Showing posts with label சிரி.. சிரி... Show all posts
Showing posts with label சிரி.. சிரி... Show all posts

Wednesday, October 9, 2013

சிரி.. சிரி.. செப்.28


""ஆடி வந்தாத்தான் உங்க கடையிலே  விலை குறைச்சு விப்பீங்களா?''
""இல்லையே... ஆடாம வந்தாலும், எங்க கடையிலே விலை குறைச்சுதானே விப்போம்?''

மனைவி: நம்ம கல்யாண நாள்
அதுவுமா ராமசாமி உருப்படவே மாட்டான்னு திட்டறீங்களே... யார் அது?
கணவன்: அவன்தான் என் தலையில உன்னைக் கட்டின திருமண புரோக்கர்.

""வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்களே... இவர் வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே மாட்டார் ''
""ஏன்?''
""போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு''
எஸ்.பொருநை பாலு,
திருநெல்வேலி.

""பாம்பு டான்ஸ் ஆடிய பெண்ணை ஏன் போலீஸ் கைது செஞ்சுட்டாங்க?''
""திடீர்னு பாம்பு சட்டையை
உரிச்சிடுச்சி''
த.கிருஷ்ணஜோதி,
சென்னை-21.

""குடை ரிப்பேர் செய்றவனுக்குப் பொண்ணைக் கொடுத்தது தப்பாப் போச்சு''
""என்ன ஆச்சு?''
""கம்பி நீட்டிட்டான்''
அ.கற்பூரபூபதி, சின்னமனூர்.

தாத்தா: எனக்கு வயசாயிடுச்சு... அதனால "பேக் பெயின்' வந்துடுச்சு. இந்த சின்ன வயசுல உனக்கும் "பேக் பெயின்'னு சொல்றீயே?
பேரன்: எனக்கு ஸ்கூல் "பேக் பெயின்' தாத்தா
சி.ரகுபதி, போளூர்.

""டாக்டர்... டாக்டர்... வேகமாக ஓடினால் மூச்சிரைக்குது''
""மெதுவா ஓடுங்களேன்''
""பிக்பாக்கெட் அடிச்சிட்டு
எப்பிடி மெதுவா ஓடுறது?''

""நேற்றைக்கு ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்துவிட்டது''
""என்ன நடந்தது?''
""குதிரைதான்''
சுகந்தாராம்,
சென்னை-59.