Sunday, April 8, 2012

Two legged cow

இரண்டு கால் பசு

First Published : 01 Apr 2012 12:00:00 AM IST
 
 


காந்திஜி ஒரு சமயம் மக்கன்லால் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்குப் பெண் கொடுக்க விரும்பினார் ஒருவர். முதலில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்ட இளைஞன், திடீர் என்று மறுத்துவிட்டான். விவகாரம் காந்தியிடம் வந்தது.காந்தி அந்தப் பையனை அழைத்து விசாரித்தார். சரியாக மூன்று நாள்கள் காந்தி அப்பையனிடம் பல வகைகளில் பேசி, கடைசியில் திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். அப்பையன் வெளியே சென்றதும் காந்தியடிகள் பெண் வீட்டாரைப் பார்த்து,""இந்தப் பையனைத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைக்க மூன்று நாள்கள் ஆகிவிட்டன. நாளை இவன் உங்கள் பெண்ணோடு ஒழுங்காகக் குடித்தனம் நடத்தவில்லை என்றால் மீண்டும் ஒரு மூன்று நாளோ மூன்று மாதமோ அவனிடம் பேச வேண்டிய நிலை ஏற்படலாம். குழப்பம் மிகுந்த இப்பையனுக்கு உங்கள் பெண்ணைத் தர இனிமேலும் நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார்.பெண் வீட்டாரும் காந்தி சொல்வதும் நியாயம்தான், என்று வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறிவிட்டனர். பெண் வீட்டார் வெளியில் போனதும்,""அப்பாடா! காலமெல்லாம் பசு பாதுகாப்புக்காகப் போராடும் நான் இன்று ஒரு பசுவைக் காப்பாற்றிவிட்டேன்''என்றார். விஷயம் புரியாமல் அனைவரும் விழித்தனர். ""பெற்றோர்களின் பிடிவாதத்தால் விரும்பாத பையனுக்குக் கழுத்தை நீட்ட இருந்த பெண்ணான இரண்டு கால் பசுவைத்தான் சொன்னேன்'' என்றார் காந்தி. உடனே அந்த இடத்தில் இருந்தவர்கள் "குபீர்' சிரிப்பு சிரித்தனர்.

No comments:

Post a Comment