Showing posts with label தினஇதழ். Show all posts
Showing posts with label தினஇதழ். Show all posts

Tuesday, September 3, 2013

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள்


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
காய்கறிகளின்  மருத்துவ  குணங்கள்

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள்

நாம்அன்றாடம் (விலையைப் பார்க்காமல்!) காய்கறிக் கடைகளில் பார்க்கும் வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய்,பாகற்காய், சேப்பங்கிழங்கு, பீட்ரூட், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், குடைமிளகாய், சௌசௌ, அவரைக்காய், கேரட், கொத்தவரங்காய் மற்றும் பிஞ்சு கத்தரிக்காய் ஆகியவற்றின் மருத்துவகுணங்களையும் பார்ப்போமா..?
வாழைப்பூ:
வாழைப்பூவின் ஒவ்வொரு இதழிலும் நமக்கு இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவைநமக்கு ரத்தச் சோகையை வராமல் தடுத்து, நம் உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
வாழைத்தண்டு:
வாழைத்தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. அவை நம் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், ரத்தத்தில் சேர்ந்துள்ள தேவையற்ற அசுத்த நீரையும் பிரித்தெடுக்கும். நம் சிறுநீரகத்தின்செயல்பாடுகளையும் சீராக்குவதோடு, சிறுநீரக கல் அடைப்பையும் தடுக்கும்.
வாழைக்காய்:
வாழைக்காயில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை வாயுவை அதிகம் தூண்டும் குணமுள்ளதால், இவற்றை சமைக்கும்போது அதிகளவில் பூண்டையும் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை தீராத மலச்சிக்கலையும் தீர்க்கவல்லது.
பாகற்காய்:
பாகற்காயில் ஏராளமான வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நமக்கு நன்குபசியைத் தூண்டும். மேலும், நம் உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.
சேப்பங்கிழங்கு:
சேப்பக்கிழங்கில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இவை நம் எலும்புகளையும் பற்களையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
பீட்ரூட்:
பீட்ரூட்எந்தளவுக்கு சிவந்து காணப்படுகிறதோ, அதே அளவு கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை மலச்சிக்கலைப் போக்குவதுடன், ரத்த சோகையையும் சரிப்படுத்துகிறது.
வெண்டைக்காய்:
வெண்டைக்காயில்மிருதுவான தன்மைக்கேற்ப போலிக் அமிலம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளும் நிறைந்துள்ளன. அவை நம் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதோடு. நமக்கு நன்கு பசியையும் உண்டாக்கும். மேலும் நம்மிடம் உள்ள மலச்சிக்கலையும் போக்கும்.
கோவைக்காய்:
கோவைக்காய்பார்க்க சிறிதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள்நிறைந்துள்ளன. இவை நம்மிடம் உள்ள வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் மூலநோயின் தாக்குதல் போன்றவற்றையும் அறவேநீக்கும்.
முருங்கைக்காய்:
முருங்கைக்காய் எந்தளவுக்கு நீண்டுள்ளதோ, அதே அளவு வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிகளவு உதிரப்போக்கைத் தடுக்கும். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் வருவதுபோல, முருங்கைக்காயில் பல அயிட்டங்கள் செய்து சாப்பிட்டால், ஆண்களுக்கு விந்து உற்பத்தியையும் பெருக்கும்.
சுண்டைக்காய்:
‘ மூர்த்திசிறிதானாலும் கீர்த்தி பெரிது ‘ என்பதைப் போல, சுண்டைக்காய் சிறிதானாலும் அதில் உள்ள புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவற்றால், அதன் கீர்த்தி உயரே உள்ளது. நம் உணவில் அடிக்கடி சுண்டைக்காயைச் சேர்த்து வந்தால், நம்வயிற்றில் உள்ள அனைத்து புழுக்களையும் கொல்லக்கூடிய சக்திவாய்ந்தது. நம் உடல் வளர்ச்சியையும் அதிகளவில் தூண்டும்.
சுரைக்காய்:
சுரைக்காய்எந்தளவு குண்டாக உள்ளதோ, அந்தளவுக்கு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை நம் உடல் சோர்வை நீக்குவதுடன், நம் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
குடைமிளகாய்:
கொக்கிபோன்ற கொம்பு உடைய குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அவை நமக்கு அஜீரணக் கோளாறை நீக்கி, செரிமான சக்தியை அதிகரிக்கத் தூண்டும்.
செளசௌ:
பார்ப்பதற்குமெல்லிய முட்களுடன் சௌசௌ என்றிருந்தாலும், இவற்றில் கால்சியம், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நம்பற்களுக்கும் எலும்புகளுக்கும் உறுதியைக் கொடுக்கும்.

நள்ளிரவுப் பாடகன்


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / நள்ளிரவுப் பாடகன்
நள்ளிரவுப்  பாடகன்

நள்ளிரவுப் பாடகன்

நாம் எப்படி இரவில் தூங்கி பகலில் விழித்திருக்கிறோமோ அது போல்சில உயிரினங்கள் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் வித்தியாசமான ஜந்துக்களும் இருக்கத் தான்செய்கின்றன (மறுபடியும் ஐடி, பிபிஓ க்காரர்களை சொல்லலிங்க). நமக்குத் தெரிந்த சில ஆந்தை, வௌவால் போன்றவை. இதே போன்ற ஒரு பறவையை நீங்கள் நள்ளிரவில் உலகிலேயேஅடர்ந்த காடான அமேசான் காடுகளுக்குப் போகும்போது பார்க்கலாம். (நடு ராத்திரிக்கு நான் ஏன்யா அங்க போறேன் என்று எல்லாம் கேட்கக் கூடாது).
அந்த பறவையின் பெயர் பூடோ. சில வகைப் பூடோவை இரவுக் குயில் என்றுஅழைக்கிறார்கள் ஆந்தை மாதிரியான அளவீடுகளில் ஒலி எழுப்பினாலும் அந்த ஒலி ஆந்தை அளவுக்கு அச்சத்தைத் தருவதில்லை, அது ஒரு பெரிய விசில் போல் இருக்கும்(கிட்ட தட்ட நம்மஊர் கூர்க்கா ஊதுவது மாதிரி ). அனால் பெரிய வால் பூடோ என்கிற வகை எழுப்பும் ஒலி மயிர் கூச்செறியும் அளவுக்கு பயத்தை ஏற்படுத்தும். இவற்றின் உடல் மரப் பட்டையைப் போல்இருப்பதால் இவற்றை எளிதாக அடையாளம் காணமுடியாது. உடைந்து தொங்கும் ஒரு மரக்கட்டை போல தான் இவை இருக்கும். இவற்றின் அலகு சிறியது என்றாலும் இவற்றின் வாய் அதாவது அலகை விரிக்கும் அளவு அதிகம் அதனால் இது எளிதாக பூச்சிகளைப் பிடித்து உண்டு விடும், எல்லா இரவுப் பூச்சிகளையும் இது உண்ணும் என்றாலும் இவற்றின் விருப்ப உணவு அந்துப் பூச்சி, விட்டில்ஆகியவை.
முழு நிலவு வரும் நாளில் குஷியினால் இவற்றின் ஒலிஅதிகமாகவும் நீண்டதாகவும் இருக்கும். இதற்கு ஒருசுவாரஸ்யமான தேவதைக் கதை கூட சொல்லப்படுகிறது. ஒருகாலத்தில் நிலவில் வசித்த தேவதை ஒன்றுதான் சாபத்தால் பூடோவாகி பூமியில் இருக்கிறது. மீண்டும் தனது பழைய வீடான நிலவைப் பார்த்ததும் அழுது ஒலி எழுப்புகிறது என்று போகிறதுஅந்த கதை.இருபத்தி ஒன்றில் இருந்து ஐம்பத்தி எட்டு சென்டிமீட்டர் வரை நீளம் உடைய பூடோவை மனிதர்களால் அவ்வளவு சுலபமாக பார்த்துவிட முடியாது. அதனால் தான் இன்னும் அழிவுப் பாதைக்குப் போகாமல் இருக்கிறதோ என்னவோ…

Saturday, August 10, 2013

இழுப்பை விரட்டும் மிளகு


தினஇதழ் Home / அபூர்வ தகவல்கள் / இழுப்பை விரட்டும்
இழுப்பை விரட்டும்

இழுப்பை விரட்டும் மிளகு

மிளகு, மலை நாடுகளில் பயிராகும் ஒருவகை கொடி. இது மரங்களைச் சுற்றி ஏறி அடர்த்தியாய் வளரும். இதன் பழத்துக்கு மிளகு என்று பெயர். இந்த பழத்தின் பழுத்த தோல் உதிர்ந்தால் அதை வெள்ளை மிளகு என்பர். எந்திரத்தின் மூலம் மிளகுத் தோலை உரித்து அதை வெள்ளை மிளகு என்போரும் உண்டு.பச்சை மிளகு குன்மம், வாயு, சுவையின்மை, பக்கவாதம், ரத்த குன்மம், செரியாமை, காமாலை முதலியவற்றை நீக்கும். காய்ந்த மிளகை குளிர் ஜிரம், வாயு நீக்கம், வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற உபாதைகளுக்கும் வைத்தியர்கள் பயன்படுத்துவார்கள்.இதன் இலையும் மருத்துவ குணமுடையதே! மிளகுத் தூளை கஷாயமிட்டு அருந்த தொண்டை கம்மல், தொண்டை செருமல் நீங்கும்.
மிளகு தைலத்தினால் நாட்பட்ட வலி, நோய்கள், தலைக்கனம், செவிடு போகும், தெளிவு உண்டாகும். மேலும் இத் தைலத்தைக் கொண்டு தலைமுழுகி வர சோபை, பாண்டு, இருமல், நீர்க்கோவை தலைவலி, பலவகை தினவு சுரம் முதலியவை நீங்கும்.சில வைத்தியர்கள் வாந்தி பேதி நிற்க மிளகுடன் பெருங்காயம், அபின் கலந்து கொடுப்பார்கள். இதற்கு கபாடமாத்திரை என்று பெயர். இது ‘இம்காப்ஸில்’ கிடைக்கிறது. இம்மாத்திரையை ஒரு மணிக்கு ஒருதரம் எச்.ஐ.வியில் பாதிக்கப்பட்டு பேதியாகும் வியாதியஸ்தர்களுக்கு கொடுக்கலாம். உடனே பேதியாவதும், வாந்தியும் நிற்கும்.மிளகுத்தூள், எருக்கம் வேர், பனைவெல்லம் தகுந்த அளவு சேர்த்தரைத்து தினை அளவு மாத்திரை செய்து தினம் ஒருவேளை சாப்பிட்டுவர இழுப்பு நோய் வராது.
அதைப்போலவே மிளகுத்தூள், வெங்காயம், உப்பு இவைகளை சேர்த்தரைத்து தலையில் காணும் புழுவெட்டிற்கு பூச முடி முளைக்கும்.சகாயமான விலையில் மிளகு கிடைக்கும் போது அதனை லேசாக இடித்து, அதனுடன் சம அளவு உணவு பொருளுக்கான ஆல்கஹாலை கலந்து சிறிது நேரம் ஊறவைத்து டிஸ்டிலேஷன் செய்தால் ஆல்கஹாலும், சுத்தமான மிளகு எண்ணெயும் பிரிந்துவிடும். மிளகு எண்ணெய்க்கு வெளிநாடுகளில் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. தொழில் முனைவேர் முயற்சிக்கலாம்.
மிளகு எண்ணெயின் மருத்துவ பயன் மிகப் பெரியது. அதனைக் கொண்டு மிட்டாய் தயாரிப்பு முதல் இருமல் மருந்து தயாரிப்பு வரை செய்யலாம்.நமது நாட்டை பொறுத்தவரை கேரளம் மிளகு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது. அவர்கள் நேரடியாக மிளகை ஏற்றுமதி செய்கிறார்கள். உலக நாட்டில் இலங்கை மிளகு உற்பத்தியில் முதலிடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த மிளகில் எண்ணெயின் அளவு அதிகம்.தொன்மையான சம்பார பொருளான மிளகை இன்னும் ஆய்வுகள் செய்தால் பல பொருட்கள் அதிலிருந்து கிடைக்கும்.

Thursday, August 8, 2013

பருக்களின் பகைவன் வெட்டி வேர்


Home / அபூர்வ த் தகவல்கள் / வெட்டிவேரு வாசம்… வெடலப்புள்ள நேசம்…
வெட்டிவேரு வாசம்… வெடலப்புள்ள நேசம்…

வெட்டிவேர் வாசம்…

 

 விடலைப்பிள்ளை நேசம்…

வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர். முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது. சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கிய கடுக்காய் – 1, இந்த இரண்டையும் முந்தினநாள் இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும்.ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.
இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவிபிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி, பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள்.வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், பழைய பருக்களால் உண்டான தழும்புகள் மறைந்துவிடும். சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது… வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை… இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் .
இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்குப் புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும்,செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது. சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சிலஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு வெட்டிவேரில் இருக்கிறது. பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – 50கிராம்… இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

உலங்கூர்திப்பூனை!


Home / அபூர்வ தகவல்கள் / உலங்கூர்திப்பூனை - புதியபரிதி
ஹெலிகாப்டர் பூனை புதியபரிதி

 எலிகாப்டர் பூனை -புதியபரிதி

அன்பு அதிகபட்சம் என்ன செய்யும்? ஒருவரை காக்கும், ஒருவரை வளர்க்கும், உயிருடன் இருக்கும் வரை தாங்கி நிற்கும். இறந்து விட்டால்? வேண்டியவர்களாக இருந்தால் மனப்பிறழ்வுக்கு கூட இட்டுச் செல்லும். அதுவே வளர்ப்பு பூனையாக இருந்தால்… டச்சு நாட்டைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் ஒரு இசைக்கலைஞர். இவர் ஆசையாக வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். வீட்டில் ஏதோ ஒரு வேலையில் ஜேம்ஸ் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆர்வில் என்ற அந்தப் பூனை வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டது.
அந்த நேரம் சாலையில் வந்து கொண்டிருந்த கார் பூனையின் மேல் ஏறிவிட சம்பவ இடத்திலேயே பூனை இறந்துவிட்டது.பூனை இறந்துகிடந்ததைப் பார்த்ததும், ஜேம்ஸ் கதறி, அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். பூனை இறந்த ஏக்கம் ஜேம்ஸால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், பூனையை அடக்கம் செய்யவும் இல்லை. ராத்திரி முழுவதும் கண் விழித்து ஒரு பைத்தியக்காரனைப் போல் ஜேம்ஸ், பூனையையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் திடீரென்று பொறி தட்டியது.
உடனடியாக பூனையின் குடல் பாகங்களை எல்லாம் எடுத்துவிட்டு, அதை சுத்தம் செய்து, அதில் பஞ்சுகளை வைத்து அடைத்து அதன் உடலை கட்டுமஸ்தாக்கி, அதில் ஹெலிகாப்டர் என்ஜின்களைப் பொருத்தி, கால்களில் இறக்கைகளை இணைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் ஹெலிகாப்டராக மாற்றிவிட்டார். இப்போது வீடு முழுக்க ஆர்வில் என்கிற பூனை பறந்துகொண்டு இருக்கிறது. இதைப் பார்த்து பலரும் தங்களது இறந்த பூனைகளை ஜேம்சிடம் கொண்டுவந்து அதே போல் செய்து தரக் கேட்கிறார்கள். என்ன கொடுமை சார் இது.

Wednesday, August 7, 2013

நோய் நீக்கும் பரங்கிக்காய் கொதி சாறு


தின இதழ் Home / அபூர்வ தகவல்கள் / பரங்கிக்காய் சூப்
பரங்கிக்காய் சூப்

பரங்கிக்காய் சூப்பு

மருத்துவ குணங்கள்:பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
தேவையான பொருள்கள்:
பரங்கிக்காய் = 1
துண்டுதக்காளி = 1
வெங்காயம் = 1
பூண்டு = 3
பல்மிளகுத்தூள் = 1
ஸ்பூன்பால் = அரை
கப்எண்ணெய் = 3
ஸ்பூன்உப்பு = தேவையான
அளவுகொத்தமல்லி = சிறிதளவு
செய்முறை:
பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள?வும்.பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.சூடான ஆரோக்கியமான ‘பரங்கிக்காய் சூப்’ தயார்.