Showing posts with label வேடந்தாங்கல். Show all posts
Showing posts with label வேடந்தாங்கல். Show all posts

Tuesday, December 27, 2011

fealty of dog to kalaivaanar

இதுக்குப் பேர்தான் விசுவாசமா?(மகான்களின் வாழ்க்கையில்)



கலைவாணர் ஒரு பெரிய கிரெட்டேரியன் நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். அதற்க்கு'டிக்கி' என்று பெயர் வைத்தார். அது கலைவானரிடம் செல்லக் குழந்தைப் போலவே பழகியது.



ஒருமுறை கலைவாணரும், மதுரம் அம்மையாரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். கலைவாணர் தான் விரும்பிய சீட்டைப் போட முயன்றார். மதுரம் அவர் கையிலிருந்த அத்தனை சீட்டையும் பறித்து, தான் விரும்பிய சீட்டைப் போட முயன்றார்.

தன் எஜமானன் கையிலிருந்த சீட்டுகள் பறிக்கப்படுவதை அறிந்த "டிக்கி" கோபத்துடன் மதுரம் அம்மையாரின் கன்னத்தை முட்டுவாயோடு சேர்த்துக் கவ்வியது. மதுரம் அலறினார்.

"மதுரம்..அசையாதே..சதை போயிடும்.." என்ற கலைவாணர் இரண்டு கைகளாலும் பிடித்து நாயின் வாயைப் பிளந்து மதுரத்தின் கன்னத்தை மீட்டார்.

கலைவாணர் கோவையில் கைதான பின்னர், தன் எஜமானரைப் பிரிந்த "டிக்கி' ஒழுங்காக சாப்பிட வில்லை. ரேடியோவில் தன் எஜமானரின் குரலைக் கேட்டால் சுறுசுறுப்படையும். எனவே அவரது பாடல்களைப் போட்டுக் காட்டி "டிக்கியை" சாப்பிட வைத்தார்கள்.

ஆனால் தன்னை ஏமாற்றி சாப்பிட வைக்கிறார்கள் என்பதையும் சில நாட்களில் "டிக்கி" உணர்ந்து கொண்டது. அதிலிருந்து அது சாப்பிட மறுத்தது. பட்டினி கிடந்தே சில நாட்களில் தன் உயிரையும் விட்டது.

Please dont come to the marriage- request by Bharathy Dasan: திருமணத்திற்கு வராதீர்கள்...

திருமணத்திற்கு வராதீர்கள்... (மகான்களின் வாழ்க்கையில்)



புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கையைத் தன் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் அனுப்பினார்.

திருமணத்திற்கு அவசியம் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் கலைவாணர் ஏன்.எஸ் கிருஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப்பிக் கூடவே ஒரு வித்தியாசமான கடிதத்தையும் இணைத்திருந்தனர்.

அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமணப் பத்திரிக்கையை அனுப்பியுள்ளேன். தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருமணம் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறுகிறது. இங்கு நீங்கள் வந்தால் சுற்று வட்டார மக்களும், பாண்டிச்சேரி மக்களும் கூடிவிடுவார்கள். அத்துணைப் பேருக்கும் வேண்டிய வசதிகளை என்னால் செய்து கொடுக்க இயலாது.

கூட்டத்தை சமாளிப்பது திருமண நேரத்தில் சிரமமாகிவிடும். எனவே தயவு செய்து தங்களது வாழ்த்தை மட்டும் அனுப்பி வைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

இந்த துணிச்சல் பாரதிதாசனைத் தவிர வேறு யாருக்கு வரும்?