மம்மி என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் போல சிலர் அம்மாவை மம்மி என்று அழைப்பார்கள் அல்லவா, அந்த மம்மிக்கும் இந்த மம்மிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இங்கு மம்மி என்று சொல்வது உயிரற்ற உடலைத்தான். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் சவம். இந்த மம்மிகள் எகிப்தில் உள்ளன.பிரமிடுகளின் நாடுதான் எகிப்து. அங்குள்ள மிகப் பெரிய பிரமிடுகளைப் பார்த்தால் நாம் வியந்துபோவோம். அவை கட்டப்படுவதற்கு எத்தனைக் காலம் ஆகியிருக்கும்! எத்தனை எத்தனை வேலையாட்கள் இதற்காக உழைத்திருப்பார்கள்! வருடக்கணக்காக பல்லாயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டவைதான் ஒவ்வொரு பிரமிடும். பிரமிடுகள் என்பது வெறும் கல்லறைகள்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.புராதன எகிப்தின் சக்கரவர்த்திகள்தான் பாரோக்கள். இவர்களின் சவங்களையும், மற்ற ராஜாக்களின் சவங்களையும் பிரமிடுகளில் பாதுகாத்து வைத்தார்கள். அந்த சவங்கள்தான் மம்மிகள்.ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிரமிடுகளில் அடக்கம் செய்யப்பட்ட மம்மிகள் இப்போதும் கெட்டுப்போகாமல் இருக்கின்றன. சவ உடல்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கான முறை புராதன எகிப்தியர்களுக்குத் தெரிந்திருந்தது. அழுகச் செய்கின்ற அணுக்களிலிருந்து அவர்கள் சவ உடலைக் காப்பாற்றினார்கள். அதற்காக அவர்கள் "ஆஸ்பல்ட்', "ப்ளாஸம்', எனும் பாதுகாக்கும் பொருள்களை (டழ்ங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ஸ்ங்) பிரயோகப்படுத்தினார்கள். இவை சில ரசாயனப்பொருட்களாகும்.சவ உடலிலிருந்து குடல் முதலிய உறுப்புகளை நீக்கிய பிறகுதான் பிரஸர்வேட்டிவ்களைப் பிரயோகிப்பார்கள். உடல் பக்குவப்படுவதுவரை இப்படிச் செய்வார்கள். பிறகு, எகிப்தின் காவல் தெய்வமான ஒஸீரஸின் முகமூடியை சவ உடலுக்கு அணிவிப்பார்கள். இப்படி பக்குவப்படுத்தப்பட்ட மம்மியை ஒரு மரப்பெட்டியில் வைப்பார்கள். அந்த மரப்பெட்டியை ஒரு கல்லறையில் பத்திரமாக அடக்கம் செய்வார்கள்.சவ உடலிலிருந்து எடுத்த குடல் முதலிய பொருட்களை ஒரு கற்பாத்திரத்தில் இட்டு இந்தக் கல்லறையிலேயே அடக்கம் செய்வார்கள். விரைவாக அணுச்சேர்க்கை நடக்கிற குடல்களைக் காப்பாற்றுவதற்கு ரசாயனப் பொருட்களால் இயலாது. அதனால்தான், குடலைத் தனியாகப் பிரிக்கிறார்கள். இப்படி மம்மியாக்கப்பட்ட சவ உடல்கள் எந்த மாற்றமும் இன்றி இப்போதும் நிலைத்திருக்கின்றன.சவ உடல்களை ஏன் இப்படிப் பாதுகாக்கிறார்கள்? மனிதன், மரணத்திற்குப் பின்னும் வாழ்வதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். சவ உடலை சற்றும் சேதமடையாமல் பாதுகாத்தால், அந்த உடலுக்குரியவருக்கு மேல் உலகத்தில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!ஆனால், எல்லா சவ உடல்களையும் இப்படிச் செய்ய மாட்டார்கள். சவ உடலை மம்மியாக மாற்ற நிறையச் செலவு செய்ய வேண்டிவரும். அதனால், ஏழைகளின் சவ உடல்கள் மம்மியாக மாற்றப்படுவதில்லை.சக்கரவர்த்திகளாலும் ராஜாக்களாலும், மேல் உலகில் சேவகர்களும் படைவீரர்களும் இல்லாமல் வாழ முடியுமா? இதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? இறந்த சேவகர்களின், படை வீரர்களின் உருவங்களை, மம்மியைப் பாதுகாத்த கல்லறைக்கருகில் செதுக்கி வைத்தார்கள். அப்படி அவர்களுக்கும் மேல் உலகில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!
Friday, October 22, 2010
Last Updated :
கொடிகள் ஏன் அடையாளச் சின்னங்களுடன் இருக்கின்றன?÷
தோற்றம் கப்பல் மாலுமிகளின் தொழிற் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. கடலில் கப்பல்களும், படகுகளும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்ள இந்தக் கொடிகள் உதவுகின்றன. போரிலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் கொடியின் பங்கு மிகவும் அதிகம். அரசியல் கட்சிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் கொடிகள் உள்ளதால், ஒரு கொடி எந்த கட்சியைக் குறிக்கிறது அல்லது எந்த அமைப்பைக் குறிக்கிறது என்று நாம் தொலைவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். ÷விளையாட்டுப் போட்டிகளிலும், பல பிரிவினரும், பல நாடுகளும் ஒன்று சேர்கிற சந்தர்ப்பங்களிலும், கொடிகளில் உள்ள சின்னங்கள் ஒவ்வொரு குழுவையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன
Last Updated :
1. கிடைக்கக்கூடிய பூக்களைக் கொண்டு பூங்கொத்து செய்வதுதான் மகிழ்ச்சி தரும் காரியம்.2. கடலைப் புகழ வேண்டும் என்றால் கரையில் நிற்க வேண்டும்.3. நாயுடன் மனிதன் நட்புகொள்வதற்குக் காரணம், அது பேசாமல் வாலை மட்டும் ஆட்டிக் கொண்டிருப்பதுதான்.4. அன்பை அறிந்த இதயத்திற்குத்தான், அது எவ்வளவு உயர்வானது என்று சொல்ல முடியும்.5. பொறுமை எனும் மரத்தின் வேர்கள் கசப்பானவைதான். ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை.6. வரலாற்றை உருவாக்குபவனுக்கு அதை எழுதுவதற்கு நேரமிருக்காது.7. வலிமை எஜமானனாகும்போது, நீதி வேலைக்காரனாகிறது.8. ரசிக்கத் தெரியாத மனிதனின் கண்கள் அழைக் காண்பதில்லை.9. உண்மையற்ற சமாதானம் ஆபத்தானது.10. ஒரு நல்ல நண்பன், நம்மிடம் உள்ள செல்வங்களைவிட மேலானவன்.
Labels:
bermuda triangle,
dinamani,
siruwar mani
Sunday, October 10, 2010
நாடுகளறிவோம்: கிரேக்கம்
Last Updated :
கிரேக்க நாடு ஐரோப்பியக் கண்டத்தில் உள்ளது. இது முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. கிழக்கில் துருக்கியும், மேற்கில் யவனக் கடலும், தெற்கில் பால்கன் மூவலத் தீவும், வடக்கில் அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.கிரேக்கம், மேற்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் பிறப்பிடம். இதன் தலை நகரம் ஏதென்ஸ். இந்த நாட்டின் ஆட்சி மொழி கிரேக்க மொழி. "நாடாளுமன்ற குடியரசு முறை அரசியல் அமைப்பு'தான் இங்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவராக "காரொலோஸ் பப்பூலியாஸ்' என்பவரும், பிரதமராக "ஜார்ஜ் பாபன்டிரியோ' என்பவரும் பதவியில் உள்ளனர்.கிரேக்க நாடு 1,31,990 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பினைக் கொண்டது. இந்த நாட்டில் 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11,306,183 பேர் வாழ்கிறார்கள்.இங்குள்ள "பார்த்தினன்' என்பது மிகப் பழமையான, பேரழகான கட்டடமாகும். இது 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏதென்ஸ் நகரின் காவல் தெய்வத்தின் பெயர் "கன்னி ஆதெனா'. இந்தத் தெய்வத்திற்கு நன்றி கூறும் விதமாகவே இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இது, ஏதென்ஸ் நகரின் அக்ரோபோலிஸில் அமைந்துள்ளது. பார்த்தினன் கட்டடம், கிரேக்க நாட்டின் மாபெரும் அரசியல்வாதி பெர்க்கிளிஸின் காலமான கி.மு. 438-இல் கட்டப்பட்டது.கி.பி.1821-ஆம் ஆண்டு, மார்ச் 25-ஆம் தேதி கிரேக்க நாடு, துருக்கிய பல்மத அரசான ஆட்டோமன் பேரரசிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக்கொண்டது.கிரேக்க நாட்டின் தேசிய விலங்கு டால்பின் மீன். பீனிக்ஸ் பறவையின் உருவமானது கிரேக்க நாட்டில் மிக முக்கியமாக மதிக்கப்படுகிறது. சில கிரேக்க நாணயங்களில் இந்தப் பறவையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.உலகின் முதல் நவீன கோடைகால ஒலிம்பிக் போட்டி, கிரேக்கத் தலைநகர் ஏதென்சில்தான் தொடங்கியது. இப்போட்டி கி.பி. 1896-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15-ஆம் தேதிவரை "பனாதினைக்கோ' மைதானத்தில் நடைபெற்றது.மாபெரும் தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ், அவரது மாணவர் பிளாட்டோ ஆகியோர் கிரேக்க நாட்டவர்கள். சாக்ரடீஸின் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாக பிளாட்டோ எழுதிய "குடியரசு',"அரசியல்' ஆகிய நூல்கள் உலகப் புகழ் பெற்றவை.கோதுமை, ஆலிவ், முள்ளங்கி, பீன்ஸ் ஆகியவை இந்த நாட்டின் முக்கிய விளைபொருட்கள். முக்கியத் தொழில் மீன்பிடித் தொழில். "மெüசாக்கா' என்பது கிரேக்கத்தின் பாரம்பரிய உணவு. இது, உருளைக்கிழங்கு, தக்காளிச் சாறு, மாட்டிறைச்சி ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. "செüலகி' என்பதும் புகழ்பெற்ற உணவுதான். இது, மாடு அல்லது கோழி இறைச்சி, மீன், எலுமிச்சைகொண்டு தயாரிக்கப்படுகிறது. பூண்டு சேர்த்த ரொட்டி, பாலாடைக்கட்டி, ஆலிவ் சேர்த்த காய்கறிக்கூட்டு போன்றவையும் விரும்பி உண்ணப்படுகின்றன.கிரேக்கப் பெண்களின் பாரம்பரிய ஆடை "கரகெüனா'. வரிசையாகத் தங்க நாணயங்கள் பொருத்தப்பட்ட இந்த ஆடையினை திருமணப்பெண்கள் விரும்பி அணிகிறார்கள். ஆண்களின் உடைகள் "பெüச்டநெள்ள', "சோலிஸ்' போன்றவை.புத்தாண்டு, கிறிஸ்துமஸ்,மே தினம், ஜூலை இசைவிழா ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.ய்
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2010 3:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/10/2010 3:42:00 PM
Subscribe to:
Posts (Atom)