Wednesday, May 5, 2010

வின்மணி சிந்தனை
நான் கஷ்டப்படும் போதெல்லாம் என் அருகில் நின்ற
தாயை நான் பணம் சம்பாதித்தபின், அன்பாக ஒரு வார்த்தை
பேசக்கூட நேரம் இல்லை என்று கூறினால் சத்தியமாக நான்
மனிதனே இல்லை. அவள் என்னிடம் எதிர்பார்ப்பது பணம்
அல்ல பாசம் தான்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.திட்டக் கமிஷனின் தலைவர் யார் ?
2.நெல்லிக்கனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பெயர் ?
3.மிகச்சிறிய விலங்கின் பெயர் என்ன ?
4.உப்பை பிரித்தால் கிடைப்பது என்ன ?
5.பண்டைய இந்தியாவில் கப்பற்ப்படை வைத்திருந்த
தென்னிந்திய மன்னர்கள் ?
6.மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ?
7.நத்தையின் கூடு எந்தப்பொருளால் ஆனது ?
8.நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் ?
9.இந்தியாவின் முதல் பெண் ஓட்டுனர் யார் ?
10.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

பதில்கள்:
1.பிரதமர்,2.திரிபலா, 3.அமீபா,4.சோடியம் குளோரின்
5.சேரர்கள் , சோழர்கள்,6.கிலோவாட்ஸ்,
7.கைட்டின் என்ற சுண்ணாம்பு, 8. புகைப்பிடிப்பது
9.வசந்த குமாரி,10.1986

இன்று மே 5 
பெயர் : முதலாம் நெப்போலியன்,
மறைந்த தேதி : மே 5, 1821
பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும்,
அரசியல் தலைவனாகவும் இருந்தவர். தற்கால
ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம்
குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில்
ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர்,
பிரெஞ்சுப் பேரரசர், இத்தாலியின் மன்னர், சுவிஸ்
கூட்டமைப்பின் இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின்
காப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment