Wednesday, April 24, 2013

சிரிக்கத் தகுந்த செய்திகள்

 சிரிக்கத் தகுந்த செய்திகள்

சில இயற்கையான, அறிவியல் பூர்வமான விஷயங்களை நாம் கேள்விப் படும் போது ஆச்சரியம் அடைவோம். அதே சமயம் சிரிப்பும் வரும். அதுபோன்ற விஷயங்கள் பல உள்ளன.
அவற்றில் சில...
ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் பேஸ்ட்டை சந்தைப்படுத்துதல் என்பது மிகப்பெரிய சவாலாகும். ஏன் எனில், ஸ்பானிஷ் மொழியில், கோல் கேட் என்றால், போய் தூக்கில் தொங்கு என்று அர்த்தமாம்.
மற்ற எந்த ரக நாய்களையும் விட, ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றனவாம்.
உணவிலேயே அதிக நாள் கெடாத உணவு என்றால் அது தேன்தான். அதிலும், தேன் விரைவில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. அது எப்படித் தெரியுமா? தேனிக்கள் ஏற்கனவே ஒரு முறை தேனை ஜீரணம் செய்து விடுகின்றன என்பதால்தான்.
டைட்டானிக் கப்பலை உருவாக்க வெறும் 7 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், டைட்டானிக் படத்தை எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாம்.
ஒரு உணவைக் கண்டதும், இரட்டை தலைக் கொண்ட பாம்பின் இரண்டு தலைகளும் அதனை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும்.
தைவானில் உள்ள ஒரு நிறுவனம், கோதுமையைப் பயன்படுத்தி சாப்பிடும் தட்டுக்களை உற்பத்தி செய்கின்றன. எனவே நமக்கு பசி அதிகமாக இருந்தால் உணவுத் தட்டைக் கூட சாப்பிட்டுவிடலாம்.
விண்வெளியில் இருப்பவர்களால் கண்ணீர் விட்டு அழ முடியாது. ஏன் என்றால், புவிஈர்ப்பு சக்தி இருந்தால் தானே கண்ணீர் கண்ணில் இருந்து  வெளியே விழும்
சனிக் கிரகத்தைப் பிடித்து நம்மால் கடலில் போட முடிந்தால், அது மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும்.
பென்சிலால் எழுதியதை அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கும் முன்பு, ரொட்டி எனப்படும் பிரட் ரப்பராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் உற்சாகம் அளிக்க நாம் தேனீர் அருந்துவது உண்டு. அதை விட உற்சாகம் அளிக்கும் சக்தி ஆப்பிள் பழத்துக்கு உள்ளதாம்.

No comments:

Post a Comment