Monday, July 1, 2013

மழைக்காலத்தில் தலை முடியைப் பேணும் வழிகள்

மழைக்காலத்தில் தலை முடியைப் பேணும் வழிகள்










பொதுவாக மழைக்காலத்தில் தலை முடிக்கு அதிக பராமரிப்பு அவசியமாகிறது.
ஏன் எனில் மழை காரணமாக தலை முடி ஈரமாகவும், அடிக்கடி அழுக்காகவும் ஆகலாம். எனவே, மழைக்காலத்தில் தலை முடிக்கு சில சிறப்பு கவனங்களை செய்ய வேண்டும்.
மழைக் காலங்களுக்கு என இருக்கும் சில சிறப்பு பேஸ்டுகளை வாங்கி தலைக்கு போடலாம்.
இது ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்களுக்கு சில இயற்கை முறைகள் கொடுக்கப்பட்டுள்ன.
உலர்ந்த தலை முடி இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் தலைக்குக் குளித்த பிறகு தயிரை தேய்த்துக் முடியைக் கழுவி விடலாம்.
பழுத்த வாழைப் பழத்தை நன்கு அரைத்து, அதனை தலையில் தடவினால், மழைக் காரணமாக முடி உலர்ந்து கொட்டுவது குறையும்.
எண்ணெய் பசை உள்ள தலைமுடிக்கு, எலுமிச்சை நல்லது. தலைக்கு குளித்த பிறகு, ஒரு பெரிய ஜக்கில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் தலை முடியை ஊற விட்டு அலசவும்.
முட்டையின் வெள்ளைக் கரு எண்ணெய் பசை உள்ள தலை முடிக்கு ஏற்றது. தலைக்கு குளித்த பிறகு வெள்ளைக் கருவை தலை முதல் முடியின் நுனி வரை தடவி சில நிமிடங்கள் ஊறுவிட்டு அலசினால் நன்றாக இருக்கும்.
சாதாரண தலை முடிக்கு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் கலந்த தண்ணீரில் தலை முடியை ஊறவிட்டு அலசலாம்.

No comments:

Post a Comment