Saturday, October 6, 2012

தலைவர்கள் நடத்திய இதழ்கள்

தலைவர்கள் நடத்திய பத்திரிகைகள்

First Published : 23 September 2012 12:00 AM IST
லெனின்
புராலிடேரியட், ஸ்பார்க்
---------------------------
கார்ல் மார்க்ஸ்
நைன்லாந்து கெசட்
---------------------------
மாஜினி
யங் இத்தாலி
---------------------------
ஹிட்லர்
வால்கிஷர்
---------------------------
முசோலினி
இல்-பாப்லோ டீ, இடாலியோ
---------------------------
காந்தியடிகள்
யங் இந்தியா, ஹரிஜன்
---------------------------
அன்னிபெசன்ட்
லிங்க், நியூ இந்தியா
---------------------------
பெரியார்
குடியரசு, விடுதலை
---------------------------
அண்ணா
திராவிட நாடு, காஞ்சி
---------------------------

அட அப்படியா!

அட அப்படியா!

First Published : 23 September 2012 12:00 AM IST
ஓய்வு இல்லை
ஜப்பானிய மொழியில் "உழைப்பு' என்ற அர்த்தத்தைத் தொனிக்கக் கூடிய சொற்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் "ஓய்வு' என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இன்று வரை இல்லை.
திருட்டு சாஸ்திரம்
வடமொழியிலுள்ள ஓர் ஓலைச்சுவடியின் பெயர் "செüர்ய சாஸ்திரம்'. இதில் திருடுவது எப்படி என்ற முறைகளும், திருடுவதற்கு முன் திருடர்கள் கடவுளை வேண்டிக் கொள்ளும் துதிப் பாடல்களும் உள்ளன.
பாக்கெட்டில் மூளை!
அறிஞர் ஆல்ஸ்டன் குள்ளமாக இருப்பதைப் பார்த்து வழக்கறிஞர் ஒருவர் கிண்டல் செய்தார். ""உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம்'' என்றார். ""அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்'' என்று பளிச்சென்று கூறினார் ஆல்ஸ்டன்.

மியாவ்... மியாவ்...!
பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை
பூனைகள் இனிப்பைத் தொடாது.
பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.
ஆமைக்குப் பற்கள் கிடையாது
முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில் 30 பற்களும் உண்டு
பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.

சூளுரையும் நடைமுறையும்
டாக்டர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூளுரைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. அவற்றில் சில...
ஏழை நோயாளிகளை அன்போடு நேசிப்பேன்.
நோயாளிக்கு தேவையற்ற மருந்துகளைக் கொடுக்க மாட்டேன்.
தேவையற்ற பரிசோதனைகளைச் செய்ய மாட்டேன்.
என்னால் நோயைக் குணப்படுத்த முடியாத பட்சத்தில் வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்ற நோயாளிகளுக்கு தைரியம் கொடுப்பேன்.
உலக மனிதர்களுக்காகச் சேவை செய்வதைத் தினமும் நினைக்க மறக்க மாட்டேன்.
சரியான கட்டணத்தை மட்டும் பெறுவேன்

Tuesday, September 25, 2012

LPG gas explotion: one dead | சமையல் எரிவாயு கசிவால், வீடு வெடித்துச்சிதறல்: தூக்கிவிசப்பட்ட பெண் பலி Dinamalar

LPG gas explotion: one dead | சமையல் எரிவாயு கசிவால், வீடு வெடித்து ச்சிதறல்: தூக்கிவிசப்பட்ட பெண் பலி Dinamalar

நல்ல மனமே சிறந்த வழிகாட்டி

 தினமலர் மே 08,2010,11:04  IST

* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.
* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும். தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
* அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.
* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.
* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி. பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.
* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள். அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.
-புத்தர்

Saturday, September 22, 2012

சிரிப்போம்! களிப்போம்!

சிரிக்கலாமே!

கொஞ்சம் சிரிக்கலாம்

விஜய், நடிப்பை துறந்து ஐ.ஏ.எஸ்,. அதிகாரியாகிறார்...!

 நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.

நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?
*********************************************
ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்தது
தப்பாப் போச்சு..!
-
ஏன்?
-
நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே போகும்போது
என் மனைவி ஏக்கப் பெருமூச்சு விடறா…!
*********************************************


கணவன் கிட்டே மனைவி சொன்னா.."

டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க..

அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க.."

கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. " நீயும்தான்..!"
*********************************************
 பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..

என்னடா சொல்ற?

பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.

*********************************************
 ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.

*********************************************

எங்க கிளினிக்ல இதுவரைக்கும் ஒரு பேஷன்ட்டையும்
டாக்டர் கைவிட்டதில்லை...

அப்படியா?

ஆமா...நர்ஸூங்கதான் நிறைய பேரை கை விட்டிருக்காங்க..!

*********************************************
பேஸ்புக்கில் இருந்து தொகுத்தது....
படங்கள் கூகுலாண்டவர்...