Saturday, March 23, 2013

செ. மாதவனின் புதல்வி வெற்றிச்செல்வியைவாழ்த்துக

இந்த வாரம் கலாரசிகன்





இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் சென்றிருந்தபோது, நண்பர் ஒருவர் என்னை நியூயார்க்கின் புறநகர் குடியிருப்பு நகரங்களான கணக்டிகட்டுக்கும், நியூ ஜெர்ஸிக்கும் அழைத்துச் சென்றார். அங்கே நான் சென்ற வீடுகளிலுள்ள குழந்தைகள் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
நமது ஊரில், சுற்றிலும் தமிழ்ச் சூழலின் வளரும் குழந்தைகள் பலருக்கும் தமிழ் பேசவும் எழுதவும் தெரியாத நிலையில், முழுக்க முழுக்க ஆங்கிலச் சூழலில் வளரும் குழந்தைகள் எப்படி தமிழ் பேச, எழுத, படித்தனர் என்று கேட்டபோது, எனக்குக் கிடைத்த பதில் "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' தான் காரணம் என்பது.
அமெரிக்காவில் குடியேறிவிட்ட தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' ஒன்றை நிறுவி, அமெரிக்கா மற்றும் கனடாவில் தமிழ்ப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை நடத்துவது யார் என்று கேட்டபோது ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
அறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்டு அவரது அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த செ. மாதவனின் புதல்வி வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம்தான் கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் நிறுவனராக இந்தத் தமிழ்ப் பணியைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு மலர் ஒன்றில், குழந்தைகள் "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்' என்பதைத் தங்கள் கைப்படப் பதிவு செய்திருக்கிறார்கள்.
"என் சொந்த ஊருக்குப் போகும்போது அனைவருடனும் பேச தமிழ் கற்பது உதவும்' என்று வான்மதி விஷ்ணுவும், "நம் தமிழ்ப் பண்பாட்டை நன்கு புரிந்துகொள்ள நான் தமிழ்ப் பள்ளிக்கு செல்கிறேன்' என்று சங்கீதா அண்ணாமலையும், "இந்தியாவில், நான் தாத்தா பாட்டியுடன் தமிழ் பேசுவேன்' என்று கார்த்திக்கும், "தமிழ் எனது தாய்மொழி. அதனால் நான் தமிழ் படிக்கிறேன்' என்று ஸ்ரேயஸýம், "தமிழ் படிப்பது, எனது கலாசாரத்தை நினைவு படுத்துகிறது' என்று விஷாலும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்.
வெற்றிச் செல்வியைப் பாராட்டுவதா, அவரைத் தமிழ் பரப்பத் தூண்டிய அவரது தந்தை முன்னாள் அமைச்சர் செ. மாதவனுக்குத் தமிழுணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதா?
* * * *

No comments:

Post a Comment