சொல்லி குடுத்தீங்களே...
வீட்டுக்காரர்: அதுக்கென்ன?
வேலைக்காரன்: இந்த சாவி எந்த பூட்டுக்கும் சேரலையே...
எஸ்.மோகன், அருப்புக்கோட்டை

""பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?''
""பொங்கலுக்கு லீவு விடுவாங்க; இட்லிக்கு லீவு விடமாட்டாங்க!''

""அவர் ஏன் ஒளிந்து ஒளிந்து மாவு அரைக்கிறார்?''
""நைஸா அரைச்சிட்டு வரச் சொன்னாங்களாம் அவரின் மனைவி''
எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி

""டாக்டர், நீங்க எழுதிக்கொடுத்த மருந்தில உடம்பு கொஞ்சங்கூட வத்தல. குண்டாவேதான் இருக்கு''
""அப்படியா? உங்களுக்கு எந்த ஊருன்னு சொன்னீங்க?''
""வத்தல குண்டு''
மு.பெ.எடிசன், விட்டுக்கட்டி

""தலைவருக்கு பொதுஅறிவு கம்மின்னு எப்படிச் சொல்ற?''
""ஃபேஸ்புக் எந்தக் கடையில கிடைக்குமுன்னு கேட்கிறாரு''
தாமரைநிலவன்,  திருத்துறைப்பூண்டி

""ராதாவுக்கு பத்து ரூபாய் கடன் கொடுத்தேன். அதில் ஒரு ரூபாய் திருப்பித் தந்துவிட்டாள்...ஒன்பது ரூபாய் தரவில்லை. அவளை என்ன சொல்லுவ''
""நயன்'தாரா''
ஜி.சாயி வினோத்,  கிருஷ்ணாபுரம்.

""இதுதான் சங்ககாலம்னு எப்படிச் சொல்றீங்க?''
""இந்தக் காலத்திலதான் எல்லாத்துக்கும் சங்கம் வச்சிருக்காங்களே, அதான்''
மு.பெரியசாமி, 
விட்டுகட்டி

""ஏம்பா! சர்வர் சரக்கு மாஸ்டர் ஸ்பெஷலா என்னப் போட்டிருக்கார்?''
""லீவ் போட்டு இருக்கார் சார்!''
குலசை நஜூமுதீன்

Thursday, December 15, 2011

Jokes from muthukamalam : சிரிக்க சிரிக்க - இளைய பெண்ணைக் கட்டித் தருவீர்களா?



சிரிக்க சிரிக்க-67
-தஞ்சை ஹேமலதா.
http://www.muthukamalam.com/picture/smilea.jpg
ஒருவன்: மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...
மற்றவன்: பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.
*******
கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு"

மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!
*******
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
*******
ஒருவன்: நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?
மற்றவன்: இடைவேளை நல்லா இருந்தது...!
*******
ஒருவன்: என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு..?

மற்றவன்: ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்!
http://www.muthukamalam.com/picture/mayil.jpg

joke: சிரிக்க சிரிக்க : எது ஈன்றது? எது குட்டி போட்டது?



சிரிக்க சிரிக்க-69
http://www.muthukamalam.com/picture/cow1.jpg
காளமேகப் புலவர் கும்பகோணத்தில் ஓர் அன்ன சத்திரத்திலே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் எதிரில் முன் குடுமிச் சோழியப் பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எதிரில் சாப்பிடும் அந்த சோழியப் பிராமணருக்கு சாப்பிடுவதில் வேகம் இருந்தது. அவர் குடுமி அவிழ்ந்து அன்னத்தில் விழுந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் சாப்பிடும் வேகத்தில் அந்தக் குடுமியை வேகமாகத் தள்ளினார்.

அந்தக் குடுமியில் ஒட்டியிருந்த அன்னம் காளமேகப் புலவரின் இலையில் வந்து விழுந்தது.

புலவருக்குக் கடும் கோபம். உடனே தொடங்கினார்.

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பெருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்

இங்கு புலவர் பெற்றாளே என்று பாடவில்லை. ஏ குரங்கே, நாயே என்றால் போட்டாளேஎன்றுதான் பாட வேண்டும்.

இங்கு ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும்.

பன்றியும் விலங்கு, நாயும் விலங்கு, மாடும் விலங்கு. எல்லாம் விலங்குதான். பசு கன்று ஈன்றது என்கிறோம். ஆனால் நாய் குட்டி போட்டது என்கிறோம். ஏன்?

ஒன்றே ஒன்று போட்டால் ஈன்றது. ஐந்து ஆறு என்றால் போட்டால் அது குட்டி போட்டது.

ரயிலில் ஒரு பெண் ஒரு குழந்தை வைத்திருந்தால் உன் குழந்தையா? என்பார்கள். அதே சமயம் நான்கைந்து இருந்தால் குட்டிகளா என்று கேட்பார்கள்.
-வாரியார் எழுதிய செஞ்சொல் உரைக்கோவைநூலிலிருந்து.
http://www.muthukamalam.com/picture/smile%20boy.jpg

Sunday, December 11, 2011

jokes: அவர்களிடம் நமக்கு எதற்கு வம்பு







இரண்டு குடி காரர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டு
பயங்கர சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.


எதற்கு.........


மேலே வானத்தில் ஒருப்பது சூரியனா ? சந்திரனா?
என்று கடும் வாக்கு வாதம்.


ஒருத்தன் சொல்கிறான் மேலே இருப்பது சூரியன் என்று!


மற்றவன் சொல்கிறான் மேலே இருப்பது சந்திரன் என்று


இதனால் இரண்டு பேருக்கும் கடும் வாக்கு வாதம்


அப்பொழுது அந்த வழியாக ஒருவர் வருகிறார் ,அதனைப்
பார்த்த ஒருவரும் சரி அவரிடமே நியாயம் கேட்போம்
என்று அவரை அருகில் அழைத்தார்கள்


அவரும் என்னவென்று கேட்க ..............


நீங்களே சொல்லுங்கள் மேலே இருப்பது சூரியனா?
அல்லது சந்திரனா ? என்று கேட்க


அவரும் மனதுக்குள் (அடப்பாவி பட்டப்பகலில் 
மேலே இருப்பது நிலாவா இல்லை சூரியனா என்று
கேட்கிறாங்களே ,அவர்களிடம் எதற்கு வம்பு என
நினைத்து . அவர்களிடம்


எனக்கு எப்பிடிங்க தெரியும் ,நான் வெளியூருங்க என்று
சொல்லி எஸ்கேப் ஆகிட்டார்.


இது எப்பிடி இருக்கு ?!!!!




எப்பவோ படித்தது ,மனதுக்கு பிடித்தது............






போகத்தின் அடையாளமாக - பெண்ணைப்
புல்லர்கள் பார்க்கின்ற தேனோ ?


போகின்ற வருகின்ற மங்கையர் செவிகூசப்
புலம்புதல் ஆண்மையென்பாரோ ?


இதைப் பொருமையாய்ப் பார்ப்பதே ஊரோ


தாய் தந்தை வாய்க்கு பயந்து -கொண்ட 
தாரத்தை விடுபவன் பேடி !


தாரத்தின் சொல் கேட்டு 
ஈன்றோரைக் கைவிட்டு 


தர்மம் அழிப்பவன் பாவி !- இந்த 
தடுமாற்றம் அற்றவன் ஞானி.








நன்றி



Friday, December 9, 2011

Jokes : சிரிப்பு வந்தால் சிரியுங்கள்


நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"
மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"


வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து
தருவாங்க.


ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல்
கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!



ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள்
இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."


டாக்டர் : 37'ம் நம்பர் படுக்கையில் இருந்த பேஷண்ட் எப்படியிருக்கிறார்?
நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..
டாக்டர் : ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?
நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப்
பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது
கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.

"எனக்கு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் பிடிக்கும்."
"உன் காதலருக்கு...?"
"அவர் அரசியல்வாதியாச்சே... பித்தலாட்டம்தான்!"

"அய்யாவுக்கு ஒண்ணும் ஆகலியே?"
"நல்லாதான் இருக்கார். நீ எதுக்குடி கேக்கறே முனியம்மா?"
"நானும் அவரும் ஜாலி டூர் போன கார் மரத்துல மோதற மாதிரி கனவு கண்டேன். அதான்!"


கண்ணம்மா:  ஏங்க.. ஒருநாள் ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப் படறாங்களே..  இந்த வாக்காளர் எல்லாம் பாவம்தானே..?
ராஜா: அடப் போம்மா.. அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப் படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!

முந்தா நாள் காய்கறி வாங்கப் போன ராஜாவைக் காணோம்ன்னு அடுத்த வீட்டுக் காரியிடம் கண்ணம்மா. வருத்தப் பட்டாங்க . அந்த ராட்சஸி சொன்னா..
இந்த மாதிரி கஷ்டம் வாழ்க்கையில எல்லாருக்கும் வரும்.. சரி.. கவலைப் படாதே..
என் ஃபிரிட்ஜ் ல காய்கறி இருக்கு.. எடுத்து தரேன் வா..!



இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான்
வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?



அமெரிக்கன் சொன்னான்.. எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!
ரஷ்யன் சொன்னான்.. எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?
இந்தியன் சொன்னான்.. பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன் சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?