Showing posts with label வாகை. Show all posts
Showing posts with label வாகை. Show all posts

Friday, December 2, 2011

Lodge: விடுதி


விடுதி

மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.”சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,”என்றார் அவர்.மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,”குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?”குரு கேட்டார்,”மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?”மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று கேட்டார்.மன்னனும்,”அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,”என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?”அரசன் சொன்னான்,”என் மகன்,அதன் பின் என் பேரன்.”குரு,”ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?”என்று கேட்டார்.

new year greeting : joke: புத்தாண்டு வாழ்த்து


புத்தாண்டு வாழ்த்து

சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,”எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,”என்று கத்தினான்.உடனே ஒருவன் கேட்டான்,”ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்?புத்தாண்டு பிறந்து இருபது நாட்கள் ஆகி விட்டனவே!”குடிகாரனுக்கு ஒரே குழப்பம்.பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான்,”ஐயையோஇதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!”
**********
கல்லூரியில் படிக்கும் பையன் தந்தைக்குக் கடிதம் எழுதினான்,”அன்புள்ள தந்தைக்கு,உங்களிடம் இருந்து செய்தி வந்து நீண்ட நாட்களாகி விட்டன.உடனடியாக ஒரு செக் அனுப்பினால் நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வேன் அல்லவா?”
**********
ஒரு கடையில் சேலை திருடிய குற்றத்திற்காக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி கூறினார்,”இதே குற்றத்திற்காக முன் ஒரு முறை தண்டனை பெற்றிருக்கிறாயே?மீண்டும் அதே தவறை செய்யலாமா?”திருடன் சொன்னான்,”என் மனைவி முதலில் திருடிய சேலை கிழிந்து விட்டது என்று கூறினாள்.அவளும் எவ்வளவு நாள் தான் கிழிந்த சேலையை உடுத்துவாள்?”
**********
ஒரு கூட்டத்தில் பெண்கள் பகுதியில் ஒரே அரட்டை.பேச்சாளருக்கு அது இடையூறாயிருந்தது.”அமைதி,அமைதி,”என்று சொல்லியும் சத்தம் நின்றபாடில்லை.அப்போது பேச்சாளர்,”பெண்மணிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்,”என்றார்.உடனே கூச்சல் நின்றது.
You might also like:

Rental house:வாடகை வீடு


வாடகை வீடு

ஒரு இளைஞன் இரு ஏரிக்கரை வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர் உதவி கேட்டு அலறவே இளைஞனும் உடனே நீரில் குதித்து அவரைதூக்கினான். அந்த ஆளுக்கு நினைவு இருந்தது.இளைஞன் நீந்திக் கொண்டே அவர் குடியிருப்பது ,சொந்த வீடா வாடகி வீடா என்று கேட்டான்.அவரும் வாடகை வீட்டில்குடியிருப்பதாகச் சொன்னார்.அவருடைய வீட்டு முகவரி கேட்டான்.அவரும் சொன்னார்.உடனே இளைஞன் அவரை அப்படியே நீரில் விட்டுவிட்டு தான் மட்டும் கரைக்கு நீந்தி வந்து அவர் சொன்ன முகவரிக்கு ஓடினான்.அந்த வீட்டின் சொந்தக்காரரை அணுகி,”ஐயா,உங்கள் வீட்டில் குடியிருந்தவர் ஏரியில் மூழ்கி விட்டார்.எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கொடுப்பீர்களா?”வீட்டின் உரிமையாளர் சொன்னார்,”அடப்பாவமே,கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா?இப்போதுதான் அவரைத் தண்ணீரில் தள்ளிவிட்டவர் வந்து வாடகைக்கு வீட்டைப் பிடித்து விட்டார்.”

Death: Jen: மரணம்


மரணம்

ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,”குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?”ஞானி சொன்னார்,”பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின.இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?”
You might also like:

general knowledge infromaions: பொது அறிவுச் செய்திகள்





உலகின் அனைத்து கண்டங்களின் தென்பகுதி குறுகலாகவும் , வடபகுதி அகலமாகவும் இருக்கிறது

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு 8-வது வாரத்தில் கைவிரல்கள் தோன்றி அதில் ரேகைகளும் பதிய ஆரம்பித்துவிடும், அதன் பின் இறக்கும் வரை எந்த ஒரு மனிதனுக்கும் மாறுவதில்லை

அமெரிக்க சட்டசபை கட்டிடத்தில் ஆண்டின் நாட்களை குறிப்பிடும் வகையில் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது 

மகாத்மா காந்தியை ‘காந்தியடிகள்‘ என்று முதன்முதலில் அழைத்தவர் திரு.வி. கல்யாணசுந்தரனார்

சூரியக் கதிர்கள் கடலுக்குள் 350 அடி வரை செல்லும்

மழையை அளக்க ‘புளூவியோ மீட்டர்‘ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது

‘போப்‘ என்ற சொல் ‘பாபா‘ என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும்

கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நம் நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது

50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் — மூங்கில்

நின்றுகொண்டே உறங்கும் விலங்கு — குதிரை

இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் — செரி