Monday, March 18, 2013

நிறை நிலா (வெள்ளுவா) வராத மாதமும் உண்டு

நிறை நிலா (வெள்ளுவா) வராத மாதமும் உண்டு

நமது உலகத்தில் பல்வேறு அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. அவற்றை நாம் தெரிந்து கொண்டால், நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் இருக்கும் போது துணுக்காக சொல்லி உடன் இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்த பயன்படும். எனவே இதுபோன்ற துணுக்குகளைப் படிக்க எப்போதுமே ஆர்வம் அதிகம்.
சரி உங்களது ஆர்வத்தை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். இதோ உங்களுக்காக சில துணுக்குகள்..
மில்லியன் ஸீரோக்களைக் கொண்ட எண்ணை கூகுள் என்று அழைப்பார்கள். இப்போது புரிகிறதா.. கூகுளின் கீழ் உள்ள G000000000GLEன் அர்த்தம்.
டைட்டானிக் கப்பலை கட்டி முடிக்க வெறும் 7 மில்லியன் டாலர்களே செலவானது. ஆனால், அது பற்றி படம் எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.
யாராவது மூன்று பேர் ஒன்றாக அமர்ந்திருந்தால் அவர்களை மூன்று குரங்குகளுடன் ஒப்பிடுவோம். அந்த குரங்குகளின் பெயர் என்ன தெரியுமா.. மிசரு (தீயவற்றை பேசாதே), மிகசரு (தீயவற்றை கேட்காதே), மசரு (தீயவற்ற பேசாதே).
ஆங்கிலத்தில் ஒன் முதல் தவுசண்ட் வரை எழுதிப் பார்த்தால், அதில் தவுசண்ட் என்ற வார்த்தையில் தான் முதல் ஏ வைப் பாக்க முடியும்.
வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியில் உள்ள வளையங்கள், சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களில் இருக்கும். இந்த ஐந்து நிறங்களில் ஒரு நிறமாவது அனைத்து நாடுகளின் தேசியக் கொடியிலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்பது கருத்து.
பொதுவாக மிகப்பெரிய மாவீரர்களின் சிலைகள் குதிரையின் மீது அமர்ந்தவாறு இருக்கும். அவற்றில் ஒரு சில குதிரை, தனது முன்னங்கால்களை தூக்கியபடி நிற்பதாக இருக்கும். அப்படியானால், அந்த வீரன் போரில் உயிரிழந்தான் என்பதை குறிக்கும். ஒரு காலை மட்டுமே தூக்கியபடி குதிரை நின்றால், அந்த வீரன், போரில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாக அர்த்தமாகும். நான்கு கால்களையும் தரையில் ஊன்றி இருந்தால், இயற்கை மரணம் அடைந்ததாக அர்த்தமாகுமாம்.
மனிதனுக்கும் கோலாக் கரடிகளுக்கும் மட்டுமே கை ரேகைகள் இருக்கும்.
ஒரு மனிதன் சராசரியாக 2 வாரங்களை தன் வாழ்நாள் முழுவதும் டிராபிக் சிக்னல்களில் செலவிடுகிறான்.  இதே அமெரிக்காவில் வாழும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 6 மாதங்களை சிக்னல்கள் முன் செலவிடுகிறாராம்...
கொசுக்களுக்கு மற்ற எந்த நிறத்தை விடவும் நீல நிறம் தான் அதிகம் பிடிக்குமாம்.
1865ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இதுவரை பௌர்ணமியே வராத ஒரு மாதமாகும்.
ரேடார் டியூப்பை விஞ்ஞானி கடந்து சென்ற போது, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லேட் உருகிவிட்டதாம். இதை வைத்து கண்டுபிடிக்கப்பட்டது தான் மைக்ரோவேவ் அவன்.
1932ஆம் ஆண்டு குளிர் காலத்தின் போது நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உரைந்து ஐஸ்கட்டியாகிவிட்டதாம்.
உலகத்தில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக கோழிகளின் எண்ணிக்கை உள்ளதாம்.
ரப்பர் பேண்டுகளை பிரிட்ஜில் வைத்தால், அதிக நாட்களுக்கு இழுவைத் தன்மையோடு இருக்கும்.
தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்கவே முடியாது.
உணவில் தேன் மிகவும் எளிதாக ஜீரணமாகும் உணவாக உள்ளது. அது எதனால் என்றால், பூவில் இருந்து தேனை எடுக்கும் தேனீ ஏற்கனவே அதனை ஜீரணம் செய்து விடுவதால்தான். மேலும் கெட்டுப் போகாத ஒரே உணவு தேன் மட்டுமே.
இதுபோன்றவை இன்னும் தொடரும்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள்(2)

மிகவும் அவசியமும் தேவையானதும் ஆன தகவல்கள்.நல்ல முயற்சி .தொடரட்டும் இந்த பணி
2018 பிப்ரவரி கூட பௌர்ணமியே வராத ஒரு மாதமாகும். அது சரி. இரண்டு பௌர்ணமி வந்தால் அதை ப்ளூ மூன் என்கிறோம். பௌர்ணமியே வராவிட்டால் அதை எப்படி குறிப்பிடுவது?
 +++++++++++++++++++++++++++++
நீல நிலவிற்கு(blue  moon ) எதிர்ச்சொல் கருநிலவு (black  moon )என்பதாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

No comments:

Post a Comment