Monday, April 16, 2012

for your smile

டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு 

 http://mdusskadlsk.blogspot.in/2012/03/blog-post_9828.html





உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர்,
உங்களுக்கு தான்.

*************************************

நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா?

இல்ல சார்.

பீ.பி இருக்கா

இல்லை சார்.

அட, ஆச்சர்யமா இருக்கே!

பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்!


*************************************

நோயாளி - 10 வருடமா எனக்கு ஞாபகமறதி இருக்கு டாக்டர்

டாக்டர் - ஏன் இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.

நோயாளி - மறந்து போச்சு டாக்டர்.


*************************************

ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?

உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா.
உயிரோட பார்க்க முடியாது.

பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!

*************************************
"என்னங்க... உங்க அம்மா கூட எப்படி காலம் தள்ளுறதுன்னு தெரியல..!"
"அப்படி என்ன கொடுமை படுத்தினாங்க..?" "நான் என்ன சொன்னாலும்

ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டேன்கிறாங்க..!!
*************************************
என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை
என்ன பண்றா?
என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி
இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.
*************************************
உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று
கொண்டிருந்தாயா?
ஆமாம் அதுக்கு என்ன?
நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை?
டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார்.
*************************************
மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?
முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.
--
நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா வந்த கிளார்க்தான்!
அதிசயமாயிருக்கே!
காரணம். அவன்தான் அவ புருஷன்

No comments:

Post a Comment